இரவோடு கலைந்து போகிறது
காமமும்
காதலும்
உமிழ் நீரோடு விழுங்கப் படுகிறது
வார்த்தையும்
சோகமும்
கண்ணீரோடு கரைந்து போகிறது
ஆசையும்
கனவுகளும்
க
ள்ளக் காதலில் பிறந்ததால் சிசுக்களைக் கொல்லும் தாய்கள்,பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதால் கொல்லப்படும் சிசுக்கள்..கணவன் இறந்து விட்டதால் விஷம் கொடுத்துப் பெற்ற பெண்ணைக் கொன்ற நவீன நல்லதங்காள்...இப்படிச் செய்திகளைப் படிக்கும் போது மனிதம் மட்டுமல்ல தாய்மையும் அழிந்து வருகிறதோ என எண்ணும் நேரம்.இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமா என மலைக்க வைக்கிறார் டாமி வெட்மோர்.ஜூலியானா வெட்மோரின் அம்மா.
