PAGE LOAD TIME

ஸ்வர மாதுரி........

zoom  n  see

ற்கனவே டிவியிலும் சினிமாவிலும் காஸ்ட்யூம்ஸ் டிரஸ்ஸஸ் பார்த்து நம்ம மக்களுக்கு காதுல புகை வரும்.வஸ்த்ர கலா,பரம்பரா,சாமுத்ரிகா ன்னு இன்னும் கொஞ்சம் வெறுப்பேறும்.
ராசுக்குட்டிப் படத்துல ஒரு லட்சரூபாய் புடவைன்னு தங்க சரிகையும் கற்களும் பதித்த புடவைஒன்றை ஐஸ்வர்யாவுக்கு பாக்யராஜ் குடுப்பாரு.ஒரு லட்சரூபாயில் அப்படியென்ன பட்டுப் புடவைன்னு அப்போ ரொம்ப யோசித்தது உண்டு.

சமீபத்துல தங்கத்துலயே ஜாக்கெட் ஒன்னு அறிமுகப் படுத்தினாங்க.செருப்பு முதக் கொண்டு தங்கத்துல போடும் போது இதெல்லாம் பெரிசில்லை.இப்பெல்லாம் டிசைனர் புடவைகளே 3000,5000 னு இருக்கு.அதையே லட்சரூபாய்ரேஞ்சுக்கு கட்டிக்கிறோம்.இதையெல்லாம் மிஞ்சி பாட்டுப் பாடும் புடவை ஒன்னு ஆந்திராவுல தயாரிச்சிருக்காங்களாம்.

இது பத்தின நகைச்சுவையான பதிவு ஒன்றை சித்ரா போட்டிருக்காங்க இங்கே  பாருங்க.எல்லளும் எகத்தாளமுமாக அவங்களே பிரிச்சி மேஞ்சிட்டதால புடவை பத்தி நானொன்னும் சொல்லப் போறதில்லை.

கூடிய விரைவில் டிவி வச்ச புடவைகளும் வந்துட்டா எங்கிருந்தாலும் இந்த அழுகாச்சி சீரியல்களை மிஸ் பண்ணாம பாத்திடலாம்.
அப்படியே லேப்டாப் போல பல்லுடாப் [pallu top]கண்டுபிடிச்சிட்டா இருந்த இடத்திலேருந்தே பதிவுகளும் போட்டுடலாம்.ரங்ஸ்களும் நம்ம முந்தானையைப் பிடிச்சிக்கிட்டே வருவாங்கல்ல:))))))))
கிரியேட்டிவிடி இருக்க வேண்டியதுதான்.ஆனா இப்படியா?

டிஸ்கி: சித்ரா  புடவையைக் கண்ணுல காட்டாததால் பொறுப்பா படத்துடன் இந்தப் பதிவு.சிகப்புகலர்ல புடவை ரொம்பத்தான் ஜொலிக்குது ;)

14 மறுமொழிகள்::

க.பாலாசி said...

//கூடிய விரைவில் டிவி வச்ச புடவைகளும் வந்துட்டா எங்கிருந்தாலும் இந்த அழுகாச்சி சீரியல்களை மிஸ் பண்ணாம பாத்திடலாம்.//

ஆமா..ஆமா...இது ரொம்ப முக்கியம்ல...

கண்மணி/kanmani said...

ஏன் நீங்கள்ளாம் டிவி வச்ச டீ சர்ட் போட்டுக்கங்க கிரிக்கெட் மேட்ச் பாக்கலாம்.

பிரியமுடன்...வசந்த் said...

//அப்படியே லேப்டாப் போல பல்லுடாப் [pallu top]கண்டுபிடிச்சிட்டா இருந்த இடத்திலேருந்தே பதிவுகளும் போட்டுடலாம்.ரங்ஸ்களும் நம்ம முந்தானையைப் பிடிச்சிக்கிட்டே வருவாங்கல்ல)))))) //

ஆத்தா தாயி ஏன் இப்பிடி இப்போவே பலர் அப்பிடித்தான் இருக்காய்ங்க...

தமிழ் பிரியன் said...

;-)))

goma said...

ஒரு பக்கம் ஒரு வேளை கஞ்சிக்குக் காத்திருக்கும் ஜனங்கள்......மற்றொருபக்கம் இந்தமாதிரி நேரம் பணம் வீணாக்கும் ‘அரிய’கண்டுபிடிப்புகள்......
....எங்கே ரூம் போட்டு யோசிக்கலாம்னு செலெக்ட் பண்றதுக்கே ரூம் போட்டு யோசிப்பாங்க மாதிரி இருக்கே....

ராமலக்ஷ்மி said...

:)!

Sangkavi said...

//கூடிய விரைவில் டிவி வச்ச புடவைகளும் வந்துட்டா எங்கிருந்தாலும் இந்த அழுகாச்சி சீரியல்களை மிஸ் பண்ணாம பாத்திடலாம்.//

நம் நாட்டிற்கும், நம் மண்ணிற்கும் இது முக்கியமா விசயந்தான்...

தியாவின் பேனா said...

m......

Chitra said...

மிக்க நன்றி, கண்மணி - சந்தோஷமா இருக்கு.

malar said...

புடவையின் கலரும் ஒர்க்கும் சூப்பர்...

Anonymous said...

எனக்கு ஒண்ணு வாங்கி ப்ரஸண்ட் பண்ணுங்க கண்மணி டீச்சர் :)

புலவன் புலிகேசி said...

சித்ரா பதிவிலே படிச்சேன்...ரொம்ப பொறுப்புதான்..

மஹா said...

// தங்கத்துலயே ஜாக்கெட் ஒன்னு அறிமுகப் படுத்தினாங்க//
இதனாலதான் பவுனு வெல ஏறிப்போச்சோ...

மாதேவி said...

/அப்படியே லேப்டாப் போல பல்லுடாப் [pallu top]கண்டுபிடிச்சிட்டா இருந்த இடத்திலேருந்தே பதிவுகளும் போட்டுடலாம்.ரங்ஸ்களும் நம்ம முந்தானையைப் பிடிச்சிக்கிட்டே வருவாங்கல்ல)))))) // :)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)