PAGE LOAD TIME

டாப் டென் பின்னூட்டங் [வகை] கள்

ந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் தேவையில்லை.அப்படி பின்னூட்டம் போட்டால் அது எந்த வகையினது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.நிறைய ஆராய்ச்சி செய்து ;)யோசித்து வைத்தேன் என்றாலும் ஒரு பத்துவகையை மட்டுமே பட்டியலிடுகிறேன்.


1:அப்ரசெண்டு பின்னூட்டம்:

புதுசா பதிவெழுதவந்தங்கதான் இந்த அப்ரசெண்டுங்க.யாருக்குப் போடனும் எதற்குப் போடனும் என பாகுபாடு இல்லாமல் கண்ணுல கண்ட பதிவுகளுக்கெல்லாம் போடும் அப்பாவிகள்.
[பின்னாடி தெளிஞ்சி உஷாராயிடுவாங்கல்லே]

2:மொய் பின்னூட்டம்:

எனக்கு நீ போட்டா உனக்கு நான் போடுவேன் வகை.கிட்டதட்ட நல்லது கெட்டதுக்கு மொய் எழுதறாப்போலதான் இதுவும்.
[மொய்யின்னா கூட குறையவும் இருக்கும் கண்டுக்கப் படாது]3:வால்பிடி பின்னூட்டம்:

யாரு என்னன்னே தெரியாது.புதுசா நமக்குப் பின்னூட்டம் போட்டுட்டாங்களேன்னு அவங்க உரலை பிடிச்சிப் பின்னாடியே போயிடனும்.இந்தா வச்சிக்கோன்னு பதிலுக்குப் போட்டுட்டு ஓடி வந்திடுவது.
[பெரும்பாலும் எப்பவாச்சும் நடப்பது.]

4:கடமை பின்னூட்டம்:

தெரிந்த ஊர்காரங்களோ நண்பர்களோ பதிவு போட்டுட்டா ஒரு அட்டெண்டஸ் போடுவது கடமை தவறாத பின்னூட்டம்.இதுக்குப் பதிவைப் படிக்க வேண்டிய கட்டாயமில்லை
[அதிகபட்சம் சிரிப்பான் அல்லது அருமை னு சொன்னாப் போதும்]

5:தாராள பின்னூட்டம்:

எந்த ஒரு கமிட்மெண்ட்டும் இல்லாம பதிவுகளை படிக்கும் ஆர்வத்திலும் புதியவர்களை ஆதரிக்கும் நோக்கிலும் யாருக்கு வேண்டுமானாலும் பின்னூட்டம் போட்டு வைப்பது.கொஞ்சம் அனுபவஸ்தர்கள் செய்வது.
[பொதுவாக பதிவெழுத மாட்டாங்க.படிக்க மட்டும் செய்பவர்கள் ]

6:விளம்பரப் பின்னூட்டம்:

எங்கும் எதிலும் தவறாது பின்னூட்டம் போட்டுட்டு அப்படியே என் பதிவைப் பாருங்கன்னு தங்கள் வலைப் பக்கத்தின் உரலைக் கொடுப்பது.
[ஒரு விளம்பர யுக்தி.சில திரட்டிகள் செய்வது]

7:கும்மி பின்னூட்டம்:

மொக்கையோ சக்கையோ கும்மியடிக்கவும் பொழுது போக்கவும் போடப் படுவது.வார்த்தைகளாக இருக்கனும்னு அவசியமில்லை நெம்பர்களாகவும் போடலாம் ஒருவரே எத்தனை வேண்டுமானாலும் போடலாம்.இதில் பதிவருக்கோ பதிவுக்கோ சம்மந்தமில்லை
[பிலாக்கர் சாட் விண்டோ]

8:குரூப் பின்னூட்டம்:

ஒரே இடத்தில் பணி ஒரே இடத்தில் இருப்பவர்கள் அல்லது சாட் மூலம் இணைந்த நண்பர்கள் இப்படி ஏதோ காரணத்தால் குரூப் ஆனவங்க ஒருவருக்கொருவர் பதிவிடும்போது கட்டாயமாகப் போடுவது.இதுவும் ஒரு விதக் கடமையே
[நட்பு வட்டம்]

9:ஊர்ப் பின்னூட்டம்:

யார் எந்த இடத்தில் வேனும்னாலும் இருக்கலாம்.ஆனால் பதிவர் நம்மா ஊர்க் காரவங்கன்னு தெரிஞ்சிட்டாப் பாசக்கார பயபுள்ளைங்க பின்னூட்டம் தவறாம போட்டுடுவாங்க
[இது நம்மாளு வகை]

10:சென்சார் பின்னூட்டம்:

அரசியல்,ரஜினி,விஜய்,அஜீத் இப்படி சென்சிவான மேட்டர் வச்சி பதிவெழுதிட்டால் பிரசுரிக்க முடியாத பின்னூட்டங்கள் வரலாம்.இது பின்னூட்ட கணக்கில் வராது.
[மட்டுறுத்தல் அவசியம்]

இந்த டாப் டென் வகைப் பின்னூட்டங்கள் தவிர சில உப வகைகளும் இருக்கு.இதெல்லாம் வளர்ந்து வரும் பதிவர்களுக்குத்தான்.ரொம்பப் பெரிய பதிவராயிட்டா அப்பால யாருக்குமே பின்னூட்டம் போடத் தேவையில்லை.
அது போலத்தான் ஓட்டளிப்பும்.அப்புறம் இந்த ஃபாலோயர்ஸுக்கும் பின்னூட்டத்திற்கும் சம்மந்தமில்லை.தமிழ்மணத்துல மூன்று இலக்க ஃபாலோயர்ஸ் இருக்கிற பதிவர்கள்தான் அதிகம்.அவங்களுக்கெல்லாம் அதே எண்ணிக்கையில் பின்னூட்டம் வரும்னு எதிர் பார்த்தா நீங்க இன்னமும் பெரிய பதிவராகவில்லைனு பொருள்.

அனானி பின்னூட்டம்: ..

இது பேர் சொல்ல விரும்பாதவங்க, பிலாக்கரில் நுழைய விரும்பாதவங்க ,சில நேரம் நமக்கு நாமே திட்டத்தைப் பயன்படுத்திக்கிறவங்க செய்வது என்பதால்இது கணக்கில் வராது,அதனால டாப் டென்னில் சேராது

டிஸ்கி-1:
பதிவு படிக்கிறவங்க எல்லாம் பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் பதிவு படிச்சாங்கன்னும் அர்த்தமில்லை.
டிஸ்கி-2:
ஓட்டு போட்டவங்கஎல்லாம்  பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ஓட்டு போடுவதில்லை

59 மறுமொழிகள்::

ரிஷபன் said...

கேலியா எழுதின மாதிரி.. அப்படியே மனசைப் படிச்சிருக்கீங்க..

அக்பர் said...

கலக்கிட்டிங்க போங்க.

தருமி said...

"4"

அமைதிச்சாரல் said...

கண்மணி டீச்சர்,

ரூம்போட்டு, உக்காந்து, சிந்திச்சிருக்கீங்க :-))))

டாப் டென்=டாப் ஒன்.

நசரேயன் said...

7 th category

சி. கருணாகரசு said...

சரி வரணுங்க... (இது எந்த வகையோ...)

அன்புடன் அருணா said...

நான் எப்பவும் பூங்கொத்து!

மதுவதனன் மௌ. / cowboymathu said...

:-)

வல்லிசிம்ஹன் said...

அடடா. ரூம் போட்டு யோசிக்கிறதுன்னால் இதுதானா கண்மணி. அத்தனையும் உண்மை. நான் எந்த வகைன்னு புரியலை:)

கண்மணி/kanmani said...

வாங்க ரிஷபன்..இத்தனை நாள் தமிழ்மணத்துல இருக்கேனே அந்த தகுதி போதாதா இப்படி ஆராய்ச்சி பண்ண..:))

கண்மணி/kanmani said...

நன்றிங்க அக்பர்

ஓகே தருமி சார் 'கடமை'

கண்மணி/kanmani said...

அமைதி...ரூம் போடமயே புரியும் உங்களுக்கும் இன்னும் கொஞ்சநாள் கழித்து.

வல்லியம்மா நீங்க [நானும்] லிஸ்ட்டில் சேராத வகை.அது என்னன்னு எனக்கே தெரியலை.

கண்மணி/kanmani said...

கருணாகரசு நீங்களும் [நானும்] 3 வது வகையோ?

கண்மணி/kanmani said...

அருணா மேடம் நீங்களும் வல்லியம்மா போலத்தான்.தந்தாலும் தராவிட்டாலும் பூச்செண்டுதான்.

கண்மணி/kanmani said...

வாங்க கௌபாய் மது விவகாரம்னா உங்க பின்னூட்டம் என் பதிவில் வருமே.:))

Chitra said...

டிஸ்கி-1:
பதிவு படிக்கிறவங்க எல்லாம் பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் பதிவு படிச்சாங்கன்னும் அர்த்தமில்லை.
டிஸ்கி-2:
ஓட்டு போட்டவங்கஎல்லாம் பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ஓட்டு போடுவதில்லை


............. APPLAUSE!

மதுவதனன் மௌ. / cowboymathu said...

பாத்தீங்களா கண்மணி, இந்த விவகாரப் பின்னூட்ட வகையைப் பற்றி நீங்க ஒண்டும் சொல்லவில்லையே..

அப்புறம்.. உங்க பின்னூட்டத்தை பார்த்தபிறகுதான் யோசிச்சேன்..

ஓகோ.. நீங்கதான் அந்தக் கண்மணியா.. ? :D

அண்டைக்கே மறந்தது.. இப்பதான் ஞாபகம் வருது.. :)

கண்மணி/kanmani said...

@கௌபாய்மது
எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கண்மணி தான் தமிழ்மணத்தில்.நல்லவேளை இந்த பேர் வேறு யாருக்கும் பிடிக்கல.இப்போ கண்மணி/kanmani ஆயிட்டேன்.
விவகாரம் என்பது விவாதம் எனும் பொருளில்.அதுவும் ஒரே பதிவில் மட்டும்தான்.
ஞாபகம் வந்ததற்கு நன்றி

Chitra said...

கண்மணி, நான் உங்களுக்கு பின்னூட்டமும் போட்டு வோட்டும் போட்டிருக்கேன். சமத்து தானே?
பதிவையும் முழுக்க படிச்சேன். ரொம்ப சமத்து தானே?

தமிழ் பிரியன் said...

நல்ல பதிவு!

தமிழ் பிரியன் said...

:-))

தமிழ் பிரியன் said...

அருமை!

தமிழ் பிரியன் said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க... இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

டீச்சர், எங்க பதிவுக்கும் வாங்களேன்.. ஹிஹிஹி

தமிழ் பிரியன் said...

ஹைய்யா மீ த 25!

தமிழ் பிரியன் said...

டீச்சர், பிரம்போடவோ, பியூரெட், பிப்பட்டோடவோ அடிக்க வருவதற்கு முன்னாடி விடு ஜூட்... ;-)

தமிழ் உதயம் said...

very good, இது எந்த வகை பின்னூட்டம்.

கண்மணி/kanmani said...

சித்ரா நீங்க சமத்தோ சமத்து.
i really envy ur humour sense [in posts] and the friends circle u hv.ahhhaah .keep it up
anyhow u come under 5th category

கண்மணி/kanmani said...

த.பிரியா 7 பின்னூட்டம் ஓகே.மத்த மூன்று வகைக்கு??

உங்க எல்லா பதிவுகளும் படிச்சிடறேன்.பின்னூட்டம் போடும் அளவுக்கு நீங்க எழுதும் மேட்டர் என் அறிவுக்கு அப்பாற்பட்டது.[விஞ்ஞான கதைகள்]:(

கண்மணி/kanmani said...

தமிழ் உதயம் 2 வது வகையா இருக்குமோ...சரி உங்க பதிவில் என் 3 வது வகை போட்டுடறேன்.

V.Radhakrishnan said...

ஹா ஹா! நான் முதல் வகையில் சேர்க்கப்பட்டுக்கொள்கிறேன், ஒன்றும் ஐந்தும் சரியெனக் கொள்வோம்.

கண்மணி/kanmani said...

எதுவாக இருப்பினும் நன்றிங்க இராதாகிருஷ்ணன்.
எல்லோருமே 10 வகையில் நேரத்திற்கு ஏற்ப பொருந்திவிடுவோம்.சரிதானே.

PPattian : புபட்டியன் said...

//கருணாகரசு நீங்களும் [நானும்] 3 வது வகையோ?//

சத்தியமாக இல்லை

ஏன்னா.. நான் பதிவு எழுத வந்த புதிதில் அப்ரெண்டிசா முன்னாடி பல பின்னூட்டம் போட்டேன்.. ஆனா நீங்க பின்னாடி மொய் வக்காததினால நான் உங்க பிளாக் பக்கமே வரலை.. அப்பறம் கண்ணாடி இப்பதான் வந்திருக்கேன்.. பின்னாடி வருவனான்னு தெரியலை

கண்மணி/kanmani said...

இதென்ன கூத்து சாமீ...புபட்டியன் பரிச்சயம்.மன்னிக்கனும் பின்னூட்டம் போட்டதில்லைதான்.இப்போ வேற அவதாரமோ..கருணாகரசுன்னு

PPattian : புபட்டியன் said...

நான் கருணாகரசு இல்லை.. அவர் பின்னூட்டத்துக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு நான் பதில் அளித்தேன்... :)

கண்மணி/kanmani said...

சித்ரா பொய்..பொய்..தமிழ்மணத்திலும் இல்லை தமிலிஷ் லேயும் இல்லை ஓட்டு...

PPattian : புபட்டியன் said...

மற்றபடி இந்த பதிவு கலக்கல் ...வாழ்த்துகள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்ல ஆராய்ச்சி.. இன்னும் கூட ஆராய்ந்திருக்கலாம் உங்க அனுப்வத்துக்கு..

கண்மணி/kanmani said...

செய்திருக்கலாம் முத்து.அநாவசியமாக யாரவது புண்பட நேரிடலாம் [நீங்களாகவும் இருக்கலாம்;)]

ஆமா என் அனுபவத்துக்குன்னா....அப்ப நீங்க அப்ரசண்ட்டா

Anonymous said...

40

Anonymous said...

சே. கமெண்ட் மாடு-ரேசன் எல்லாம் கீது. எப்படி கும்மி அடிக்கறது.

புலவன் புலிகேசி said...

கலக்கல் கண்மணி

கவிதை காதலன் said...

புரியுது.. புரியுது.. நல்லாவே புரியுது

☀நான் ஆதவன்☀ said...

இதுக்கு என்ன பின்னூட்டம் போடுறதுன்னே தெரியல :)

(இந்த பின்னூட்டம் எந்த பிரிவுல வரும்?)

கண்மணி/kanmani said...

@கவிதை காதலன் என்னங்க புரியுது...?இதுதான் பதிவுலகம்னு தானே


@ நான் ஆதவன்
இது உப பிரிவுல வரும்.நியூ கமர் பின்னூட்டம்.
வேணும்னா தொடரும்.வேண்டாம்னா ஒன் டைம் ஒன்லி டைப்.:))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நாங்க எப்பவும் ஆறு .........


உங்க Favicon(கண்) போலவே பதிவும் அருமை.......

கண்மணி/kanmani said...

ஆஹ்ஹாஹ்ஹா...உங்களை [உலவு] நெனைச்சுத்தானே 6 வது வகையே எழுதினேன்.
நன்றி உலவு.

thenammailakshmanan said...

கண்மணி ஒன்னு மூணு ஐஞ்சு அதுதான் நானு ஹிஹிஹி நல்ல படிச்சீங்களே என் மனசை...

LK said...

இப்படிலாம் விளம்பரம் பண்ணதன் எங்க பதிவை யாராவது படிப்பாங்க
http://karthikthoughts.co.cc

LK said...

3 ootu potruken partukonga

கண்மணி/kanmani said...

வாங்க தேனம்மை.நீங்க 5 தான் 3 இல்லை.அது நாந்தேன்.

கண்மணி/kanmani said...

வாங்க Lk அடிக்கடி .நானும் 3 பிடிச்சிகிட்டு வாரேன்.

அப்பாவி தங்கமணி said...

இப்படியும் பதிவு போடலாம்னு இன்னிக்கி தான் தெரிஞ்சுது. அட அட அட.... ரூம் இல்ல பங்களா போட்டு யோசிச்சு இருக்கீங்க.... அது சரி நீங்க போடற பின்னூட்டங்கள் எந்த வகை? கொஞ்சம் சொல்லுங்க மேடம்...
பின் குறிப்பு: என்னை மாதிரி புதுசா ப்ளாக் ஆரம்பிச்சவங்களுக்கு எப்படி எல்லாம் விளம்பரம் பண்ணலாம்னு யோசனை குடுத்த கண்மணி அவர்களே..வாழ்க வாழ்க..வாழ்க ப்ளாக் உலகம் இருக்கும் வரை (அப்பாடி எப்படியோ இன்றய விளம்பர கோட்டா ஓவர்....)

பேநா மூடி said...

11 th type

கண்மணி/kanmani said...

பேநா மூடி
11 ன்னா அனானியா :))

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

ஷாகுல் said...

:))))))))))))))))

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

இராஜராஜேஸ்வரி said...

பதிவு படிக்கிறவங்க எல்லாம் பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் பதிவு படிச்சாங்கன்னும் அர்த்தமில்லை.
டிஸ்கி-2:
ஓட்டு போட்டவங்கஎல்லாம் பின்னூட்டம் போடுவதில்லை.
பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ஓட்டு போடுவதில்லை
அருமையான வாழ்வியல் தத்துவம்..

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)