காற்று வரக்
கதவைத் திறக்கச் சொல்லி
சந்தோஷம் வர
மனதைத் திறக்கச் சொன்னவன்
மூடிய அறைக்குள்
மஞ்சத்தில் கிடந்தான்
நடிகையுடன்
வீட்டை விட்டு வந்து
வெள்ளையுடுத்தி சந்நியாசியானவன்
போதையூட்டப் பட்டு
உருண்டு புரண்டு அரற்றினான்
அம்மா பகவானேயென்று
வாயோடு வாய் வைத்து
மென்று தின்ற வாழைப்பழம்
பிரசாதமாக ஊட்டப்பட்டது
பிள்ளைவரம் கிடைக்குமாம்
கையில் கொடுத்த கூழாங்கல்
சில பல தந்திரங்களுக்குப் பின்
கற்கண்டாய் மாறிப் போனது
வாழ்க்கை இனிக்குமாம்
ஆசிர்வதிக்கப் பட்ட
மகான் என்பதால்
நாவால் நக்கி நக்கியே
குணமாகி விடுதாம்
நாள்பட்ட வியாதியும் புண்ணும்
செலவில்லாத
சிக்கன வைத்தியம்
வசதியானவனுக்கு ஆன்மீக குரு
வக்கத்தவனுக்கு
வாழவைக்கும் தெய்வம்
மாட்டியது கொஞ்சம் சாமி
என்று மாட்டப் போகுதோ
மீதி சாமி
வணங்கி நிற்க அப்பாவிகளும்
வளர்த்து விட மீடியாக்களும்
இருக்கும் வரை
கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள்
புதுப் புது சாமியார்கள்
புதுப் புது அவதாரங்களில்









32 மறுமொழிகள்::
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு. வாழ்த்துக்கள்
காலத்துக்கேற்ற கவிதை. நச் னு இருக்கு.
நல்லா சொல்லி இருக்கீங்க.. யார்ருக்கு புரியுது..:(
:)
தேடல் எது என்று அறியாமல்/தெரியாமல் போய் மாட்டிக்கொண்ட சாமியார்கள் :( அவர்களை நம்பியும் ஒரு கூட்டம் பாலோவர்ஸ் !
ஏமாற ஆளிருக்கும் வரை ஏமாத்தவும் ஆளிருக்கும் :)
//வணங்கி நிற்க அப்பாவிகளும்
வளர்த்து விட மீடியாக்களும்
இருக்கும் வரை
கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள்
புதுப் புது சாமியார்கள்
புதுப் புது அவதாரங்களில் //
நிச்சயமாக..........
super kavithai timely one
LK
http://vezham.co.cc
நாட்டின் அவலங்களை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்.பக்திதியே ,இப்படியென்றால் பாக்கியெல்லாம் எப்படி இருக்கும்.....நினைக்கவே பயமாக இருக்கிறது
ம்ம்ம்....
அவ-தா-ர்கள்
நல்லா சொல்லியிருக்கீங்க கண்மணி.
@Madurai Saravanan
இது லேட் இல்லீங்க.புதுசு புதுசா வரும் செய்திகள்
@Chitra
நன்றி சித்ரா
@தமிழ் பிரியன்
புரிஞ்சா இவனுங்க ஏன் இப்படி கூத்தடிக்கப் போறனுங்க
@ஆயில்யன்
பாலோயர்ஸ் இல்லை அடிபொடிகள்
@சின்ன அம்மிணி
ஆம்
@Sangkavi
பாக்கத்தானே போறோம்
@LK
நன்றி
@goma
பக்தி என்பது எதுன்னு புரியாதவரை சிக்கல்தான்
@கோபிநாத்
ம்ம்ம்ம்ம்
@நட்புடன் ஜமால்
அவ-தா-மாட்டிய சுண்டெலி
@ராமலக்ஷ்மி
ம்ம்ம்
என்னத்த சொல்லி
என்னத்த செய்ய...
நான் தான் ஆரம்பத்தில இருந்து சொல்லிகிட்டு இருந்தேன். யாரும் கண்டுக்கலை!
hello
you can post your poems on www.thalaivan.com
முழு கவரேஜ் கொடுத்திட்டீங்க
@Anonymous
நான் இணைக்காமலே என் கவிதை அங்கிருக்கு:(
@அபி அப்பா
யாருகிட்ட சொன்னீங்க :(
ரஞ்சிதா கிட்டவா?:))))))0
@PPattian : புபட்டியன்
பாகம் 2ம் போட மேட்டர் கிடைக்கலாம் :)
நல்லா சொல்லி இருக்கீங்க
Nice...
கவிதை நல்லா இருக்கு.சொல்லிய விதம் அருமை.
nalla kavithai. iniyaavathu nam ma(maa)kkal thirunthattum.kandavai nambi emaaruvathai thavirkattum.
Post a Comment