இப்படியாக
அப்படியாகவென
யாராகவும் படைக்கப் படவில்லை
எப்படியாகவும் ஆகலாம்
யாராக வேண்டுமென்பதை
தாமாகவே
தீர்மானிக்கச் சொல்லி
ஒவ்வொரு கணத்திலும்
காதுகளில்
கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை
விதிக்கப் படுவதில்லை
நாமாக வகுத்துக்கொள்வதே
வாழ்க்கை
கிடைத்ததோடு சந்தோஷிப்பவன்
சாமான்யன்
தேடலை நீட்டிப்பவன்
சாதனையாளன்
சித்திரம் இல்லாச் சட்டமாய்
காத்திருக்கிறது வாழ்க்கை
அன்பு பாசம் நேசம்
காதல் கடமை கருணை
நட்பு தியாகம் தேடல் என
வண்ணங்களின் கலவை குழைத்து
ஓவியம் நிரப்பி காவியமாக்க
நம் காதுகளில்
கிசுகிசுத்துக் கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை










23 மறுமொழிகள்::
வாழ்க்கை பற்றிய நல்ல கருத்துக்களுடன் கவிதை நன்று.
அருமை!
@நாமக்கல் சிபி
பாக உன்னாரா.நன்றி
@மாதேவி
நன்றி மாதேவி
அன்பு பாசம் நேசம்
காதல் கடமை கருணை
நட்பு தியாகம் தேடல் என
வண்ணங்களின் கலவை குழைத்து...
அழகான வண்ணங்களில் வடிவெடுத்த கவிதை!
//விதிக்கப் படுவதில்லை நாமாக வகுத்துக் கொள்வதே வாழ்க்கை//
அருமை ,வாழ்க்கையின் கிசுகிசு.
அருமை!
//விதிக்கப் படுவதில்லை
நாமாக வகுத்துக்கொள்வதே
வாழ்க்கை//
அழகா சொன்னிங்க கண்மணி. வாழ்த்துக்கள்
கண்மணி டெம்ளேட் சூப்பர்..
கலவை குழைத்து ஓவியம் நிரப்பி காவியமாக நல்லா இருக்கு கண்மணி..
நன்றி ரிஷபன்
நன்றி கோமதியம்மா
நன்றி யாதவன்
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி முத்து.இது நல்லருக்குன்னு சொல்லி முடிப்பதற்குள் அடுத்த டெம்ப் மாத்திடுவேனாக்கும்.
//சித்திரம் இல்லாச் சட்டமாய்
காத்திருக்கிறது வாழ்க்கை//
ஆமாம் கண்மணி, அதிலே ஓவியம் நிரப்பிக் காவியமாக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மிக அருமையான கவிதை.
super.
பிசு பிசுத்துப் போக விடாது... மனதை குஜாலா வச்சிகிட்டாலே போதுமே.
தேடலை நீட்டிப்பவன்
சாதனையாளன்//
அருமை கண்மணி
நல்லாயிருக்கு!
ரசிக்கும் கிசுகிசுப்பு. அழகு கண்மணி
//சித்திரம் இல்லாச் சட்டமாய்....//
கலக்கறீங்க அம்மணி
அம்மணி அடுத்தது எப்போ? தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க
ஆகா அருமை அருமை...
ரொம்ப பிடிச்சிருக்குங்க....
நன்று.
@thenammailakshmanan
RTER
//கிடைத்ததோடு சந்தோஷிப்பவன்
சாமான்யன்
தேடலை நீட்டிப்பவன்
சாதனையாளன்//
கவிதை சூப்பர் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//கிடைத்ததோடு சந்தோஷிப்பவன்
சாமான்யன்
தேடலை நீட்டிப்பவன்
சாதனையாளன்//
கவிதை சூப்பர் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல கிசுகிசுப்பு....
பல வரிகள் அட. போட வைக்கிறது.
தொடருங்கள்
Post a Comment