PAGE LOAD TIME

பிரேமானந்தா டூ நித்தியானந்தா

து போன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் பெண் பதிவர்கள் தொடுவதில்லை.பெண்ணுரிமைன்னு போராடும்போது பிரச்சினையில் பெண் பங்கு ஆண் பங்குன்னு இருக்கான்னு வாதம் எழுலாம்.
எத்தனைத் துணிச்சலான பெண்ணும் இது போன்ற படுக்கையறை சம்மந்தப் பட்ட செய்திகளில் விமர்சனம் செய்யத் தயங்கக் கூடும்.
கடந்த இரண்டு நாளாக தமிழ்மணம் முழுக்க நித்தியானந்தா விண்ணைத் தாண்டி வந்து இடம் பிடித்து விட்டார். அவரைப் போல அவரென்ன அவர்...... வயதிலும் குணத்திலும் சிறிய அவனைப் போல போலிகள் தோலுரித்துக் காட்டப் பட வேண்டும் தான்.
ஒவ்வொருவர் பதிவிலும் ஒவ்வொரு விதமான விவாதம் எடுத்து வைக்கப் பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த கோபமும் அந்த போலியின் மீதும் ஊடகத்தின் மீதுமே மையம் கொள்கிறது.
நேற்று 10.30 மணி 'நிஜம்' செய்தியில் நடிகை எப்படி மாட்டினார் யார் வீடியோ எடுத்தது இதன் பின்னணி என்ன என ஸ்கோரோலிங் செய்தி போட்டு விட்டு மீண்டும் அந்த வீடியோவையே இன்னும் விலாவரியாக எடிட் செய்ததையும் சேர்த்து ஓட விட்டார்களே தவிர கடைசி வரை மர்ம முடிச்சு அவிழவே இல்லை.
7.30 மணிக்கும் 8 மணிக்கும் போட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் தவற விட்டவர்களுக்கு'மிட் நைட் ஷோ' போட்டதால் பார்க்க முடிந்து கதி மோட்சம் கிடைத்தது.அசிங்கமேயானாலும் மீடியாக்களில் வராதவரை அதிகம் பேர் இதைப் பார்க்கவோ நம்பவோ வாய்ப்பில்லை என்பதால் திரும்பத் திரும்ப காட்டும் அவலத்தைப் பொறுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த பல கேள்விகளைப் போல என் மனதில் எழுந்தவைகளையும் இங்கு பதிவாக்குகிறேன்
இதற்கு எழக்கக்கூடிய விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை.
முதலில் இப்படிப் பட்ட போலிச் சாமியார் எப்படி உருவாகிறான்.இதென்ன நமக்குப் புதிதா?
எனக்குத் தெரிந்தவரை சாமியார்கள்னா தமிழ் சினிமா போல உடம்பைச் சுற்றி மண் புற்று வைத்திருக்க கண்மூடி தியானம் செய்யும் முனிவர்கள்தான்.அடுத்து அரவிந்தர்,இரமணர் போன்றவர்கள்.
முற்றும் துறந்தவனுக்கு கோடிக் கணக்கில் பணமோ அதி நவீன வசதிகளோ மாளிகைகளோ அடி பிடி ஆட்களோ ஏன்.
மன்னாதி மன்னனாக இருந்த கௌதமரே வசதிகளையும் ஆசைகளையும் விட்டொழித்துத்தான் புத்தனானார்.
பேச்சாற்றலும் பணமுமே ஒருவரை கடல் கடந்த புகழோடு பிரபலமாக்கி விடுகிறது.அறிவுரைகளையும் அருளாசிகளையும் கேட்பதோடு நிறுத்திக் கொண்டால் போதுமே.கணக்கில் வராத பணத்தை கொட்டிக் கொடுத்து அவர்களை வளர்த்து விடுவதும் மக்கள் தான் இன்று செருப்பாலடித்து கொடும்பாவி கொளுத்துவதும் அவர்கள்தான்.
நம் மக்களுக்கு எல்லாமே ஏதாவது ஒரு extreme.
பிரேமானந்தா விஷயத்துக்குப் பிறகு இதை உணர்ந்திருந்தாலே அதற்கப்புறமும் வருடத்திற்கு நாலு போலி சாமியார் உருவாக முடியுமா?
நிதி நிறுவன மோசடின்னு டிவியில பாத்தாலும் நாம எங்காச்சும் சீட்டு போடத்தானே செய்யறோம்.அவரு மாதிரியில்லை.இவரு நல்லவரு ன்னு கற்பித்துக்கிட்டு.
சாமியாரா இருந்துட்டுப் போகட்டும்.புலன் அடக்க முடியாதவன் குடும்ப சகிதமா சாமியாரா இருக்கட்டும்.கடவுள்களே அப்பா அம்மா அண்ணன் தங்கை சித்தப்பா மாமி மச்சினன் என இருக்கும் போது இவர்களை வேண்டாம் எனச் சொல்லப் போவதில்லை.
ஆனால் 'பிரம்மச்சர்யம்' 'தியானம்' னு சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டே ஒரு பக்கம் 'தேவநாத' வேஷம் போடுபவர்கள் தோலுரித்துக் காட்டப் படனும்.
நேத்து சன் டிவியில ' நான் திருவண்ணாமலையில் பிறந்தவன் அந்த தலம் ஒரு 'spiritual incubator' மாதிரி.ஞானிகள் தங்கள் உடம்பை விட்டுட்டு ஆன்மாவில் கலக்கும் இடம்' னு நித்யாவின் அருளுரை கிளிப்பிங்.
துறவியாகப் போகிறவர்களுக்குன்னு எந்த விதிமுறைகளும் ஏன் இல்லை.
ஆளாளுக்கு தங்க வெள்ளி வைரக் கோயில்கள் கட்டுவதும் கல்விக்கூடங்கள் தியான மண்டபங்கள் மருத்துவ மனைகள் கட்டவும் யார் அனுமதிப்பது?
இவ்ர்களின் அளவற்ற சொத்துகளுக்கெல்லாம் முறையான கணக்குகளோ அல்லது வரியோ செலுத்தப் படுகிறதா?
சாமியாராப் போனவங்க அப்படியேப் போய் போதனையோடு நிறுத்திக்கனும்.அரசியலிலும் இப்படி பொதுச் சேவைகளிலும் மூக்கை நுழைக்க ஏன் அனுமதிக்கிறோம்.
இதையெல்லாம் நாமே வளர்த்து விட்டிருக்கிறோம்
இன்னும் வளர்த்தும் விடுவோம்.
குழி மாற்றுத்திருவிழா
தலையில் தேங்காய் உடைத்தல்
உயிருக்கு ஆபத்தான ஜல்லிக் கட்டு
இப்போ புதுச 'கவாளம்' னு வாயாலேயே பக்தைக்கு வாழைப்பழ பிரசாதம் ஊட்டும் கதை வெளிவந்திருக்கிறது கீழ விழாம சாப்பிட்டல் நினைத்தது நடக்குமாம்.
இது எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கும்.
சென்சிடிவான இந்தப் பிரச்சினைகளைக் கையில் எடுத்து வில்லங்கம் தேடிக் கொள்ள எந்த அரசும் துணியாது.
முடிந்தால் தங்களுக்கு சாதகமான விஷயங்களுக்கு மீடியாவில் பப்ளிசிட்டி தந்து வியாபாரம் செய்வார்கள்.
சிவசங்கர் பாபாவுக்கு ஒரு சானல் ஒரு நேரம்
சத்யசாயிக்கு ஒரு சானல் ஒரு நேரம்
நித்தியானந்தாவுக்கு ஒரு மீடியா
சுதபோதானந்தாவுக்கு ஒரு மீடியா
கல்கி பகவானுக்கு ஒரு சேனல் ஒரு நேரம்னு
மீடியாப் போட்டியில் ஆளுக்கொரு ஆஸ்தான வாஸ்து நிபுணர் அதிர்ஷ்டக்கல் சோதிடர் போல ஆகிப் போயிடுச்சி.இது கடைகோடியில் இருக்கும் மக்களுக்கும் போய்ச் சேர்ந்து ஆகா இவருகிட்டப் போன கேன்சர் குணமாகும் வேலை கிடைக்கும் நல்லது நடக்கும் னு விரதம் இருந்து பாத யாத்திரை கிளம்பிடறாங்க.
இந்த நித்தியானந்தாவோ அல்லது வேறு ஏதாவது ஆனந்தாவோ எக்கேடும் கெட்டுப் போகட்டும்.என்னோட வருத்தம் அந்தப் பாழாய்ப் போன பெண்மீதுதான்.
தனிப்பட்ட வாழ்க்கையின் வேதனைகளுக்காகவோ ,வசதிகளுக்காகவோ எதற்காகவேனும் இருந்தாலும் அவள் விருப்பப்பட்டு ஒருவருடன் போனது அவளின் உரிமை எனும்போது அவளை முன்னிறுத்தி அம்பலப் படுத்துவது ஏன்?
நடிகையாக இல்லாமல் அது ஒரு உயர் அதிகாரியின் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிக் காட்டியிருப்பார்களா?
யாராகவாவது இருக்கட்டும் என்று மக்களின் யூகத்திற்கே விட்டு விட்டு அவளை மறைத்த படியே இதைக் காட்டியிருக்கலாம்.
சந்தனமுல்லை     கேட்பது போல் யார் யோக்யவான்கள் அவர்களே கல்லெறியட்டும்.
மூனு நாலு கல்யாணம் செய்து கொள்ளும் நடிகைகளையோ நடிகர்களையோ அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறோம்.
ஒரே கல்யாணம் செய்து கொண்ட நடிகை யாரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்ததாக சான்று இருக்கா?
காதலனுக்காக கணவனையே கொலை செய்யுமளவுக்கு சாதாரண குடும்பத்துப் பெண்களே ஒழுக்கமற்றுப் போன கதைகள் தினமும் அரங்கேறும்போது
நடிகையாகப் போனதால் விருப்பப்பட்டே நடக்கும் அவளின் அந்தரங்கத்தை வெளிப்படுத்த யார் அதிகாரம் தந்தது.நடிகையானாலும் அவளும் பெண்தானே
காமமும் படுக்கையறை நிகழ்வும் தனி மனித உரிமை.சட்டப் படி அதை கேட்க முடியாது .ஆனால் பிரம்மச்சர்யம் என்ற போர்வையில் பிரசங்கம் செய்யும் ஒருவர் இப்படி பொதுமக்களை ஏமாற்று வதை மனசாட்சிப் படி தப்புன்னு சொல்லவே இதை சொல்கிறோம்னு சொல்கிறது சேனல்.செய்யுங்கள்.
ஆனால் நடிகையின் அடையாளத்தைக் காட்டியிருக்க வேண்டாம்.
போலிச்சாமியாரைத் தோலுரிக்கும் நோக்கமென்றால் பலியானவர் புகார் தராதவரையில் அவரது அனுமதியின்றி இதை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.

வேர்களை செல்லறிக்க விட்டு விட்டு கிளைகளைக் கழிப்பதால் பயனில்லை.

இன்னும் இந்த வரிசையில் யாரேனும் வரக் கூடும்.அதுவும் கொஞ்ச நாளைக்கு மீடியாக்களில் பரபரப்பாகி மறந்து போகும் அடுத்து வரும் நிகழ்வில்..

தனிப்பட்ட வாழ்வில் தோல்வியுற்று இம்மாதிரி வழியில் நிம்மதி தேடும் சொர்ணமால்யாக்களோ ரஞ்சிதாக்களோ...நம் டார்கெட் இல்லை.
முடிந்தால் இனியொரு காமச் சாமி கிளம்பாலிருக்க வழி செய்யுங்கள்

27 மறுமொழிகள்::

Thenammai Lakshmanan said...

நல்ல நெத்தியடி பதிவு கண்மணி

Robin said...

நியாயமான கருத்துகள்.

Jackiesekar said...

போலிசாமியாரை தோல் உரிக்க வேண்டும் என்றால் பலியானவர் புகார் கொடுக்கும் முன் என் இந்த வெளிப்பாடு.. நியாயம்தான்...

துளசி கோபால் said...

அலசல் அருமை கண்மணி.

இன்வேடிங் த ப்ரைவஸிதான் இந்த வீடியோ படம். நேத்து சன் தொலைக்காட்சியில் ஏதோ க்விஸ் ப்ரோக்ராம் போல அந்த 'ஆர்' யார்ன்னு ஏழரை மணிக்குச் சொல்வோமுன்னு எழுத்துவரி ஓடிக்கிட்டே இருந்தது. அப்புறம் ஏழரைக்குப் பெயர் சொன்னாங்க. அண்ணன் வீட்டுக்குப் போயிருந்ததால்
எனக்கு திவ்ய தரிசனம் ஆச்சு. இல்லேன்னா ..... நாந்தான் டிவி பார்க்கற வழக்கம் இல்லையே.

இதுலே இன்னொரு விஷயமும் இருக்காமே. இந்த ஆசிரமத்துக்குன்னு நல்ல ப்ரைம் லொகாலிட்டியில் இருக்கும் இடம் 'யாரோ பிரமுகரின்' கவனத்தில் விழுந்துருக்காம்.

இதைப்பற்றி மற்ற சானல்கள் ஒன்னும் மூச்சு விடலை. அதனால் 1 + 1 = 2 ஆம்!!!!

கண்மணி/kanmani said...

இதுவரை பின்னூட்டம் போட்டவர்களுக்கும் இனி வரும் பின்னூட்டங்களுக்குமான என் பதில்.
பின்னூட்டம் அதற்கு பதில் பதிலுக்கு பதில் நோக்கமல்ல என் பதிவு.
துளைசியக்கா சொன்னது போல இதன் பின்னணி அரசியல் எனக்குத் தெரியாது.தேவையுமில்லை.
மகளிர் தினம் வரப் போகின்ற இந்த வாரத்தில் ஒரு பெண்ணின் திரைமறைவுச் சுதந்திரத்தில் தலையிட யார் உரிமையளித்தது என்ற ஆதங்கம் தான் இந்தப் பதிவு.

manjoorraja said...

இந்த முழு நாடகமுமே ஒரு திட்டமிட்ட சதிதான். ஊடகங்களுக்கு இது ஒரு பெரிய வியாபாரம், பணம், விளம்பரம் அவ்வளவே. சம்பந்தப் பட்ட ஆசாமி தப்பித்துவிடுவார் தன் பணம் கொண்டு. ஆனால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு பிரச்சினை தான். காலம் அனைத்தையும் மாற்றிவிடும். புவனேஸ்வரி இப்பொழுது ஒரு கட்சியின் முக்கிய பதவியில் இல்லையா?

இங்கு நடிகையின் மீது எந்த தவறும் தெரியவில்லை. அவர் விருப்பப்பட்டு ஆசாமியிடம் உறவுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதுவே வினையாகிவிட்டது.

சந்தனமுல்லை said...

உங்கள் கோபம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது, கண்மணி! கடைசியில் சொன்னது உறைத்தால் போதும்!

Unknown said...

இனியொரு காமச் சாமி கிளம்பாலிருக்க வழி செய்யுங்கள்]]

செய்வோம் ...

Anonymous said...

ஷோபாவை தற்கொலை செய்ய வைத்துவிட்டு, மவுனீகாவை வைத்துக்கொண்டு, அர்ச்சனாவுக்கு ரூட்டு விடும் பாலுமகேந்திரா போன்றவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
எல்லார் கவலையும் ரஞ்சிதா, நயனதாரா மேல்தான்.

பாலாஜி சங்கர் said...

"வேர்களை செல்லறிக்க விட்டு விட்டு கிளைகளைக் கழிப்பதால் பயனில்லை."

தீர்வை நம்மிடம் வைத்து கொண்டே செயல் படுத்த வேண்டும்

கலை said...

நீங்க சொல்லியிருக்கும் விசயத்தை நேத்து எழுத ஆரம்பிச்சேன். 'எய்தவன் இருக்க அம்பை நோவானேன்' அப்படின்னு சொல்லுற மாதிரி, சில இடங்கள்ல, கள்ளச் சாமியின் ஏமாற்றுத்தனத்தைப் பத்தி கண்டுக்காம, நடிகையையும், திரை உலகையுமே முழுவதுமாய் குற்றம் சாட்டி ஒரு அறிக்கை.

நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கிறீங்க. ஆனா உறைக்கிறவங்களுக்கு உறைக்குமா?

Unknown said...

<<<
சிவசங்கர் பாபாவுக்கு ஒரு சானல் ஒரு நேரம்
சத்யசாயிக்கு ஒரு சானல் ஒரு நேரம்
நித்தியானந்தாவுக்கு ஒரு மீடியா
சுதபோதானந்தாவுக்கு ஒரு மீடியா
கல்கி பகவானுக்கு ஒரு சேனல் ஒரு நேரம்
>>>

:) நல்ல அட்வைஸ்


<<<
இன்னும் இந்த வரிசையில் யாரேனும் வரக் கூடும்.அதுவும் கொஞ்ச நாளைக்கு மீடியாக்களில் பரபரப்பாகி மறந்து போகும் அடுத்து வரும் நிகழ்வில்..
>>>

உண்மை...

சாந்தி மாரியப்பன் said...

நம்ம மக்களைச்சொல்லணும்.. அவரவர் பிரச்சினைகளுக்கான தீர்வு அவரவர் கையில்தான் இருக்குங்கிறதை மறந்துட்டு,இம்மாதிரி சாமியார்களை தேடிப்போறாங்க.காணிக்கையா கொட்டுறாங்க. பத்தும் செய்யும் பணம் பதினொன்னா சாமியாருங்களை இதையும் செய்ய வெச்சிடுது :-((

கோமதி அரசு said...

நல்ல பதிவு கண்மணி.

மங்கை said...

aatha...eppidi irukkeeenga...

nammalai ellaam niyaabagam irukkungla....

namma mediakkalukku innum neriya vilippunarvu venum.....aana eppo thaan purinjukka poraangalo theriyalai...already it is too late...uarvugal atra makkal

கண்மணி/kanmani said...

நன்றி தேனம்மை
நன்றி ரானின்
நன்றி ஜாக்கி சேகர்

நன்றி துளசியக்கா

கண்மணி/kanmani said...

நன்றி மஞ்சூர் ராஜா புவனேஸ்வரி கட்சியில் சேர்ந்திடுச்சி.ரஞ்சிதா மனநிலை எப்படியோ.தப்பான முடிவுக்குப் போயிடக்கூடாது.

நன்றி முல்லை

நன்றி ஜமால் செய்யனும் ஏதாச்சும்.

கண்மணி/kanmani said...

சின்னம்மிணி பாலுவுக்கு அர்ச்சனாவுக்கு பிறகு ஈஸ்வரி ராவ்

நன்றி கலை இதுல அந்த நடிகையை நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் போறாங்களாம்.:))))))))

நிச்சயம் பாலாஜி நமக்கு நாமேதான் தீர்வு.இவனுங்களை நம்பக் கூடாதுன்னு அறிவுக்கு எட்டனும்.

கண்மணி/kanmani said...

மஸ்தான் இன்னும் நிறைய சாமிங்க பேரு மறந்து போச்சுது.
பசுவுக்கு பூஜை பண்ணும் புவனேஸ்வரி சாமி
ஒரு வடநாட்டு சாமி...இருக்கிற எல்லாச் சேனலையும் ஏதாவது ஒரு சாமி அல்லது இராசிக்கல் காரர் குத்தகை எடுத்திருப்பார்.
இல்லாவிட்டால் ஒரு ஹோமியோ/ஆய்ர்வேதிக் லேகிய டாக்டர்

கண்மணி/kanmani said...

சரியாச் சொன்னீங்க அமைதி தப்பும் நம்மகிட்டதான் தீர்வும் நம்மகிட்டதான்

நன்றி கோமதியம்மா

ஆத்தா மங்கம்மா உங்களுக்குத்தான் நம்மள மறந்துடுச்சு.பெரிய பதிவர்கள் பதிவு மட்டும்தான் படிப்பீக.முத்துலிட்டகூட உங்களை அவந்தியை விசாரிச்சேனே

Chitra said...

நல்ல அலசல் கட்டுரை.

ஆனால் - மக்கள், இதை கூட ஒரு சினிமா விமர்சனம் மாதிரி எடுத்துக்கிட்டு, அடுத்த ஷோ வுக்கு ரெடி ஆய்டுவாங்க.

கோபிநாத் said...

ரைட்டு..!

Anonymous said...

இது ஊடக விபச்சாரம்(தன் வியாபாரத்துக்கு கொள்கைய விற்று விடும் ) ....

தோழி said...

எது எப்படியோ உங்க கருத்துக்கள் நச்சுன்னு இருக்கு...

இனியும் மக்கள் திருந்துவாங்களா என்பதே கேள்விக்குறி?

மங்கை said...

ஆஹா கண்ணே மணியே... உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்..பெரிய பதிவர்களை த்தான் படிக்கறேன்னு சொன்னீங்கலே அதச் சொன்னேன்...அந்தே... நான் எந்த காலத்துல ஆத்தா பதிவுகளை படிச்சேன். உங்க பதிவே இன்னைக்கு தான் பார்க்குறேன்... தமிழ்மணம் ஓபன் பண்ணி மாதங்கள் நெம்ப ஆச்சு ஆத்தா... நம்ம அறிவுக்கு எட்டாத விஷ்யங்கள்..இப்படி பெரிய பதிவுகளை படிக்குறது... :)) நீங்க எழுதறது தெரிஞ்சு இருந்தா வந்திருபேனே...இனி வந்துடுவேன்ல

Anonymous said...

வரவேற்கத்தக்க கருத்து
இதை நான் உங்கள் Web Address உடன் faceBook l இட்டுக்கொள்கிறேன்
இதை நிறுத்துவதாயின் ஒவ்வொரு கோவில்களிலும் கட்டாயக் கூட்டம் நடத்தி வேதப் புத்தகங்கள் கூறும் எமது மதத்தை தெளிவு படுத்த வேன்டும்.


It is attempt to defame him and all hindus,
please dear brothers and sisters do not write bad comments about him(or any other fake)

கேரளாக்காரன் said...

நடிகை ஒருவரோடு படுத்திருந்ததற்காக நித்தியை கைதுசெய்ய வேண்டும் எனச் சொல்லும் மக்களை முதலில் கைது செய்து உள்ளே தள்ளுங்கள், இந்த மானம் கெட்ட மடையர்களின் மூட நம்பிக்கைகளால் தானே இந்த காலி சாமியார்கள் பெருத்து கொழுத்து கிடக்கிறார்கள். தவறு செய்தவனை விட தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனையாமே? மக்களே உங்களுக்கு என்ன கருமத்திற்காக தண்டனை தரலாம்?

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)