PAGE LOAD TIME

பெண்ணாய்ப் பிறந்திடவே........

கழுத்தில் விழுந்த பந்தம்
கண்ணுக்குத் தெரியாத
விலங்குகளாய் மாறும்
அடிமைத்தனம் வேண்டாம்
வாழ்த்துக்களும் பூச்செண்டுகளும்
வேண்டாம்
பொன்னகையும் புகழும்
வேண்டாம்
இதழோரத்துப் புன்னகை
ஒன்றே போதும்
தவறுகளை பொருட்படுத்தாத
பெருந்தன்மை போதும்
புலம்பலே ஆனாலும்
உணர்வுகளை மதிக்கும்
தாராளப் பொறுமை போதும்
ஆஹா அருமையென
நல்லவைகளை அங்கீரிக்கத்
தயங்காத மனது போதும்
துன்பத்தில் தோள்கொடுக்கும்
தோழமை போதும்
எல்லாம் கிடைக்குமெனில்
இன்னொரு முறையும்
பெண்ணாய்ப் பிறந்திடவே
மாதவம் செய்திடுவேன்

22 மறுமொழிகள்::

அமைதிச்சாரல் said...

அருமை கண்மணி.. எல்லாம் கிடைத்தபின் அதை துஷ்பிரயோகம் செய்ய நினைக்காத மனமும் வேண்டும்.

சந்தனமுல்லை said...

Gud one!

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"நல்லவைகளை அங்கீரிக்கத்
தயங்காத மனதும்...
துன்பத்தில் தோள்கொடுக்கும்
தோழமையும்.."

இவறறைவிட
நிறைவான சுகம்
வேறெலில்
இருக்க முடியும்.

அருமையான கவிதை.

கண்மணி/kanmani said...

நன்றி அமைதிச் சாரல்..துஷ்பிரயோகம் செய்வது யார்?பெண்ணென்றால் அது 100 க்கு 1 சதமே இருக்கலாம்

கண்மணி/kanmani said...

நன்றி முல்லை

நன்றி டாக்டர் முருகானந்தம்.மிக எளிமையான வரிகள்தான்.கவிதைன்னு கூட சொல்ல முடியாது.ஆனாலும் இவைதானே பெண்ணினத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள்.இவை தவிர வேறென்ன வேண்டும் எமக்கு

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை கண்மணி!

நட்புடன் ஜமால் said...

துன்பத்தில் தோள்கொடுக்கும்
தோழமை போதும் ...

நன்று.

வாழ்த்துகள்

மாதேவி said...

நல்ல கவிதை.

புதுகைத் தென்றல் said...

பூங்கொத்துக்கள் கண்மணி

கோமதி அரசு said...

கண்மணி,கவிதை அருமை.
நீங்கள் கேட்டவை எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

மகளிர் தின வாழ்த்துக்கள்!

கதிரவன் said...

எளிமையான வார்த்தைகளில் நல்ல கவிதை.

மகளிர் தின வாழ்த்துக்கள் டீச்சர் !

//..துஷ்பிரயோகம் செய்வது யார்? பெண்ணென்றால் அது 100 க்கு 1 சதமே இருக்கலாம் // எனக்கென்னவோ,நீங்க சொல்லி இருக்கற 'எல்லாம்' தர்ற துணையை, அதே அன்புடன் கவனித்துக்கொள்ளும் பெண்களை விட, அவனை இ.வா. ஆக்கும் பெண்கள் சதவிகிதம் அதிகம்னு தோணுது :-)

Chitra said...

மென்மையாக கவிதையில் கருத்துக்கள் சொல்லி இருப்பது அழகு.

புலவன் புலிகேசி said...

அருமை கன்மணி...வாழ்த்துக்கள்

thenammailakshmanan said...

ரைட்டு கண்மணி நல்லா சொன்னீங்க கிடைக்குமா பெண் போன்ற அன்புருவம்

யாதவன் said...

அருமை அழகு.

கண்மணி/kanmani said...

நன்றி இராமலஷ்மி
நன்றி ஜமால்
நன்றி மாதேவி

நன்றி புதுகைத் தென்றல்

கண்மணி/kanmani said...

கோமதிம்மா நன்றிம்மா.பெண்ணுக்கு அணிகலன் அன்பும் அரவணைப்பும் கருணையும்தான்.

கதிர் உங்க கருத்தை மறுக்க முடியாத சூழல்தான் இன்றைய தினசைகளிலும் நாளிதழ்களிலும் காணக்கிடைக்கிறது.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

கண்மணி/kanmani said...

நன்றி சித்ரா
நன்றி புலிகேசி
நன்றி யாதவன்
நன்றி தேனம்மை பெண்மைக்கு இணை பெண்மையே

vidivelli said...

நல்லா விளாசியிருக்கிறீங்க........
பிடிச்சிருக்கு........நம்ம பக்கம் வாறதாய் தெரியேல்ல!!!!!!!
புதிய அபிமானி........

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு...நல்ல வேண்டுதல்.

அன்புடன் மலிக்கா said...

கவிதை அருமை கண்மணி.

நிச்சியம்
மாந்தராய் பிறந்திட
நல் தவம்செய்திடவேண்டும்

arul said...

nice

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)