PAGE LOAD TIME

பட்டியல்...

வழிய வழியப் பிஞ்சுகளை ஏற்றி
வானத்தில் பறப்பதாக
வித்தை காட்டும்
ஆட்டோ ரிக்ஷாக்கள்

கட்டுப் பாடின்றி
தறிகெட்டு ஓடும்
பெருநகரத்து லாரிகள்

முறையான உரிமம்
இல்லா ஓட்டுநர்கள்
பராமரிப்பில்லாது பல்லிளிக்கும்
பள்ளி வேன்கள்

சிதிலமடைந்த வகுப்பறைகள்
தீப்பிடிக்கும்
கூரைக் கொட்டகைகள்
துருப்பிடித்த
வாயிற் கதவுகள்

கொலைகாரப் பட்டியலில்
சேர்ந்து விட்டன
மூடப்படாத
கழிவுநீர்த்  தொட்டிகளும்
ஆழ்துளைக் கிணறுகளும்.

24 மறுமொழிகள்::

சுந்தரா said...

படித்ததும் கவலைதான் வருகிறது
பிஞ்சுகளை நினைத்து!.

படமும் ரொம்பப் பொருத்தம்.

வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

:-(

சுல்தான் said...

ஆம்! இந்த
கொலைகார பட்டியலில்
இப்போது
மூடப்படாத
ஆழ்துளைக் கிணறுகள்

Madurai Saravanan said...

nalla karuththu. pataththudan kulanthaikalu parriya kavalaiyai samukaththukku vithaiththu videerkal. aanal ithu puriyumaa nam makkalukku. vaalththukkal.

தருமி said...

பொதுவாக குழந்தைகளோடு செல்லும் வண்டி ஓட்டுனர்கள் எல்லோருமே பொறுப்பு குறைவோடு வண்டி ஓட்டுவதாக என் அனுபவம்.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் அவசர உலக்த்தில் இன்னும் என்ன என்னவோ நடக்கப் போகின்றன - என்ன செய்வது ? பாவம் மழலைகள்

அமைதிச்சாரல் said...

கடைசி வரி கலங்க வைக்கிறது.

ஓலைக்குடிசை பள்ளிகளையும் இந்த லிஸ்டில் சேத்துக்கலாம். :-((

கண்மணி/kanmani said...

நன்றி சுந்தரா

நன்றி இயற்கை

கண்மணி/kanmani said...

நன்றிங்க சுல்தான் பாய்.

வேகமும் அலட்சியமும்தான் தருமி சார்.

வாங்க சீனா சார்.நாலு பிள்ளகள் உட்காரும் இடத்தி 8 பேர் உட்கார வைத்தாலும் பிள்ளைங்க கண்டுக்காது எனும் தைரியம்
பெற்றோருக்கும் பொறுப்பு வேனும்.

கண்மணி/kanmani said...

அமைதி!சேர்க்க நினைத்து விட்டதை நீங்க சொன்ன பிறகு சேர்த்தே விட்டேன்.

கண்மணி/kanmani said...

இன்னமும் முக்கியமான ஒன்றைச் சேர்க்க நினைத்து வீண் பிரச்சினை வரும் என்பதால் விட்டுட்டேன்.
தனிப்பதிவாகப் போட எண்ணம்.

தியாவின் பேனா said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

அமைதிச்சாரல் said...

தனிப்பதிவுக்கு வெயிட்டிங்.மறக்க முடியுமா கும்பகோணத்தை :-(((

நட்புடன் ஜமால் said...

கொலைக்கார பட்டியலில்

அரசியலர்களோடு துணையாக இதுவும் இணைந்தது

ராமலக்ஷ்மி said...

பட்டியல் நீண்டு கொண்டேதான் போகிறது:(!

அக்பர் said...

குழந்தைகளின் பாதுகாப்பை நினைக்கும் போது கவலையாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

சமூகப்பிரக்ஞையுள்ள கவிதை

கண்மணி/kanmani said...

நன்றி தியா

நன்றி ஜமால்

நன்றி அக்பர்

நன்றி ராமலஷ்மி

நன்றி அம்மிணி

ஹுஸைனம்மா said...

ஆமாங்க, ஆழ்துளைக் கிணறுகள்தான் புது வரவு. முதல்ல சென்னையில நடந்தப்போதான் இப்படியும் நடக்குமான்னு அறிஞ்சது. அப்புறம்பாத்தா, இதுவும் சர்வசாதாரணமா அங்கங்க நட்ந்துகிட்டுத்தான் இருக்குபோல. இதுக்குன்னு நாலஞ்சுபேர் மீட்புக் கருவிகளையும் கண்டுபிடிச்சதா செய்திகள் வருது. பயன்பட்டுச்சுன்னா மகிழ்ச்சி.

கண்மணி/kanmani said...

வாங்க ஹூஸைனம்மா சமீபத்துல வட இந்தியாவில் ஒரு குழந்தை செத்துடுச்சி.

மீட்பு கருவி கண்டு பிடிப்பதை விட ஆழ் துளைக் கிணறுகள் இருக்கும் பகுதிகளில் தகுந்த பாதுகாப்பும் எச்சரிக்கையும் இருந்தால் போதுமே.
பாதாள சாக்கடையே மூடுவதில்லை.கிணற்றை எங்கே மூடப் போறாங்க.

பேநா மூடி said...

படமும் கவிதயும் கணம்

SanjaiGandhi™ said...

எல்லாமே பெரும் கொடுமைகளின் பட்டியல்க்கா. :(

Chitra said...

இந்த கொடுமைகளை, அன்றாட நிகழ்வுகளாக ஏற்றுக்கொண்ட மக்கள் என்ன கருத்து சொல்ல போகிறார்கள்? :-(

கண்மணி/kanmani said...

வாங்க சித்ரா அவரவர் அவசரம் வேலை அவர்களுக்கு .அடுத்தவருக்கு நடக்கும் வரை செய்தியாகத்தான் பார்ப்பார்கள்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)