PAGE LOAD TIME

தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கும்...தவிப்பான பெற்றோர்களுக்கும்

தோ இன்றிலிருந்து +2 தேர்வுகள் ஆரம்பிச்சிடுச்சி.கொஞ்சநாளாகவே எதிர்வரும் தேர்வுகளை எப்படி எதிர் கொள்ளனும் என்பதை பற்றி பத்திரிக்கைகள் மட்டுமல்லாது பதிவுகளும் எழுதுகின்றன.
நாம சும்மா இருந்தா எப்படியென...இந்தப் பதிவு.

தேர்வை எதிர் கொள்வது எப்படி,பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும் எப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அடிப்படையான விஷயங்கள்.
தேர்வை எப்படி எழுத வேண்டும் எழுதும்போதும் எழுதிய பிறகும் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதுதான் இந்தப் பதிவு.

1.தேர்வுக்கு முதல் நாளே எடுத்துச் செல்ல வேண்டிய பேனா பென்சில் ஸ்கேல் போன்ற தேர்வுக்கான பொருட்கள்,அடையாள அட்டை [ஹால் டிக்கெட்] போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.கடைசி நிமிடத் தேடல் டென்ஷனாக்கி தேர்வு எழுதும் மனநிலையைப் பாதிக்கும்.

2.முடிந்தவரை எழுதிப் பழகிய பேனாவையே பயன்படுத்தினால் விரைவாக எழுத வரும்.புதிதாக வாங்கி எடுத்துப் போவது கிறுக்கினாலோ நம் கை வாகிற்கு சரிவராமல் போனாலோ தொல்லைதான்.எதற்கும் இருக்கட்டுமென அதிகப் படியாக ஒன்றோ,இரண்டோ எடுத்துச் செல்லலாம்.

3.ஆரம்பகட்ட சோதனைகள் இடம் சரி பார்த்தல் எல்லாம் இருக்கும் என்பதால் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தேர்வெழுதும் அறைக்கு சென்று விட வேண்டும்.கடந்த சில வருடங்களாக வினாத்தாள்களைப் படிக்கவென கூடுதலாக 10 நிமிடம் தரப் பட்டிருப்பதால் வினாத்தாள் முழுவதும் படித்து விட்டு ஒவ்வொரு பிரிவிலும் தெரிந்த வினாக்களை தெரிவு செய்து டிக் செய்து கொள்ளலாம்.

4.வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக் கொண்டவுடன் அவரவர் பதிவெண்ணை எழுத வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் வினாத்தாளில் பதில்களை குறிக்கக் கூடாது.மற்றவரிடம் நம் பதிவெண் எழுதப் பட்ட வினாத்தாள் கொடுக்கக் கூடாது.இது வீண் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும்.

5.ஒரே அறையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு A B A B என்ற வகையில் இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்படும்.முதலாமவருக்கு A என்றால் அடுத்தவருக்கு B யாகும்.இது விருப்பப் பாடங்களுக்கு மட்டுமே.மொழிப் பாடங்களுக்கு ஒரே வகைதான்.
இரண்டு வகைகள் இருந்தாலும் மொத்தகேள்விகளுமஒரேமாதிரியானவைதான்.கேள்விகளின் வரிசை எண் மட்டும் மாறுபட்டிருக்கும்.

6.முதலில் நன்கு விடை தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் எழுத வேண்டும். சந்தேகத்திற்குரிய பதிலை எழுதி அடித்து வைத்தல் கூடாது.first impression is the best impression.கையெழுத்து சுமாராக இருந்தாலும் பதில்களை போதிய இடம் விட்டும் தெளிவாகவும் எழுத வேண்டும்.அதற்காக ஒரு பக்கத்திற்கு நாலே வரி எனவும் இருக்கக் கூடாது.திருத்துபவர்களுக்கு தேவையில்லாத அதிக பக்கங்கள் எரிச்சலைத் தரக்கூடும்

7.மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை எழுத்துப் பிழைகள் இலக்கணம் கவனத்தில் கொள்ள வேண்டும்.விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை சமன்பாடுகள் குறியீடுகள் வரைபடங்கள் தேவையான இடத்தில் இடம் பெற வேண்டும்.

8.எத்தனைப் பக்கம் ஒரு பதிலை விரிவு படுத்தி எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல.ஒரு கேள்விக்கு வேண்டிய பதிலின் முக்கிய பகுதிகளைக் குறிப்பிட்டும் முடிந்தால் அடிக்கோடிட்டும் அல்லது கலர் ஸ்கெட்சிலும் தனித்து தெரியும்படி  எழுத வேண்டும்.

9.விடைத்தாள் மதிப்பீடு என்பது ஒரு கேள்விக்கான பதிலுக்கு மதிப்பெண்கள் குத்து மதிப்பாக வழங்கப் படுவதில்லை.ஒரு பதிலில் இடம் பெற வேண்டிய மொத்த பாயிண்ட்ஸ் மற்றும் சமன்பாடு அல்லது வரைபடம் இப்படித் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருக்கும்.மிகச்சரியான விடையாக இருந்தாலும் அத்துடன் எழுத வேண்டிய குறியீடு சமன்பாடு படம் இல்லையெனில் மதிபெண்கள் குறைத்தே வழங்கப் படும்.படம் கேட்கவில்லையே சமன்பாடு கேட்கவில்லையே எனக் குறை சொல்ல முடியாது.5 அல்லது 10 மதிப்பெண் வினாவாக இருந்தால் படங்கள் சம்ன்பாடுகள் கட்டாயம் எழுதனும்.

10.ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பகுதிப் பிரிவு கேள்வி எண் அதன் உட்பிரிவு சரியாக எழுதப்பட வேண்டும்.விடைத்தாளின் முன் பக்கம் மதிப்பீட்டு மதிபெண்கள் பக்கவாரியாகவும் மதிப்பெண் வாரியாகவும் எடுத்து எழுதப் பட்டு டேலி செய்யப்படுவதால் இவை சரியாக எழுதப் பட வேண்டும்.

11.தேர்வு எழுதும் போது அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கவனம் சிதற விடாமல் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.விடைத்தாளில் விடைகளைக் குறுத்து வைப்பதும் நாம் அங்கும் இங்கும் பார்ப்பதும் பறக்கும் படை மற்றும் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் தருமானால் பல நிமிடங்கள் சோதனைக்கு மாணவர்களை உட்படுத்தக் கூடும்.இது மன உளைச்சலையும் நேர விரயத்தையும் தருவதோடு தொடர்ந்து எழுதும் மன நிலையையும் பாதிக்கலாம்

12.கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கையைவிட  கூடுதலாக எழுதினால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைப்பது தவறு.பக்கவாரியாகவும் வினாவாரியாகவும் மதிப் பெண்கள் சரி பார்க்கப் பட்டு கூட்டப் படுவதால் அதிகப் படியான வினா இருப்பது  தெளிவாகி விடும்.அப்படி நேரும் பட்சத்தில் முதலில் எழுதப்பட்ட வினாவே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.அடுத்தது அடிக்கப் பட்டுவிடும்.முதலில்  எழுதியதற்கு 8 மதிப்பெண்கள் அடுத்து எழுதிய அதிகப்படி வினாவுக்கு 10 மதிப் பெண்கள் என்றால் 8 மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது விதி.எனவே கவனமாக இருக்க வேண்டும்.

13.ஒவ்வொரு கூடுதல் விடைத்தாளிலும் சரியான பக்க எண்களை தொடர்ச்சியாகப் போட்டு விட்டே எழுத வேண்டும்.பின்னர் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டும் போது குழப்பம் வராமல் இருக்கும்.

14.பத்து நிமிடம் முன்பாக முடித்து விட்டு பக்க எண்களைச் சரி பார்த்து விடைத்தாள்களை ஒருங்கிணைத்துக் கட்ட வேண்டும்.ஒருமுறை விடைகளையும் சரி பார்க்கலாம்.

15.முடிந்த தேர்வுகளைப் பற்றிய விமர்சனம் அதற்கு தாங்களே மதிப்பெண் போட்டுப் பார்த்தல் போன்றவைகளைத் தவிர்த்தல் வேண்டும்.இது அடுத்த தேர்விற்கான ஆயத்தப் படுத்துதலை பாதிக்கக் கூடும்.முன்பே சொன்னபடி விடைத்தாள் மதிப்பீட்டு முறையும் நம் யூகமும் மாறுபடக் கூடும்.பெற்றோர்களுக்கு:
பிள்ளைங்க பரிட்சை எழுதும்வரை வயித்துல நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்னு சொல்லும் பெற்றோர் அதிகம்.உங்க பரபரப்பும் தவிப்பும் பிள்ளைகளை பாதிக்கக் கூடாது.
டென்ஷன் இல்லாமல் தேர்வுக்கு தயார் படுத்தி அனுப்ப வேண்டும்.உணவுமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உடல்நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.தேவையில்லாத டென்ஷன் மனரீதியாகப் பிள்ளைகளைப் பாதிக்கக் கூடும்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்வரின் மகன் +2 தேர்வு எழுதினான்.நண்பர் ஒரு பல்கலையில் பேராசிரியர்.மகனும் படிப்பில் கெட்டி.இருந்தும் கடைசி இரண்டு தேர்வுகளுக்கு முன்பாக அவனின் உடல்நிலை கெட்டுப் போனது.சரிவர நீர் பிரியாமல் சிறுநீரகக் கோளாறு என்று மீதித் தேர்வுகளை எழுத முடியாமல் போனது.
அதே வருடம் மீண்டும் எழுதிய போதும் அதே நிலையே.அடுத்தமுறை போதிய மருத்துவ ஆலோசனைகளுடன் மீண்டும் வேறு பள்ளியில் சேர்ந்து புதிதாகப் படித்து எழுதி முடித்தான்.இரண்டு வருடங்கள் வீணாகப் போனது.
உடம்பில் பெரிதாக எந்தக் கோளாறும் இல்லையென்றாலும் ஏதோ பயமும் டென்ஷனும் அவனை இப்படியாக்கி விட்டது.இத்தனைக்கும் ஸ்கூல் டாப்பர்.
என் தோழி ஒருத்திக்கு என் பொண்ணு +2 எழுதி முடிக்கிறதுக்குள்ள எனக்கு ஹாட்ட் அட்டாக் வந்துடும் போல இருக்குன்னு தினமும் புலம்பல்.பிள்ளைங்க முடிந்தவரைப் படிக்கட்டுமே.அவர்களையும் கஷ்டப் படுத்தி நீங்களும் கஷ்டப் படனுமா?
பெற்றோர்களின் மனநிலை அவர்களைப் பாதிப்பதால்தான் தேர்வில் தோல்வி காணும் மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குத் தள்ளப் படுகின்றனர்.
இலகுவான மனதுடன் பிள்ளைகளைத் தயார் படுத்தி தன்னம்பிக்கையளிக்க வேண்டியது நிச்சயம் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.

17 மறுமொழிகள்::

அமைதிச்சாரல் said...

டீச்சர்.. டீச்சர்தான். சரியான சமயத்தில் சொல்லப்பட்ட அர்த்தமுள்ள பயனுள்ள டிப்ஸ். welldone.

மாதேவி said...

நீங்கள் கூறியது போல் டென்சனால் எழுதாமல் விடும் மாணவர்களே அதிகம்.
பெற்றோர் ஆதரவாய் இருக்கவேண்டுமென்பது மிகவும் முக்கியம்.

இய‌ற்கை said...

டீச்சர்.. டீச்சர்தான்:-)

கண்மணி/kanmani said...

நன்றி அமைதி.உங்களை நினைத்துக் கொண்டுதான் எழுதினேன்.பயன்படுமே

கண்மணி/kanmani said...

நன்றி மாதேவி

நன்றி இயற்கை

ராமலக்ஷ்மி said...

மாணவருக்கு மட்டுமின்றி பெற்றோரும் கவனிக்க வேண்டியதாக குறிப்பிட்டிருப்பவை நன்று.

கோபிநாத் said...

நல்ல பதிவு அக்கா ;))

thenammailakshmanan said...

தகுந்த நேரத்தில் தகுந்த அறிவுரை நன்றி கண்மணி

நசரேயன் said...

இப்படி எல்லாம் யோசனை சொல்ல அந்த காலத்திலேயே ஆள் இல்லை, அதான் நான் நல்ல மார்க் வாங்கலை

புலவன் புலிகேசி said...

உபயோகமான டிப்ஸ்...மாணவர்களுக்கு பயன் படட்டும்...

பாலாஜி said...

பகிர்ந்தமைக்கு நன்றி 
நல்ல பதிவு

அன்புடன் அருணா said...

சரியான நேரத்தில் அவசியமான பதிவு! பூங்கொத்து!

Chitra said...

கண்மணி, நீங்க டீச்சர்னு எனக்கு தெரியாது. அருமையான டிப்ஸ்.

தமிழ் பிரியன் said...

படிக்கிற காலத்தில் இதையெல்லாம் செஞ்சு இருக்கனும்... எங்க.. அப்பவெல்லாம் இதெல்லாம் புரியல... இனி பெற்றோராக கடமையை செய்யவாவது எத்தனிக்கலாம்.

கண்மணி/kanmani said...

நன்றி ராமலஷ்மி

யாருப்பா கோபியா நல்லா இருக்கியா தம்பி

நன்றி தேனம்மை

நசரேயன் இப்பா டூ லேட்

நன்றி புலிகேசி

ந்ன்றி பாலாஜி

ஆஹா அருணா நன்றி

சித்ரா ரொம்ப கண்டிப்பான மொக்கை டீச்சராக்கும் நான்

தமிழ்பிரியன் நிறைய விஷயங்களை நாம மிஸ் பண்ணியிருக்கோம்.அடுத்த தலைமுறைக்காவது கொடுப்போம்.

PPattian : புபட்டியன் said...

மிக்க பயனுள்ள பதிவு..

அந்த ABAB முறையெல்லாம் நாம படிக்கும்போது இருக்கலையே.. எப்போலேர்ந்து இப்படி?

கண்மணி/kanmani said...

நன்றி புபட்டியன்
4,5 வருடங்களாகத்தான் இந்த முறை.காப்பியடிப்பதைத் தடுக்க புது முறை.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)