PAGE LOAD TIME

90/10 ம் ...பூமராங் வாழ்க்கையும்....

கொஞ்ச நாளாக தமிழ் மணத்துல ஒரே தத்துவ பதிவுகள். சரி நம்ம பங்குக்கு ஒன்னு போட்டுடுவோம்னு தோணிச்சு.மிகவும் இரசித்துப் படித்த மிகச் சரியான தீர்வாகப் பட்ட மனவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஏற்ற தத்துவம் இந்த 90/10 தத்துவம்.
நம் வாழ்க்கையில் நடக்கும் எதையும் நாம் யாரோடவோ அல்லது விதியோடவோ சம்மந்தப் படுத்தியே பழகி விட்டோம்.
எல்லாம் அவனால் வந்தது..அவளால்தான் இப்படியாச்சு என்றோ அல்லது எல்லாம் என் விதி இப்படி நடக்கனும்னு இருக்கு என்றோ தப்பித்தலுக்கே முனைகிறோமேயன்றி நம் தவறு என்ன என்பதை உணரவோ அல்லது உணர்ந்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளவோ மனம் சம்மதிப்பதில்லை.
உண்மையில் 100 ல் 10 பங்கே நம்மையறியாமல் நம் வாழ்வில் நடக்கிறது.மீதமுள்ள 90 பங்கும் நம் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளால் நாமே உருவாக்கிக் கொள்பவைதான்.
10 பங்காக வாழ்வில் ஏற்படும் நல்லவை கெட்டவைகளை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் அணுகுகிறோம் என்பதே மீதியான் 90 பங்கு.அவையே பெரும்பாலும் நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன.
உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்கிறார் உளவியலார்.

நிகழ்வு1:
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அப்பா
அம்மாவும் அதே அவசரத்தில்
பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் மகள்
மூவரும் அவசரமாக உணவு மேசையின் முன்.அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மகளின் கை பட்டு கோப்பையில் இருந்த காபி அப்பாவின் சட்டை மீது தெறித்துக் கறையாகிவிடுகிறது.

அப்பாவுக்கு கோபம் தலைக்கேற மகளைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்.பயத்தில் அழுதபடியே மகள் மன்னிப்புக் கேட்டும் மனைவி சமாதானப் படுத்தியும் ஆத்திரத்தில் கத்தித் தீர்த்து வேறு உடை மாற்றச் செல்கிறார்.திரும்பி வரும்போது மனைவி கிளம்பிப் போயிருக்க மகள் பள்ளி வேனைத் தவற விட்டு விட்டு இன்னும் அழுதபடியே.எரிச்சலும் சலிப்பும் அதிகரித்தபடி மகளைக் கூட்டிப் போய் பள்ளியில் விட்டு விட்டு தாமதமாக அலுவலகம் வந்தால் மேலாளரின் வசவு.வேலையில் கவனம் சிதற மீண்டும் சிக்கல்.சக ஊழியரிடம் சிடுசிடுப்பு.மாலை வீடு திரும்பினால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மகள்.வாயே திறக்காமல் வேலையில் மூழ்கிப் போன மனைவி.அழகாய் விடிந்தபொழுத இப்படிகோபத்துடன் வேதனையுடன் கழிகிறது.

நிகழ்வு 2:
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அப்பா
அம்மாவும் அதே அவசரத்தில்
பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் மகள்
மூவரும் அவசரமாக உணவு மேசையின் முன்.அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மகளின் கை பட்டு கோப்பையில் இருந்த காபி அப்பாவின் சட்டை மீது தெறித்துக் கறையாகிவிடுகிறது

அப்பாவுக்குக் கோபம் வரவில்லை.தெரியாமல்தானே கை பட்டு காபி சிந்தி விட்டது என பயந்து போன மகளை சமாதானம் செய்ய மகள் பூ வாய் மலர்ந்துசிரிக்கிறாள்.தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பும் கேட்கிறாள்.மனைவி நிம்மதியாகிறாள்.அப்பா வேறு உடை மாற்றிக் கொண்டு வர மகள் பள்ளி வேனில் ஏறும்வரை கையசைத்து விடை கொடுத்து விட்டு மனைவியுடன் சொல்லிக் கொண்டு கிளம்பி நேரத்தோடு அலுவலகம் செல்கிறார்.நிம்மதியிலும் மன நிறைவிலும் அலுவலக வேலை எல்லாமும் அழகாகவும் அமைதியாகவும் நடக்கிறது.மாலை வீடு திரும்பியதும் மகள் சந்தோஷமாக பள்ளியில் நடந்தவைகளைச் சொல்ல மனைவியோடு சேர்ந்து இரசித்தப்படியே அன்றைய பொழுது இனிமையாக கழிகிறது.

இரண்டு நிகழ்விலும் ஒரே மாதிரியான சூழல்கள் தான்.மகளின் கை பட்டு தவறுதலாக சட்டையில் கறை பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று.இதில் எந்த திட்டமிடுதலும் இல்லை.
இதுதான் வாழ்வில் தானாக நிகழக்கூடிய 10 சதவீத நிகழ்வுகள் என்பது.இது போல கோபம் எரிச்சலை வரவழைக்கக் கூடிய சின்னச் சின்ன தவறுகள் எதிர் பாராமல் தாமாக நிகழக் கூடும்.
அடுத்த 90 சதம் என்பதுதான் நம் கையில் உள்ளது.அதற்கு முழுக்க முழுக்க நாமே பொறுப்பாளிகள்.
மேலே சொன்ன இரண்டு நிகழ்விலும் அந்த 90 சதம் எப்படி மாறு பட்டது என்பதையும் அதன் பின் விளைவுகள் எத்தகைய உணர்வுகளைத் தந்தது என்பதையும் பாருங்கள்.
சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து நம் உணர்வுகளைக் கட்டுப் படுத்திச் செயல்பட்டால் அதன் பலனும் அதற்கு ஏற்றாற் போலத்தான் இருக்கும்.
தவறு மகள் மீதோ,சிந்திய காபி மீதோ அல்லது வசை பாடிய மேலாளர் மீதோ இல்லை.
10 சதம் தானாக நடந்தவைகளுக்காக அதைப் பெரிது படுத்தி 90 சதம் ரியாக்ட் செய்த அப்பா தான் காரணம்.
சந்தோஷமோ வருத்தமோ நம் செயல்பாடுகளாலேயே அவை தீர்மானிக்கப் படுகின்றன.
நாம் என்னக் கொடுக்கிறோமோ அதுவே திரும்ப பூமராங் மாதிரி திரும்பக் கிடைக்கிறது.
கோபமும் வெறுப்பும் வேதனையாக மாறுகிறது
பொறுமையும் மன்னிப்பும் சந்தோஷமாக மாறுகிறது
நமக்கு நாமே முதலாளி...நம் மனதைக் கட்டுப் படுத்தும் சக்தி வெளியில் இல்லை.நமக்குள்ளேதான் இருக்கு.
90 சதம் ஆற்றலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆளுமையும் நம்மில் இருக்கும் போது 10 சதம் புற நிகழ்வுகள் நம்மை ஆட்டிப் படைக்க விடலாமா?
இதுதான் வில்லியம் காவி என்ற உளவியலார் சொல்லியிருக்கும் 90/10 வாழ்க்கைத் தத்துவம்
படித்தேன்.பிடித்திருந்தது.பகிர்ந்து கொண்டேன்.இனி கொள்வதும் தள்ளுவதும் உங்கள் கையில்
என்றும் அன்புடன்

21 மறுமொழிகள்::

புதுகைத் தென்றல் said...

பொறுமை கடைபிடிப்பது கஷ்டமில்லை மன்னிப்பு
இது பழக ரொம்ப கஷ்டம்பா. அதுவும் நம்பிக்கைத் துரோகம், இப்படி லிஸ்ட் ரொம்ப பெருசா போகுமே.

யாதவன் said...

அமைதி வாழ்விற்க்கு அழகு

Sangkavi said...

//90 சதம் ஆற்றலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆளுமையும் நம்மில் இருக்கும் போது 10 சதம் புற நிகழ்வுகள் நம்மை ஆட்டிப் படைக்க விடலாமா?//

நிச்சயம் கூடாது...

Chitra said...

90/10 - தத்துவ மணம்.

கோபிநாத் said...

\\\இனி கொள்வதும் தள்ளுவதும் உங்கள் கையில்
\\\

ரைட்டு ;)

Anonymous said...

சட்டுனு வர்ற கோபத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம்தான். கட்டுப்படுத்திட்டா யாருக்கும் மனக்கஷ்டம் இல்லை.

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்தல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி கடைபிடிக்க முயல்கிறேன். :)

கோமதி அரசு said...

நல்ல பதிவு கண்மணி.

சினம் தவிர்த்தல் நல்லது.

மன்னித்தல்,விட்டு கொடுத்தல்.சகிப்பு தன்மை மூன்றும் இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சிதான்.

ஹுஸைனம்மா said...

என்னப்பா எங்க பாத்தாலும் கோவத்தைக் கட்டுப்படுத்துறக்கானப் பதிவுகளா இருக்கு, எனக்குன்னே போட்டமாதிரி!!

thenammailakshmanan said...

கோபமும் வெறுப்பும் வேதனையாக மாறுகிறது
பொறுமையும் மன்னிப்பும் சந்தோஷமாக மாறுகிறது
நமக்கு நாமே முதலாளி...//
ரொம்ப நன்றி கண்மணி இதுபோல் அடிக்கடி ஏதாவது சொல்லுங்க நம்மை நாமே திருத்திக்கொள்ள உதவுதும்மா

அமைதிச்சாரல் said...

//நமக்கு நாமே முதலாளி...நம் மனதைக் கட்டுப் படுத்தும் சக்தி வெளியில் இல்லை.நமக்குள்ளேதான் இருக்கு//

உண்மை கண்மணி டீச்சர்.

அம்பிகா said...

மிக அவசியமான இடுகை.
கோபத்தால் எதையும் சாதிக்க போவதில்லை.
இருந்தும் கோபப் படுகிறோம்.

நல்ல பகிர்வு.

கண்மணி/kanmani said...

பின்னூட்டமிட்டட அனைவருக்கும் நன்றி
இந்தப் பதிவு கோபம் கொள்வது பற்றி மட்டுமல்ல.நாம் வெளிப்படுத்தும் எத்தகைய உணர்வுகளும் அதைத் தொடர்ந்த நம் செயல்பாடுகளும் எப்படி நம்மிடம் திரும்ப எதிர்வினையை ஏற்படுத்துகின்றன என்பதற்கே.நம்மைச் சுற்றி நடக்கும் நன்மை தீமை அனைத்திற்கும் நாமே பொறுப்பாளி என்பதே 90/10 தத்துவம்.
சரி நம்மிடம் விஞ்சியிருப்பது முன் கோபம் தானே.

அப்பாவி தங்கமணி said...

ஏற்கனவே ஏதோ ஈமெயில் forward message இல் படித்திருந்தாலும் தமிழில் படிப்பதற்கு சுவையாக உள்ளது. உங்கள் எழுத்து நடை மேலும் அழகு சேர்க்கிறது. சூப்பர் கண்மணி

vidivelli said...

அருமை..................
வாசித்தேன் அறிந்து கொண்டேன்..................

பத்மநாபன் said...

90 க்கு பத்து ..... அருமையான விதிங்க ... எல்லா பிரச்சினைகளையும் இதுல போட்டு அழகா தீர்வு காணலாம் .
உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது .. மக்கள் இந்த 90 க்கு பத்து
விதியை பதிச்சுக்கிட்டாங்க்னா நல்லாத்தான் இருக்கும் . ( என் வலைப்பூவிற்கும் வந்து ஜனவரியில் பாருங்க சின்ன புன்னகைக்கும் ஆச்சர்யம் இருக்கும் )

vidivelli said...

பொறுமை மிகவும் கசப்பு.....
அதன் விளைவோ மிகவும் இனிப்பு......
வாழ்க்கையில் அதிகப்படியாய் நிகழ்வது தெரிந்து செய்வது தான்....
தெரியாமல் செய்வது மிக குறைவுதான்..
உங்கள்பிரசுரிப்பு ரொம்ப ரொம்ப என் மனதைக் கவர்ந்துள்ளது..
வாசித்துக் கொண்டு போகும்போது நிகழ்ந்தவைகள் படமாய் ஓடுகிறது.
இப்படியான உளவியல் சார்ந்தவைகள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தொடர்ந்து வருகின்றேன்...............

கண்மணி/kanmani said...

@vidivelli

நன்றி விடிவெள்ளி.இதுபோல நிறையத்தர ஆசைதான்

மங்கை said...

கண்மணி

கோவம் எனக்கு பிடிக்காத ஒன்று... ஆனா எனக்கு நெருங்கிய சொந்தங்கள் யாவரும் முன் கோபிகளாகவே இருப்பது கொஞ்சம் வருத்தம் தான்... இருந்தாலும் பதிலுக்கு நாமலும் அதே கோபத்தை கையாலாமல் இருப்பதே சந்தோஷத்தை கொடுக்கும் அல்லவா.. அது தான் என் வழி... இருந்தாலும் சில சமயம் என்னை கிரான்ட்டடா எடுத்துக்குறது நடக்கத்தான் செய்யுது.. சொந்தத்துலேயும் சரி... நட்பு வட்டத்துலேயும் சரி..

என்ன ஆனாலும் எனக்கு கோபம் வராது... நல்ல பகிர்வு கண்மணி

கண்மணி/kanmani said...

@மங்கை

காலைக் காட்டு ஆத்தா தொட்டுக்கிறேன்.எப்பூடி?
எனக்கு எல்லாத்துக்கும் மூக்கு நுனியில கோபம்.இந்த பதிவு எனக்காகவே எழுதிக்கிட்டேன்:(

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)