மொத்தப் பதிவுகளும் இங்கே

ரங்கோ(வ)லி....
















தொடர்ச்சியாக
சுழன்று அலைந்ததில்
கைகளும்
பலமணி நேரம்
குனிந்தே அமர்ந்ததில்
இடுப்புமாக
வலி தொடங்கியிருந்தது.
விரல்களின் பிரம்ம வித்தையில்
உயிர்த்தெழுந்த
தோகை மயில்களும்
பூத்துச் சிரித்த மலர்களும்
வண்ணங்களின் ஜாலமாய்
வடிவு பெற்று வந்ததில்
வலி மறந்து விட்டது.
ஆரவாரக் கூச்சலும்
அணிவகுத்த கூட்டமுமாக
சிறப்பு விருந்தினர்
உள்ளே போக
நிமிடங்களில்
மயில்கள் சிதைந்து
மலர்கள் கலைந்து
வர்ணத் தெறிப்பு மட்டுமே
வரவேற்ற வாசலில்.
வலிக்கத் தொடங்கியிருந்தது
மனது.

12 மறுமொழிகள்::

வசந்தமுல்லை said...

fantastic

வசந்தமுல்லை said...

ஐயையோ! இப்படி கவிதை எழுதி கலக்குறீங்களே !!!!!!!!!

Chitra said...

வலிக்கத் தொடங்கியிருந்தது
மனது. ........ கவிதை அருமை. அழகை ரசிக்கத் தெரியாத மனக்கண் குருடர்களின் செயல் வலிக்கத்தான் செய்யும்.

Sangkavi said...

//விரல்களின் பிரம்ம வித்தையில்
உயிர்தெழுந்த
தோகை மயில்களும்
பூத்துச் சிரித்த மலர்களும்
வண்ணங்களின் ஜாலமாய்
வடிவு பெற்று வந்ததில்
வலி மறந்து விட்டது.//

கவிதை கலக்கல்....

அழகான ஆழமான வரிகள்....

புலவன் புலிகேசி said...

:)

ராமலக்ஷ்மி said...

விரிந்த அழகுக் கோலத்தை ரசிக்கத் தெரியாவிட்டாலும் மிதிக்காமலாவது செல்லலாம். ஆனால் பெரும்பாலும் ரங்கோ’வ’லியாகத்தான் முடிகிறது.

நல்ல கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையா சொன்னீங்க..

கண்மணி/kanmani said...

நன்றி @வசந்தமுல்லை ரவி ஏதோ மனசுல தோணுவது எழுத்துக்களாய்...


நன்றி @ சித்ரா கொஞ்ச நேரமேனும் அந்த உழைப்புக்கு மதிப்பளித்தால் போதுமே

கண்மணி/kanmani said...

நன்றி சங்கவி

நன்றி புலிகேசி

கண்மணி/kanmani said...

நன்றி ராமலக்ஷ்மி நான் பார்த்தவரை பொது இடங்களில் போடப்படும் பெரும்பாலான ரங்கோலிகள் அலங்கோகலமாகி வலி தருகின்றன.

முத்துலக்ஷ்மி வருகைக்கு நன்றி :))

thenammailakshmanan said...

மயிலைப்பார்த்து மயங்கி விட்டேன் கண்மணி

கண்மணி/kanmani said...

அவ்வ்வ்வ் தேனம்மை மயில் மட்டும்தான் பிடிக்குதா?கவிதை?

Post a Comment