குடிச்சிட்டு ஓட்டியிருப்பான்
சைடு வாங்கும் போது ஏத்தியிருக்கான்
அரைத் தூக்கத்தில் இருந்தவளை
உலுக்கி எழுப்பியது
ஓட்டுநரின் குரல்
சாலையில் சூழ்ந்திருந்த
கூட்டமும் பரபரப்பும்
விபத்துக்கானது எனப் புரிந்த போது
முதல் கவனம் குழந்தைகளின் பக்கம்
யாரும் பார்க்காதீங்க
அந்தப் பக்கம் திரும்பாதே
பயந்துடுவே
அடிபட்டவர் என்னவாகியிருப்பார்
லேசானதா பலமான அடியா
ஆணா பெண்ணா
பிழைத்துக் கொள்வாரா
கேள்விகள் சூழ்ந்தாலும்
எட்டிப் பார்க்க கலக்கமாயிருந்தது
கடந்து போகும் வண்டிகளை
கை நிறுத்தும் கூட்டம்
என்ன சொல்லிப் போகலாம்
ஃபேமிலியா இருக்காங்க
குழந்தைகள் இருக்காங்க
இதைத்தான் எப்போதும் சொல்லி
தவிர்க்கிறார் ஓட்டுநர்
வேகமெடுக்கும் வண்டியில்
மறந்தும் அந்தப் பக்கம் திரும்பாமல்
எதுவும் ஆகியிருக்கக் கூடாதென
வேண்டுதலோடு மட்டும்
மனசாட்சியை மறந்து
செய்வதறியாத இயலாமையோடு
பத்தோடு பதினொன்றாய்
கடந்து போகும் சந்தர்ப்பங்களில்
ச்சீய்...என்று
என்னை நானே
காறி உமிழ்ந்து கொள்கிறேன்









28 மறுமொழிகள்::
romba naal kalichu intha pakkam vareenga.. nalla irukeengala??
ellarum intha santharpatthai kadanthu irupargal
@LK
வாங்க கார்த்திக்
விடுமுறை/விருந்தினர்
hmm kodutu vachavanga. vidumurailam iruku. ini oru vidhi seyvoim, LKku vidumurai illaienil yaarukum illai
அந்த பிரயாணத்தில் நானும் இருந்ததுபோல் உணர்வு படிக்கும்போது ஏற்பட்டது.
பலருக்கு தைரியம் மிக மிகக் குறைவு.
உண்மை...
:-((((
@Kousalya
நீங்களும் கூட இப்படியொரு தருணத்தில் கடந்து போயிருக்கலாம் நம்மில் பலரைப் போல
@V.Radhakrishnanகுறிப்பாகப்பெண்களுக்கு:((((
@அபி அப்பாம்ம்ம்ம்ம்
@க.பாலாசிஉண்மை சுடுகிறதே
பழகிட்டே வருது...;(
:(
@கோபிநாத்ம்ம்ம்ம்
@PPattian : புபட்டியன்
:((
ரொம்ப யதார்த்தமான கவிதை....நல்லா இருக்கு...
சமயத்தில் உண்மை சுடும்
அதிர வைக்குதுங்க கவிதை.அந்தக்கூட்டத்தில் நானும் இருந்த உணர்வு.
மனதில் ஒரு நெருடல்..... ம்ம்ம்....
உண்மை.
//எதுவும் ஆகியிருக்கக் கூடாதென
வேண்டுதலோடு மட்டும்//
உண்மை கண்மணி.
நிஜம் கசக்கிறது...
:-(
Supper
இது இயலாமையா அல்லது வேறு என்ன என்று விடை தெரியாமல் நானும் ஒவ்வொறுதடவையும் கனத்த மனதோடு இருந்திருக்கிறேன்...இருக்கிறேன்
எங்க போனீங்க இத்தனை நாள்.... நல்ல இருக்கு பதிவு... நிதர்சனம் சுடும் தான்... என்ன செய்ய?
நானும் என்னை பல முறை ...
ஒரு முறை மட்டுமே உதவியிருக்கிறேன் ...
நல்லா ‘ச்சீய்’தான்.
வெட்டுப்பட்ட காவல்துறை அதிகாரியையே வேடிக்கைப் பார்த்த மந்திரிகளுக்கு முன்னால் நாமெல்லாம் எவ்வளவோ மேல்!
Post a Comment