மொத்தப் பதிவுகளும் இங்கே

வாழ்வின் நம்பிக்கை












சுமை தாங்கிய கணங்களில் தான்
சுவையுணரக் கூடும் வாய்ப்பு
வருத்தப்பட சில நூறு
நிகழ்வுகள் என்றால்
ஆனந்திக்க ஆயிரம்
தருணங்கள் கிடைக்கலாம்
எத்தனை கடினம் என்பதல்ல
வாழ்க்கை
எப்படி வாழ்கிறோம் என்பதே
நம்பிக்கை













புதுமணத் தம்பதிகளின் கையில்
புகைப்பட ஆல்பம்
வலது அடி எடுத்து வைக்க
கால்களில்லை அவளுக்கு
ஆசையாய் அரவணைக்க                                     
கைகளில்லை இவனுக்கு
தொட்டு அறிவதில்லை
உணர்ந்து வாழ்வதுதான் காதல்
அன்பாய் பாசமாய்
தியாகமாய் நேசமாய்
காதலின் பரிமாணம்
விழுதுகள் விட்டு வேறூன்றிப் போனதாலே
மனிதம் வாழ்கிறது
இன்னமும்

டிஸ்கி: திருப்பதிக்குப் போறவங்க அல்மேலு மங்காபுரமும் [கீழ்திருப்பதிக்கு]போகனுமாம்.அப்படித்தான் இந்த பதிவு படிச்சவங்க
இந்த  ஜோடிப்திவையும் டிச்சிடுங்

16 மறுமொழிகள்::

தோழி said...

நல்லா இருக்கு... ரசித்தேன்

அமைதிச்சாரல் said...

வாழ்க்கையை அதன் மீதான நம்பிக்கைதான் மீட்டெடுக்கிறது.. அருமை!!.. கண்மணி.

PPattian : புபட்டியன் said...

கவிதை ரெண்டுமே சூப்பர்..

எறும்பு பிஸ்கட் சுமக்கும் படம் அழகோ அழகு..

படத்துக்கு கவிதையா? கவிதைக்குப் படமா?

கண்மணி/kanmani said...

நன்றி தோழி

நன்றி அமைதி நம்பிக்கையில்லைனா வாழவே முடியாது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை படம் ரெண்டுமே ந்ல்லா இருக்கு..ரொம்பவும் அழகா இருக்காங்க ஜோடி...

கண்மணி/kanmani said...

புபட்டியன் நானொன்னும் ஆட்டோ அனுப்பலையே :))))))))))[பின்னூட்டம் போட].நன்றி

நிச்சயம் 2 படமும் பார்த்த பிறகுதான் கவிதை [:( ] பொங்குச்சு.இது தெரிஞ்சா எறும்பு பிஸ்கட்டுக்கு அடியிலேயே செத்துப் போகலாம்.

Nishanth said...

PUKIPPADA UTHAVI FFO(FUN AND FUN ONLY)....?

கண்மணி/kanmani said...

@Nishanth

yes thank u

ஜாக்கி சேகர் said...

இரண்டாவது கவிதை அருமையாக இருந்தது...

ராமலக்ஷ்மி said...

//எத்தனை கடினம் என்பதல்ல
வாழ்க்கை
எப்படி வாழ்கிறோம் என்பதே
நம்பிக்கை//

அருமை.

Chitra said...

தொட்டு அறிவதில்லை.
உணர்ந்து வாழ்வதுதான் காதல்.......

உங்கள் கவிதையை போலவே உள்ள அழகிய வாழ்க்கை தத்துவம்.

நசரேயன் said...

//விழுதுகள் விட்டு வேறூன்றிப் போனதாலே
மனிதம் வாழ்கிறது
இன்னமும்//

ம்ம்ம்

புலவன் புலிகேசி said...

//தொட்டு அறிவதில்லை
உணர்ந்து வாழ்வதுதான் காதல்//

உண்மைங்க கண்மணி...

thenammailakshmanan said...

//தொட்டு அறிவதில்லை.
உணர்ந்து வாழ்வதுதான் காதல்.......//

மிக அருமை கண்மணி

vidivelli said...

good,,,,,,,,,,,

அப்பாவி தங்கமணி said...

சரியா சொன்னீங்க கண்மணி. பாதிக்கப்பட்டவர்களை வெளிச்சம் இட்டு காட்டி பணம் செய்வதை விட காரணகர்த்தாக்களை கூண்டோடு அழிக்க வேண்டும். சிறந்த பதிவு

Post a Comment