PAGE LOAD TIME

நம் பதிவுகளும் கூகுள் தேடலும்

திவு எழுதும் எல்லோருக்குமே என்ன வேண்டியிருக்கும்?பின்னூட்ட எல்லை 40 களைத் தாண்டிய பின்னூட்டங்களும் 20,30 ஓட்டுகளும் முகப்பில் பரிந்துரைக்கப் பட்ட இடுகையாக அல்லது மகுடமாக பதிவுகள் இருக்கனும்னு ஆசைப்படுவோம்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போ யாருக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு சொல்ல முடியாதது போலவே நம் மக்கள் கவிதையோ ,மொக்கையோ,அனுபவமோ விழிப்புணர்வோ எதற்கு வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போட்டுடுவாங்க.
இதெல்லாம் எத்தனை நாளைக்கு?அதிகபட்ச ஓட்டு பின்னூட்டம் வாங்கிய பதிவுகள் கூட ஒரு வார கால அளவிற்கே முகப்பில் இடம் பிடிக்கலாம்.அடுத்தடுத்து வேறு பதிவுகள் அதைப் பின் தள்ளி கொண்டிருக்கும்.அதன் பின் யாரும் அது குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றேனும் பழைய பதிவுகள் மேற்கோள் காட்டப் படும் நேரம் தவிர.
ஆனால் இதையும் தாண்டி நம் பதிவுகள் பின்னூட்டம் பெறாமல் ஓட்டு வாங்காமல் வாசிக்கப் படுகிறது பல நேரங்களில்.கூகுள் தேடுதளத்தில் தமிழில் ஏதேனும் தட்டச்சு செய்து தேடினால் முதலில் வந்து விழுவது தமிழ் வலைப் பதிவுகள்தாம். backlinks கண்டறிவதன் மூலமோ அல்லது
Feedjit traffic feed widget உங்க வலைப் பக்கத்தில் இணைத்திருப்பீர்களானால் இதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
என்னுடைய குறிப்பிட்ட இரண்டு பதிவுகள் பலமுறை [இப்போதும் கூட] கூகுள் தேடு பொறியில் முன்னிறுத்தப் படுகின்றன.இரண்டுமே சாதாரண மொக்கைப் பதிவுகள்தான்.
ஒன்று சுலபமாக உடற்பயிற்சி செய்வது எப்படின்னு ஒரு மகா மெகா மொக்கை.ஒபிஸிட்டி பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிப் போன இன்றைய சூழலில் என்ற அது குறித்த கூகுள் தேடலுக்கு ("சுலபமாக எடையைக் குறைக்க") என் மொக்கைப் பதிவும் முன்னிறுத்தப் படுகின்றது. இதற்காக நான் சந்தோஷப் படுவதா அல்லது தேடி வந்தவர்களுக்குத் தேவையான தகவல் தரவில்லையே என வருத்தப் படுவதா?
போகட்டும் இதாவது சாதாரண மேட்டர்.இன்னொரு பதிவு சம்மந்தப் பட்டது பற்றி என்ன சொல்ல?ச்சீ இதையெல்லாமா சொல்லிக் கொண்டிருப்பது என பல மாதங்கள் தவித்துப் போய் பின் ஒரு கட்டத்தில் பப்லிஷ் செய்திருந்த அந்தப் பதிவையே இப்போது draft ல் போட்டு விட்டேன்.
என்ன பில்டஃப் பலமாக இருக்குன்னு பாக்கறீங்களா?என்னுடைய ஆரம்பகால பதிவுகள் எல்லாம் கிட்டு மாமா,அம்புஜம் மாமி பதிவுகள் தான்.கொஞ்சம் நகைச்சுவையோடு இருந்ததால் பலர் விரும்பிப் படித்தனர்.அதனால் பெரும்பாலான பதிவுகளில் மாமி என்ற பேர் இடம் பிடித்திருக்கும்.
கூகுள் தேடலில் பலர் 'மாமி' யைத் தேடப் போக என்னோட அம்புஜமும் 'வகையாக' மாட்டிக்கிட்டாள்.இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லைனு நினைக்கிறேன்.
பல மாதங்களுக்கு முன்பு போட்ட சாதாரண ஒரு நகைச் சுவைப் பதிவு 'அம்புஜம் மாமியின் புது வருடப் பலன்' அடிக்கடி ரெஃபர் செய்யப் படுவதும் அந்த லிஸ்ட்டோடு காணக் கிடைத்த பலான பதிவுகளும் தந்த எரிச்சலில் அதை டிராஃப்ட் ஆக்கிவிட்டேன்.நல்லவேளை மற்ற மாமி பதிவுகளை கூகுளார் கண்டுக்காததால் தப்பித்தன.இல்லாவிட்டால் எல்லாத்தையும் டிராப்ட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும்.
யார் எதைத் தேடினால் என்ன நம்ம பதிவு ரெஃபர் செய்யப் பட்டு நம் வலைப் பக்கம் வந்தால் டிராஃபிக் கூடும் தானே இதுக்கேன் இந்த அலட்டல்?கரெக்ட் தான்.அது அவரவர் தனிப்பட்ட மனநிலையைப் பொறுத்தது.கண்மணி ன்னா இப்படித்தான் இருக்கனும் என்பது என்னோட விருப்பம்,முடிவு.
ஆனால் சொல்ல வந்தது இப்படி நடக்கிறது என்பதைத்தான்.நம் பதிவுகள் அதில் இடம் பெறக்கூடிய பொருளடக்கம்,வார்த்தைகள் எத்தனை முக்கியம் பெற்றவை என்பதைச் சொல்லவே இந்தப் பதிவு.இதொன்றும் புதிதில்லை.முன்னமே பலர் அறிந்திருக்கக் கூடும்.இருந்தாலும் என் அனுபவத்தை பதிவாக்குகிறேன்.
சொற்ப நாட்களுக்குக் கிடைக்கக் கூடிய பரபரப்பு,மறுமொழிகளின் எண்ணிக்கை,ஓட்டுக்கள் இவைகளுக்காக வேண்டி 'பளிச்' தலைப்பையோ வார்த்தைகளையோ பயன் படுத்துகிறோம்.ஆனால் அது தேடுபொறியில் சேமிக்கப் பட்டு எந்நேரமும் காணக்கிடைக்கும் என்பதுதான் உண்மை.

18 மறுமொழிகள்::

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! இப்படியெல்லாம் இருக்கா ...

Anonymous said...

//நல்லவேளை மற்ற மாமி பதிவுகளை கூகுளார் கண்டுக்காததால் தப்பித்தன.இல்லாவிட்டால் எல்லாத்தையும் டிராப்ட் பண்ணிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கும்.//

ஐய்யய்யோ , நிஜமாவே இப்படியெல்லாம் இருக்கா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப உண்மை கண்மணி.. நம்முடைய கவுண்ட்டர் காட்டும் தேடும் சொற்கள் என்று பார்த்தால் இவைகளெல்லாம் சிக்கிக்கொள்கின்றன.. குறும்படம் திருப்புகழ் இலக்கியத்தில் நகைச்சுவை என அவர்கள் தேடி விசயங்களைப் பெறுகிறார்கள் என்பது எனக்கும் சந்தோசமான விசயம். ஆனால் சில உறவின் பெயர்களை தேடி இங்கே சிலர் வந்துபோவது எனக்கும் கடுப்பாக இருக்கும்..

அதையும் மாத்த முயற்சித்திருக்கிறீர்கள்.. உங்கள் மனநிலையை புரிந்து கொள்ளமுடிகிறது..

க.பாலாசி said...

உண்மைதாங்க... நானும் பலநேரங்கள்ல கூகிள் சர்ச்சில பாத்திருக்கேன்...

Chitra said...

சொற்ப நாட்களுக்குக் கிடைக்கக் கூடிய பரபரப்பு,மறுமொழிகளின் எண்ணிக்கை,ஓட்டுக்கள் இவைகளுக்காக வேண்டி 'பளிச்' தலைப்பையோ வார்த்தைகளையோ பயன் படுத்துகிறோம்.ஆனால் அது தேடுபொறியில் சேமிக்கப் பட்டு எந்நேரமும் காணக்கிடைக்கும் என்பதுதான் உண்மை.


........ஆமாங்க, கண்மணி. சரியா சொல்லி இருக்கீங்க.
பி.கு. இப்போ கூகிள் னு search பண்ணா, இந்த இடுகை அடிக்கடி வந்திடும்ல. ஹா,ஹா,ஹா,ஹா.....
கண்மணி, just kidding!

கண்மணி/kanmani said...

சித்ரா சோதிச்சே பாத்துட்டேன்.
என் பதிவு 'நம் பதிவுகள் 'னு ஆரம்பிப்பதால் நம் பதிவுகள் னு தேடுங்க search ல முன்னாடி நிக்கறோம்ல...
ஆஹ்ஹாஹ்ஹா

ரிஷபன் said...

ஆனால் இதையும் தாண்டி நம் பதிவுகள் பின்னூட்டம் பெறாமல் ஓட்டு வாங்காமல் வாசிக்கப் படுகிறது பல நேரங்களில்.

அப்படியா???

ர‌கு said...

ரெடியா இருங்க‌, நோப‌ல் ப‌ரிசுக்கு உங்க‌ள‌ ப‌ரிந்துரைக்க‌ற‌தா ஊரெல்லாம் ஒரே பேச்சு:))

Chitra said...

very good. Google aandavan solraan, neenga mudhala irukkeenga. ha,ha,ha,.....

thenammailakshmanan said...

அட இதுல கூட எச்சரிக்கையா இருக்கணுமோ கண்மணி ரொம்ப நன்றி

புலவன் புலிகேசி said...

உண்மைதான்..ஒவ்வொருவரும் அதனால் பொறுப்புடன் எழுத வேண்டும்

சுடுதண்ணி said...

உண்மை தான். மேலும், தலைப்புகளில் இடம்பெறும் வார்த்தைளுக்கே தேடுபொறிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. மொக்கையோ, நான் - மொக்கையோ தலைப்புல கவனமா இருப்பது ரொம்ம்ப முக்கியம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி கண்மணி :)

கண்மணி/kanmani said...

அனைவருக்கும் நன்றிகள்.
கூகுள் நம் தலைப்புகளில் உள்ள வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.இப்படியும் நடக்கிறது எனச் சொல்லவே இந்தப் பதிவு.

சுல்தான் said...

சில நல்ல வார்த்தைகளைக் கூட கெட்டவைகளாக ஆக்கி விட்டார்கள். :((

நசரேயன் said...

கூகிள் ஆண்டவர் உங்களை தேடுரறதா கேள்விபட்டேன்

ஹுஸைனம்மா said...

புதிய தகவலகள் தெரிந்துகொண்டேன். நன்றி கண்மணி. பொறுப்புணர்ந்து எழுத வேண்டும் என்பது சரியே.

இப்போ சிறியவர்களாக இருக்கும் என் பிள்ளைகள் நாளை என் பிளாக்கையும் படிக்கலாம் என்பதைத்தான் நான் எப்போதும் கவனத்தில் கொள்வேன். இனி இதுவும் என் கவனத்தில்.

/backlinks கண்டறிவதன் மூலமோ அல்லது
Feedjit traffic feed widget//

நேரமிருந்தா இதப் பத்தியும் எழுத முடியுமாங்க?

V.Radhakrishnan said...

:) ஆன்மிகம் னு தேடினா நாங்களும் வந்தோம். இது போன்று ஒரு இடுகையை கோவி.கண்ணன் அவர்களும் வெளியிட்டு இருந்தார். 400, 500 என வருகை இருந்ததாம் என்ன காரணம் எனப் பார்த்தால் 'பாலியல்' என தேடி வந்திருந்தார்களாம். எனவே எந்தத் தலைப்பிட்டு எழுதினாலும் பிறருக்கும் பயன் அளிக்குமாறு எழுதுவது சிறப்பு, இந்த இடுகையைப் போலவே.

கண்மணி/kanmani said...

நன்றி ராதாகிருஷ்ணன் சார்..இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமேன்னு பதிவிட்டேன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)