எரிச்சல் தந்த
இரைச்சலும் கூச்சலும்
அலுத்துப் போன
சண்டையும் சமரசமும்
வெறுப்பேற்றிய
உரசல்களும் பூசலும்
வெறித்தத் தனிமையில்
கரைந்து போக
ஆட்டமும் பாட்டும்
கூத்தும் கும்மாளமும்
கிண்டலும் கேலியும்
சிரிப்பும் சிணுங்கலும் மட்டுமே
படிமங்களாய்
நினைவின் அடுக்குகளில்
வெட்கம் விட்டுக்
காத்திருக்கிறது
அடுத்த விடுமுறைக்கும்
புதுப்பித்தலுக்கும்


20 மறுமொழிகள்::
எல்லாரும் ஊருக்கு போயாச்சா டீச்சர்?
அருமை...
இதையெல்லாம் மிஸ் பண்றேனே....
@அபி அப்பா
ம்ம்ம் அதான் ஓரே ஃபீலிங்ஸ்
@அகல்விளக்கு
நன்றி அகல்விளக்கு
@Chitra
ம்ம்ம் சேர்தலும்..பிரிதலும் உறவில் மட்டுமில்லை நட்பு வட்டத்திலும் உண்டு சித்ரா
வீடு வெறிச்சோன்னு இருக்குங்களா?...
நட்புவட்டத்தின் விட்டம் நீளமாகத்தான் இருக்கு
@அமைதிச்சாரல்
ஆமாங்க ஆமாம்...:(
@goma
நான் சொன்னது உறவுகளின் வாண்டுகள்...லூட்டிகள்..
மிஸ் பண்ணும் சித்ராவுக்காக நட்பைப் போற்றச் சொன்னேன்
நான் சொன்னது உறவுகளின் வாண்டுகள்...லூட்டிகள்.
அவர்களும் உங்கள் நட்புக்குள் அடங்கியவர்கள்தானே.
நட்புக்கு வயது வித்தியாசம் ஏது
எனக்கும் உண்டு இந்த அனுபவம்... ரெம்பவே கஷ்டமா இருக்கும் கொஞ்ச நாளைக்கு
அருமை. என்னப்பண்ண ? வருடத்திற்கு ஒரு முறைதான், இப்பொழுது அனைவரும் இணைந்து இருக்க முடிகிறது
சண்டை சச்சரவு இருந்தாத்தா அது குடும்பம் :)
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
அருமை கண்மனி... உங்களுக்கு விருது இங்கே
http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
பெற்றுக்கொள்ளுங்கள்...
நல்ல கவிதை ..பாராட்டுக்கள் !
தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.
நன்றி.
நல்லாயிருக்குங்க கவிதை
அழகாக வடிவமைத்து உள்ளீர்கள் உங்கள் வலைப்பூவை
Post a Comment