மொத்தப் பதிவுகளும் இங்கே

தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கும்...தவிப்பான பெற்றோர்களுக்கும்

தோ இன்றிலிருந்து +2 தேர்வுகள் ஆரம்பிச்சிடுச்சி.கொஞ்சநாளாகவே எதிர்வரும் தேர்வுகளை எப்படி எதிர் கொள்ளனும் என்பதை பற்றி பத்திரிக்கைகள் மட்டுமல்லாது பதிவுகளும் எழுதுகின்றன.
நாம சும்மா இருந்தா எப்படியென...இந்தப் பதிவு.

தேர்வை எதிர் கொள்வது எப்படி,பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும் எப்படி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் அடிப்படையான விஷயங்கள்.
தேர்வை எப்படி எழுத வேண்டும் எழுதும்போதும் எழுதிய பிறகும் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதுதான் இந்தப் பதிவு.

1.தேர்வுக்கு முதல் நாளே எடுத்துச் செல்ல வேண்டிய பேனா பென்சில் ஸ்கேல் போன்ற தேர்வுக்கான பொருட்கள்,அடையாள அட்டை [ஹால் டிக்கெட்] போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.கடைசி நிமிடத் தேடல் டென்ஷனாக்கி தேர்வு எழுதும் மனநிலையைப் பாதிக்கும்.

2.முடிந்தவரை எழுதிப் பழகிய பேனாவையே பயன்படுத்தினால் விரைவாக எழுத வரும்.புதிதாக வாங்கி எடுத்துப் போவது கிறுக்கினாலோ நம் கை வாகிற்கு சரிவராமல் போனாலோ தொல்லைதான்.எதற்கும் இருக்கட்டுமென அதிகப் படியாக ஒன்றோ,இரண்டோ எடுத்துச் செல்லலாம்.

3.ஆரம்பகட்ட சோதனைகள் இடம் சரி பார்த்தல் எல்லாம் இருக்கும் என்பதால் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தேர்வெழுதும் அறைக்கு சென்று விட வேண்டும்.கடந்த சில வருடங்களாக வினாத்தாள்களைப் படிக்கவென கூடுதலாக 10 நிமிடம் தரப் பட்டிருப்பதால் வினாத்தாள் முழுவதும் படித்து விட்டு ஒவ்வொரு பிரிவிலும் தெரிந்த வினாக்களை தெரிவு செய்து டிக் செய்து கொள்ளலாம்.

4.வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றுக் கொண்டவுடன் அவரவர் பதிவெண்ணை எழுத வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் வினாத்தாளில் பதில்களை குறிக்கக் கூடாது.மற்றவரிடம் நம் பதிவெண் எழுதப் பட்ட வினாத்தாள் கொடுக்கக் கூடாது.இது வீண் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும்.

5.ஒரே அறையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு A B A B என்ற வகையில் இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்படும்.முதலாமவருக்கு A என்றால் அடுத்தவருக்கு B யாகும்.இது விருப்பப் பாடங்களுக்கு மட்டுமே.மொழிப் பாடங்களுக்கு ஒரே வகைதான்.
இரண்டு வகைகள் இருந்தாலும் மொத்தகேள்விகளுமஒரேமாதிரியானவைதான்.கேள்விகளின் வரிசை எண் மட்டும் மாறுபட்டிருக்கும்.

6.முதலில் நன்கு விடை தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாக பதில் எழுத வேண்டும். சந்தேகத்திற்குரிய பதிலை எழுதி அடித்து வைத்தல் கூடாது.first impression is the best impression.கையெழுத்து சுமாராக இருந்தாலும் பதில்களை போதிய இடம் விட்டும் தெளிவாகவும் எழுத வேண்டும்.அதற்காக ஒரு பக்கத்திற்கு நாலே வரி எனவும் இருக்கக் கூடாது.திருத்துபவர்களுக்கு தேவையில்லாத அதிக பக்கங்கள் எரிச்சலைத் தரக்கூடும்

7.மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை எழுத்துப் பிழைகள் இலக்கணம் கவனத்தில் கொள்ள வேண்டும்.விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை சமன்பாடுகள் குறியீடுகள் வரைபடங்கள் தேவையான இடத்தில் இடம் பெற வேண்டும்.

8.எத்தனைப் பக்கம் ஒரு பதிலை விரிவு படுத்தி எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல.ஒரு கேள்விக்கு வேண்டிய பதிலின் முக்கிய பகுதிகளைக் குறிப்பிட்டும் முடிந்தால் அடிக்கோடிட்டும் அல்லது கலர் ஸ்கெட்சிலும் தனித்து தெரியும்படி  எழுத வேண்டும்.

9.விடைத்தாள் மதிப்பீடு என்பது ஒரு கேள்விக்கான பதிலுக்கு மதிப்பெண்கள் குத்து மதிப்பாக வழங்கப் படுவதில்லை.ஒரு பதிலில் இடம் பெற வேண்டிய மொத்த பாயிண்ட்ஸ் மற்றும் சமன்பாடு அல்லது வரைபடம் இப்படித் தனித்தனியாக பிரிக்கப் பட்டிருக்கும்.மிகச்சரியான விடையாக இருந்தாலும் அத்துடன் எழுத வேண்டிய குறியீடு சமன்பாடு படம் இல்லையெனில் மதிபெண்கள் குறைத்தே வழங்கப் படும்.படம் கேட்கவில்லையே சமன்பாடு கேட்கவில்லையே எனக் குறை சொல்ல முடியாது.5 அல்லது 10 மதிப்பெண் வினாவாக இருந்தால் படங்கள் சம்ன்பாடுகள் கட்டாயம் எழுதனும்.

10.ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பகுதிப் பிரிவு கேள்வி எண் அதன் உட்பிரிவு சரியாக எழுதப்பட வேண்டும்.விடைத்தாளின் முன் பக்கம் மதிப்பீட்டு மதிபெண்கள் பக்கவாரியாகவும் மதிப்பெண் வாரியாகவும் எடுத்து எழுதப் பட்டு டேலி செய்யப்படுவதால் இவை சரியாக எழுதப் பட வேண்டும்.

11.தேர்வு எழுதும் போது அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கவனம் சிதற விடாமல் தங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.விடைத்தாளில் விடைகளைக் குறுத்து வைப்பதும் நாம் அங்கும் இங்கும் பார்ப்பதும் பறக்கும் படை மற்றும் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் தருமானால் பல நிமிடங்கள் சோதனைக்கு மாணவர்களை உட்படுத்தக் கூடும்.இது மன உளைச்சலையும் நேர விரயத்தையும் தருவதோடு தொடர்ந்து எழுதும் மன நிலையையும் பாதிக்கலாம்

12.கேட்கப்படும் வினாக்களின் எண்ணிக்கையைவிட  கூடுதலாக எழுதினால் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும் என நினைப்பது தவறு.பக்கவாரியாகவும் வினாவாரியாகவும் மதிப் பெண்கள் சரி பார்க்கப் பட்டு கூட்டப் படுவதால் அதிகப் படியான வினா இருப்பது  தெளிவாகி விடும்.அப்படி நேரும் பட்சத்தில் முதலில் எழுதப்பட்ட வினாவே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.அடுத்தது அடிக்கப் பட்டுவிடும்.முதலில்  எழுதியதற்கு 8 மதிப்பெண்கள் அடுத்து எழுதிய அதிகப்படி வினாவுக்கு 10 மதிப் பெண்கள் என்றால் 8 மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது விதி.எனவே கவனமாக இருக்க வேண்டும்.

13.ஒவ்வொரு கூடுதல் விடைத்தாளிலும் சரியான பக்க எண்களை தொடர்ச்சியாகப் போட்டு விட்டே எழுத வேண்டும்.பின்னர் எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டும் போது குழப்பம் வராமல் இருக்கும்.

14.பத்து நிமிடம் முன்பாக முடித்து விட்டு பக்க எண்களைச் சரி பார்த்து விடைத்தாள்களை ஒருங்கிணைத்துக் கட்ட வேண்டும்.ஒருமுறை விடைகளையும் சரி பார்க்கலாம்.

15.முடிந்த தேர்வுகளைப் பற்றிய விமர்சனம் அதற்கு தாங்களே மதிப்பெண் போட்டுப் பார்த்தல் போன்றவைகளைத் தவிர்த்தல் வேண்டும்.இது அடுத்த தேர்விற்கான ஆயத்தப் படுத்துதலை பாதிக்கக் கூடும்.முன்பே சொன்னபடி விடைத்தாள் மதிப்பீட்டு முறையும் நம் யூகமும் மாறுபடக் கூடும்.



பெற்றோர்களுக்கு:
பிள்ளைங்க பரிட்சை எழுதும்வரை வயித்துல நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்னு சொல்லும் பெற்றோர் அதிகம்.உங்க பரபரப்பும் தவிப்பும் பிள்ளைகளை பாதிக்கக் கூடாது.
டென்ஷன் இல்லாமல் தேர்வுக்கு தயார் படுத்தி அனுப்ப வேண்டும்.உணவுமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உடல்நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.தேவையில்லாத டென்ஷன் மனரீதியாகப் பிள்ளைகளைப் பாதிக்கக் கூடும்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்வரின் மகன் +2 தேர்வு எழுதினான்.நண்பர் ஒரு பல்கலையில் பேராசிரியர்.மகனும் படிப்பில் கெட்டி.இருந்தும் கடைசி இரண்டு தேர்வுகளுக்கு முன்பாக அவனின் உடல்நிலை கெட்டுப் போனது.சரிவர நீர் பிரியாமல் சிறுநீரகக் கோளாறு என்று மீதித் தேர்வுகளை எழுத முடியாமல் போனது.
அதே வருடம் மீண்டும் எழுதிய போதும் அதே நிலையே.அடுத்தமுறை போதிய மருத்துவ ஆலோசனைகளுடன் மீண்டும் வேறு பள்ளியில் சேர்ந்து புதிதாகப் படித்து எழுதி முடித்தான்.இரண்டு வருடங்கள் வீணாகப் போனது.
உடம்பில் பெரிதாக எந்தக் கோளாறும் இல்லையென்றாலும் ஏதோ பயமும் டென்ஷனும் அவனை இப்படியாக்கி விட்டது.இத்தனைக்கும் ஸ்கூல் டாப்பர்.
என் தோழி ஒருத்திக்கு என் பொண்ணு +2 எழுதி முடிக்கிறதுக்குள்ள எனக்கு ஹாட்ட் அட்டாக் வந்துடும் போல இருக்குன்னு தினமும் புலம்பல்.பிள்ளைங்க முடிந்தவரைப் படிக்கட்டுமே.அவர்களையும் கஷ்டப் படுத்தி நீங்களும் கஷ்டப் படனுமா?
பெற்றோர்களின் மனநிலை அவர்களைப் பாதிப்பதால்தான் தேர்வில் தோல்வி காணும் மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குத் தள்ளப் படுகின்றனர்.
இலகுவான மனதுடன் பிள்ளைகளைத் தயார் படுத்தி தன்னம்பிக்கையளிக்க வேண்டியது நிச்சயம் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.

டாப் டென் பின்னூட்டங் [வகை] கள்

ந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் தேவையில்லை.அப்படி பின்னூட்டம் போட்டால் அது எந்த வகையினது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும்.நிறைய ஆராய்ச்சி செய்து ;)யோசித்து வைத்தேன் என்றாலும் ஒரு பத்துவகையை மட்டுமே பட்டியலிடுகிறேன்.


1:அப்ரசெண்டு பின்னூட்டம்:

புதுசா பதிவெழுதவந்தங்கதான் இந்த அப்ரசெண்டுங்க.யாருக்குப் போடனும் எதற்குப் போடனும் என பாகுபாடு இல்லாமல் கண்ணுல கண்ட பதிவுகளுக்கெல்லாம் போடும் அப்பாவிகள்.
[பின்னாடி தெளிஞ்சி உஷாராயிடுவாங்கல்லே]

2:மொய் பின்னூட்டம்:

எனக்கு நீ போட்டா உனக்கு நான் போடுவேன் வகை.கிட்டதட்ட நல்லது கெட்டதுக்கு மொய் எழுதறாப்போலதான் இதுவும்.
[மொய்யின்னா கூட குறையவும் இருக்கும் கண்டுக்கப் படாது]

நம் பதிவுகளும் கூகுள் தேடலும்

திவு எழுதும் எல்லோருக்குமே என்ன வேண்டியிருக்கும்?பின்னூட்ட எல்லை 40 களைத் தாண்டிய பின்னூட்டங்களும் 20,30 ஓட்டுகளும் முகப்பில் பரிந்துரைக்கப் பட்ட இடுகையாக அல்லது மகுடமாக பதிவுகள் இருக்கனும்னு ஆசைப்படுவோம்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போ யாருக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு சொல்ல முடியாதது போலவே நம் மக்கள் கவிதையோ ,மொக்கையோ,அனுபவமோ விழிப்புணர்வோ எதற்கு வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போட்டுடுவாங்க.
இதெல்லாம் எத்தனை நாளைக்கு?அதிகபட்ச ஓட்டு பின்னூட்டம் வாங்கிய பதிவுகள் கூட ஒரு வார கால அளவிற்கே முகப்பில் இடம் பிடிக்கலாம்.அடுத்தடுத்து வேறு பதிவுகள் அதைப் பின் தள்ளி கொண்டிருக்கும்.அதன் பின் யாரும் அது குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றேனும் பழைய பதிவுகள் மேற்கோள் காட்டப் படும் நேரம் தவிர.
ஆனால் இதையும் தாண்டி நம் பதிவுகள் பின்னூட்டம் பெறாமல் ஓட்டு வாங்காமல் வாசிக்கப் படுகிறது பல நேரங்களில்.

ஸ்வர மாதுரி........

zoom  n  see

ற்கனவே டிவியிலும் சினிமாவிலும் காஸ்ட்யூம்ஸ் டிரஸ்ஸஸ் பார்த்து நம்ம மக்களுக்கு காதுல புகை வரும்.வஸ்த்ர கலா,பரம்பரா,சாமுத்ரிகா ன்னு இன்னும் கொஞ்சம் வெறுப்பேறும்.
ராசுக்குட்டிப் படத்துல ஒரு லட்சரூபாய் புடவைன்னு தங்க சரிகையும் கற்களும் பதித்த புடவைஒன்றை ஐஸ்வர்யாவுக்கு பாக்யராஜ் குடுப்பாரு.ஒரு லட்சரூபாயில் அப்படியென்ன பட்டுப் புடவைன்னு அப்போ ரொம்ப யோசித்தது உண்டு.

ரங்கோ(வ)லி....
















தொடர்ச்சியாக
சுழன்று அலைந்ததில்
கைகளும்
பலமணி நேரம்
குனிந்தே அமர்ந்ததில்
இடுப்புமாக
வலி தொடங்கியிருந்தது.
விரல்களின் பிரம்ம வித்தையில்
உயிர்த்தெழுந்த
தோகை மயில்களும்
பூத்துச் சிரித்த மலர்களும்
வண்ணங்களின் ஜாலமாய்
வடிவு பெற்று வந்ததில்
வலி மறந்து விட்டது.
ஆரவாரக் கூச்சலும்
அணிவகுத்த கூட்டமுமாக
சிறப்பு விருந்தினர்
உள்ளே போக
நிமிடங்களில்
மயில்கள் சிதைந்து
மலர்கள் கலைந்து
வர்ணத் தெறிப்பு மட்டுமே
வரவேற்ற வாசலில்.
வலிக்கத் தொடங்கியிருந்தது
மனது.

பட்டியல்...













வழிய வழியப் பிஞ்சுகளை ஏற்றி
வானத்தில் பறப்பதாக
வித்தை காட்டும்
ஆட்டோ ரிக்ஷாக்கள்

கட்டுப் பாடின்றி
தறிகெட்டு ஓடும்
பெருநகரத்து லாரிகள்

முறையான உரிமம்
இல்லா ஓட்டுநர்கள்
பராமரிப்பில்லாது பல்லிளிக்கும்
பள்ளி வேன்கள்

சிதிலமடைந்த வகுப்பறைகள்
தீப்பிடிக்கும்
கூரைக் கொட்டகைகள்
துருப்பிடித்த
வாயிற் கதவுகள்

கொலைகாரப் பட்டியலில்
சேர்ந்து விட்டன
மூடப்படாத
கழிவுநீர்த்  தொட்டிகளும்
ஆழ்துளைக் கிணறுகளும்.

காதலர் தினம்













எலும்புகளற்ற புழுவினைப் போல
வளைந்து சுழலும்
நாவிலிருந்து வந்தன
ஈரமற்ற வார்த்தைகள்

மை நிரப்பிய தூரிகையில்
வாத்தைகளைப் போட்டு
கவிதைகளாக்கி
காதலை வாசிக்காதே
நேசி

நினைவுப் பொருட்களும்
பரிசுகளும்
காதலர் தினங்களும்
என் ஞாபகங்களைக் கொண்டுவருமெனில்
காதலை வணிகமாக்காதே
நேசி

நானென்பதும் நீயென்பதும்
நாமாகிப் போதல்
காதலென்றால்
காதலை யாசிக்காதே
நேசி

நான் நானாகியும் நீ நீயாகியும்
இருந்தாலும்
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
பிரியங்களால் புதைந்து போதல்
காதல்

பிரியங்கள் காதலின்
மீதென்றால்
நினைவுகளை மீட்டியெடு
என் மீதென்றால்
புதைத்து விடு
காதலை சுவாசிக்காதே
நேசி

தோற்றுப் போனது....














பனித்துளிகளைப் போலவும்
மென்மையானதாய்
எந்நேரத்திலும் சிதறக் கூடிய
சாத்தியங்கள்
உண்டென்றபோதும்
இல்லாமலிருத்தலை விட
இருந்தது என்பதே மேலானதாக....
பறப்பதற்கான தேவைகள்
இல்லையெனினும்
இறக்கைகள் கட்டிக் கொள்ளத்
தொடங்கிய மனது....
விழிகளில் தொடங்கி
விழிநீரிலேயே கரைந்து விட்டாலும்
எஞ்சியது நினைவுகளாக....
வெற்றி மட்டுமே சாத்தியமானதாக
கைகூடியிருப்பின்
காதலின் தடயங்கள்
ஆழமற்றுப் போயிருக்கலாம்.
சுயநலமும் கோழைத்தனமும்
துரோகத்துடன் போட்டிபோட
தோற்றுப் போனது
மனிதர்களும் அவர்கள் மீதான
நம்பிக்கைகளும் மட்டுமே

ஆதியும் அந்தமும்

மலரின் மென்மையை
மேனியில் வைத்து
தேனின் இனிமையை
மழலையில் குழைத்து
பாலொத்த குணம் கொண்டு
பச்சை மண்ணாய்
பூமிக்கு வந்தபோது

குழந்தை என்றான்



இனம் சாதி மதமென
மார்க்கங்கள் வேறாகி
மனங்கள் பிளவு பட்டு
மனிதம் மரித்த போது
அடையாளம் தேவையின்றி


பிணம் என்றான்

ஆதியும் அந்தமும்
ஒன்னு
ஆடி அடங்கிய பின்
எல்லோருக்குமே
மண்ணு

கான்கிரீட் தீவுகள்














பக்கத்து போர்ஷன் பாட்டி
படியில் விழுந்து
மண்டை உடைஞ்சிடுச்சு
வாட்ச்மேன் சொன்னான்



கீழ் போர்ஷனில்
பீரோ உடைத்து
திருடு போயிடுச்சாம்
பேப்பரில் போட்டிருந்தது

மாடி போர்ஷன் மாமி
கற்பழித்துக் கொலை
டிவியில் பார்த்த முகம்
பரிச்சயமானது
லிஃப்டில் கூட வந்தவள்

சீக்கிரம் வந்துடுப்பா
தனியாக இருக்கனும்
பயத்தோடு சொன்னாள்
கிராமத்தில்
ஒத்தையில் வாழும் அம்மா


மூடியே கிடக்கும் கதவுகள்
சன்னலில் தோன்றும் முகங்கள்
சிரிக்க யோசிக்கும் உதடுகள்
அடுத்தவர் விஷயத்தில்
மூக்கு நுழைக்காத
நாகரீகக் கலாச்சாரத்தில்
அடுக்குமாடி வீடுகள்