மொத்தப் பதிவுகளும் இங்கே

தலைகீழான மற்றும் திருப்பிப் போடப்பட்ட எழுத்துக்கள்(reverse / flip text)

மாத்தி யோசி!!!!!!!!!!!!!!!!!!!!!!



1:வணக்கம்

.தெரியலை படிக்கிறாங்கன்னு யாரு போட்டா பதிவு ஒழுங்காப்
.இருக்கு அதிகமாக வெயிலும் வருஷம் இந்த
பிடிச்சேன் கண்டு தளத்தைக் இந்த பட்டு சிரமப் ரொம்ப
வராது சரிப்பட்டு சொன்னா அப்படியே அதை
எழுதினேன் இப்படி விடனுமுன்னு சுத்தி கொஞ்சம்

-----------------------------------------------------------------------------------------------------------


2.்மச்ஞொக ித்துச ுன்னுமுனடிவ ிடப்பஇ ்னேனிதுழஎ
ைதஅ ேயிடப்பஅ ான்னொச ுட்டப்பிரச ுதாரவ
ப்மொர ்பமரிச ுட்டப த்நஇ ்கைத்தளத ுட்ணக ்னேச்சிடிப
த்நஇ ்மஷுரவ ்முலியெவ காமகிதஅ ுக்குரஇ˙
்பாக்ஙுழஒ ுவிதப ாட்டோப ுராய ுன்னக்ஙாறிக்கிடப ைலயிரெத˙

்மக்கணவ˙

----------------------------------------------------------------------------------------------
3.்மக்கணவ

்பாக்ஙுழஒ ுவிதப ாட்டோப ுராய ுன்னக்ஙாறிக்கிடப .ைலயிரெத
த்நஇ ்மஷுரவ ்முலியெவ காமகிதஅ .ுக்குரஇ
ப்மொர ்பமரிச ுட்டப த்நஇ ்கைத்தளத ுட்ணக ்னேச்சிடிப
ைதஅ ேயிடப்பஅ ான்னொச ுட்டப்பிரச ுதாரவ
்மச்ஞொக ித்துச ுன்னுமுனடிவ ிடப்பஇ ்னேனிதுழஎ

 ---------------------------------------------------------------------------------------------------------

1:eeeeeeeeeeeeeeeyb

.seerged yb tub ןaeh reve did dnuow tahw !ecneitap ton evah ohw yeht era roop woh

.dne eht ni yaw nwo ym teg i dedivorp ,tneitap yןiranidroartxe ma i

dןrow eht ni yoj yןno erew ereht fi ,tneitap dna evarb eb ot nraeן reven dןuoc ew

sniarb fo ןehsub a naht erom htrow si ecneitap fo ןufdnah a

ecneitap evah ot nraeן ot ecneitap fo toן a evah tsrif tsum uoy

.eןbuort yreve rof ydemer tseb eht si ecneitap


-----------------------------------------------------------------------------------------------------
2:.eןbuort yreve rof ydemer tseb eht si ecneitap

ecneitap evah ot nraeן ot ecneitap fo toן a evah tsrif tsum uoy

sniarb fo ןehsub a naht erom htrow si ecneitap fo ןufdnah a

dןrow eht ni yoj yןno erew ereht fi ,tneitap dna evarb eb ot nraeן reven dןuoc ew 
.dne eht ni yaw nwo ym teg i dedivorp ,tneitap yןiranidroartxe ma i  

.seerged yb tub ןaeh reve did dnuow tahw !ecneitap ton evah ohw yeht era roop woh
 
eeeeeeeeeeeeeeeyb


˙----------------------------------------------------------------------------------------
 என்னங்க ஆங்கிலம் தமிழ் ரெண்டுலெ எழுதியும் மண்டை காயுதா?ஓகே இங்கே
புதிரை விடுவிக்க   போங்க.இந்தப் பதிவில் உள்ளதை காபி செய்து அந்த தளத்தில்  பேஸ்ட் செய்யுங்க.

 அங்கு ரிவர்ஸ் டெக்ஸ்ட்(;reverse text )   ஃபிலிப் டெக்ஸ்ட்(flip text) எனவும் அவ்வாறு மாற்றப் பட்டதை நேர் செய்ய வும் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. மேலும் செலக்ட் ஆல் ஆப்ஷன் ,கேன்சல் ஆப்ஷனும் உள்ளது.இது  நம் ஆர்குட் ஃபேஸ் புக் அல்லது சாட்டில் விளையாட உதவும்.மற்றவர்களை மண்டை காய வைக்கலாம்.
1.சிகப்பு கலரில் உள்ள முதல் டெக்ஸ்ட்டுக்கு flip wording option  மட்டும் கொடுங்க நேராகும்.

2.நீலகலர் எழுத்துக்களை காபி பேஸ்ட் செய்து  செலக்ட் செய்து முதலில் flip upside down ஆப்ஷனும் அடுத்து  flip wording ஆப்ஷனும் கொடுத்தால் ஒரிஜினல் ஃபார்மேட் வரும்.

3.மூன்றாவதாக பச்சை நிறத்தில் உள்ளதுக்கு செலக்ட் செய்து reverse text  ஆப்ஷன் அடுத்து செலக்ட் செய்து  reverse wording ஆப்ஷன் கொடுத்த ஒரிஜினல் வரும்.

பொழுது போகலைன்னா ஆங்கிலத்தில் உள்ளதை எப்படி மாற்றினேன் flip or reverse flip and reverse எதுன்னு கண்டு பிடிங்க.

நிச்சயம் கோபம் வரும்.அதுக்கு நான் சொல்லும் பதில் ஆங்கில வாக்கியங்களிலேயே உள்ளது.

திருப்பிப் போட்டு புரட்டிப் போட்டு தெரிஞ்சுக்கங்க

டிஸ்கி:நீங்க என்ன என்னைய மாதிரி வெட்டி ஆபிஸரா?இதெல்லாம் செய்ய பொறுமையும் நேரமுமிருக்க?
கூல்...கூல்...எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப செஞ்சு பாருங்க போதும்:))))))))))

3G ஃபோனில் அயித்தானும் நானும்...










ந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.

பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms அனுப்ப அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகி விட்டது.

மொபைல் போனின் நெட் வொர்க் செட்டிங்ஸில் GSM  என்பதை Dual mode என மாற்றி செட் செய்து கொள்ள வேண்டும்.
செய்தவுடன் போனின் முகப்பில் 3G ஐகான் வந்து விடுகிறது  [Gprs க்கு G போல]

அப்புறமென்ன 3.5G N97 போனில் அவரும் E71 போனில் நானுமாக பேச ஆரம்பிக்க வீட்டிலிருந்த வாண்டுகளுக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஒரே கலாட்டாதான்.சோனி எரிக்க்ஷன் W910i போனிலும் வேலை செய்கிறது.எனக்கென்னவோ N97 ஐ விட மற்ற இரண்டில் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றியது.

அந்தப் பக்கம் பேசுபவரின் முகம் பெரிய திரையிலும் நாம் எப்படித் தெரிகிறோம் என்பது சின்னத்திரையிலுமாக டிஸ்ப்ளே ஆகிறது.
இதில் நம் உருவம் வேண்டாம் என்றாலோ அல்லது பேசுபவர் உருவம் தெரிய வேண்டாம் என்றாலும் மியூட் செய்து கொள்ளலாம்.நம் உருவத்துக்கு பதில் வேறு ஸ்டில் போட்டோவும் போட்டு வைக்கலாம்.
அப்புறமெதுக்கு 3G??:))))

என்னதான் தேர்ட் ஜெனெரேஷன் சேவைன்னாலும் எடுத்த எடுப்புலேயே ஒழுங்கா வேலை செஞ்சுடுமா என்ன?குய்ய்ய்ங் குர்ர்ர் ன்னு ஏதோ சத்தத்துடன் தான் வீடியோ ஓடுது.
அது மட்டுமில்லாமல் வீடியோவும் வாய்ஸும் ஸிங்க் ஆகலை.அலைவரிசைக் குறைந்த இணைய இணைப்பில் சேட் செய்யும் போது நாம் பேசி முடித்த பின் வாய் திறப்பது போல இருக்கிறது.

அத்தோடு பேசுவதற்காக முகத்தருகில் ஃபோனை வைத்திருப்பதால் ஜூம் செய்யப்பட்டு பயம்மாக தெரிகிறது.சாப்பிடாத பசங்களுக்கு வேணா க்ளோசப்பில் பூச்சாண்டி காட்டி ஊட்டலாம்.:))
ஹெட் ஃபோன் அல்லது ப்ளூடூத் ஹெட்செட் வைத்துக் கொண்டு போனை கொஞ்சம் லாங் ஷாட்டில் வைத்துப் பேசினால் நாம் நாமாகத் தெரிய வாய்ப்பிருக்கு.

பிஎஸெனெல் மட்டுமே இந்த சேவையை நடைமுறைப்படுத்தியிருப்பதால் மற்ற நெட்வொர்க் காரங்களுடன் பேச முடியாது.
விளம்பரத்தில் ஒரு நிமிடத்திற்கு 0.30 பைசா கட்டணம் னு சொல்றாங்க.ஆனால் 0.70 காசு கழிக்கிறாங்க.மாதக் கட்டணம் ரூ 25/-
இன்னும் voice conferencing,music download,online games வரப் போகுதாம்.அதி வேக பிரவ்ஸ்ங்,கேபிள் இணைப்பும்
பெறமுடியுமாம்.
விளம்பரப் படுத்துவது போல காதுக்கு இதமான ஒலி தெளிவான வீடியோ என்பது இப்போது இல்லை ஆனால் நிச்சயம் மேம்படுத்தப் படக்கூடும்.
இங்கேயே அயித்தான் சேலம் போய் டிரை பண்ணாங்க கிடைக்கலை.இன்னும் சேலம் கனெக்ஷன் லிஸ்ட்டில் வரலை போல.

தேவை:
முன் பக்கம் பின் பக்கம் என இரண்டு கேமிரா உள்ள செல்ஃபோன்.அது GSM  மட்டுமில்லாது 3G கனெக்ஷன் சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும்.
3G பிஎஸ்என்எல் கனெக்ஷன்.
நடப்பு போஸ்ட் பெய்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒரு குறுந்தகவல் மூலம் 2G சேவையை 3G யாக மாற்றிக் கொள்ள முடியும்.
வேண்டாமென்றால் மீண்டும் 2G க்கு வந்து விடலாம்.

பயன்:
வெளி நாட்டுத் தொடர்புக்கு ரோமிங் வசதி இருக்கான்னு தெரியலை.இருந்தால் வெள்நாட்டில் இருக்கும் நண்பர்கள் இங்கிருக்கும் குடும்பத்தாரோடு குழந்தைகளோடு முகம் பார்த்து பேச முடியும்.
 இனி  அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து  கலர் டிசைன்  செலக்ட்  செய்யலாம்.
காதலர்களுக்கு ............வரப் பிரசாதம் .....

இது ஒரு  அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை.

அவதார்கள்



காற்று வரக்
கதவைத் திறக்கச் சொல்லி
சந்தோஷம் வர
மனதைத் திறக்கச் சொன்னவன்
மூடிய அறைக்குள்
மஞ்சத்தில் கிடந்தான்
நடிகையுடன்

வீட்டை விட்டு வந்து
வெள்ளையுடுத்தி சந்நியாசியானவன்
போதையூட்டப் பட்டு
உருண்டு புரண்டு அரற்றினான்
அம்மா பகவானேயென்று

வாயோடு வாய் வைத்து
மென்று தின்ற வாழைப்பழம்
பிரசாதமாக ஊட்டப்பட்டது
பிள்ளைவரம் கிடைக்குமாம்

கையில் கொடுத்த கூழாங்கல்
சில பல தந்திரங்களுக்குப் பின்
கற்கண்டாய் மாறிப் போனது
வாழ்க்கை இனிக்குமாம்

ஆசிர்வதிக்கப் பட்ட
மகான் என்பதால்
நாவால் நக்கி நக்கியே
குணமாகி விடுதாம்
நாள்பட்ட வியாதியும் புண்ணும்
செலவில்லாத
சிக்கன வைத்தியம்

வசதியானவனுக்கு ஆன்மீக குரு
வக்கத்தவனுக்கு
வாழவைக்கும் தெய்வம்
மாட்டியது கொஞ்சம் சாமி
என்று மாட்டப் போகுதோ
மீதி சாமி

வணங்கி நிற்க அப்பாவிகளும்
வளர்த்து விட மீடியாக்களும்
இருக்கும் வரை
கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள்
புதுப் புது சாமியார்கள்
புதுப் புது அவதாரங்களில்

வாழ்க்கையின் கிசுகிசுப்பு....





இப்படியாக
அப்படியாகவென
யாராகவும் படைக்கப் படவில்லை
எப்படியாகவும் ஆகலாம்
யாராக வேண்டுமென்பதை
தாமாகவே
தீர்மானிக்கச் சொல்லி
ஒவ்வொரு கணத்திலும்
காதுகளில்
கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை
விதிக்கப் படுவதில்லை
நாமாக வகுத்துக்கொள்வதே
வாழ்க்கை
கிடைத்ததோடு சந்தோஷிப்பவன்
சாமான்யன்
தேடலை நீட்டிப்பவன்
சாதனையாளன்
சித்திரம் இல்லாச் சட்டமாய்
காத்திருக்கிறது வாழ்க்கை
அன்பு பாசம் நேசம்
காதல் கடமை கருணை
நட்பு தியாகம் தேடல் என
வண்ணங்களின் கலவை குழைத்து
ஓவியம் நிரப்பி காவியமாக்க
நம் காதுகளில்
கிசுகிசுத்துக் கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை

90/10 ம் ...பூமராங் வாழ்க்கையும்....

கொஞ்ச நாளாக தமிழ் மணத்துல ஒரே தத்துவ பதிவுகள். சரி நம்ம பங்குக்கு ஒன்னு போட்டுடுவோம்னு தோணிச்சு.மிகவும் இரசித்துப் படித்த மிகச் சரியான தீர்வாகப் பட்ட மனவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஏற்ற தத்துவம் இந்த 90/10 தத்துவம்.
நம் வாழ்க்கையில் நடக்கும் எதையும் நாம் யாரோடவோ அல்லது விதியோடவோ சம்மந்தப் படுத்தியே பழகி விட்டோம்.
எல்லாம் அவனால் வந்தது..அவளால்தான் இப்படியாச்சு என்றோ அல்லது எல்லாம் என் விதி இப்படி நடக்கனும்னு இருக்கு என்றோ தப்பித்தலுக்கே முனைகிறோமேயன்றி நம் தவறு என்ன என்பதை உணரவோ அல்லது உணர்ந்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளவோ மனம் சம்மதிப்பதில்லை.
உண்மையில் 100 ல் 10 பங்கே நம்மையறியாமல் நம் வாழ்வில் நடக்கிறது.மீதமுள்ள 90 பங்கும் நம் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளால் நாமே உருவாக்கிக் கொள்பவைதான்.
10 பங்காக வாழ்வில் ஏற்படும் நல்லவை கெட்டவைகளை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் அணுகுகிறோம் என்பதே மீதியான் 90 பங்கு.அவையே பெரும்பாலும் நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன.
உதாரணமாக ஒரு நிகழ்வைச் சொல்கிறார் உளவியலார்.

நிகழ்வு1:
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அப்பா
அம்மாவும் அதே அவசரத்தில்
பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் மகள்
மூவரும் அவசரமாக உணவு மேசையின் முன்.அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மகளின் கை பட்டு கோப்பையில் இருந்த காபி அப்பாவின் சட்டை மீது தெறித்துக் கறையாகிவிடுகிறது.

அப்பாவுக்கு கோபம் தலைக்கேற மகளைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்.பயத்தில் அழுதபடியே மகள் மன்னிப்புக் கேட்டும் மனைவி சமாதானப் படுத்தியும் ஆத்திரத்தில் கத்தித் தீர்த்து வேறு உடை மாற்றச் செல்கிறார்.திரும்பி வரும்போது மனைவி கிளம்பிப் போயிருக்க மகள் பள்ளி வேனைத் தவற விட்டு விட்டு இன்னும் அழுதபடியே.எரிச்சலும் சலிப்பும் அதிகரித்தபடி மகளைக் கூட்டிப் போய் பள்ளியில் விட்டு விட்டு தாமதமாக அலுவலகம் வந்தால் மேலாளரின் வசவு.வேலையில் கவனம் சிதற மீண்டும் சிக்கல்.சக ஊழியரிடம் சிடுசிடுப்பு.மாலை வீடு திரும்பினால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் மகள்.வாயே திறக்காமல் வேலையில் மூழ்கிப் போன மனைவி.அழகாய் விடிந்தபொழுத இப்படிகோபத்துடன் வேதனையுடன் கழிகிறது.

நிகழ்வு 2:
அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் அப்பா
அம்மாவும் அதே அவசரத்தில்
பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் மகள்
மூவரும் அவசரமாக உணவு மேசையின் முன்.அவசரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மகளின் கை பட்டு கோப்பையில் இருந்த காபி அப்பாவின் சட்டை மீது தெறித்துக் கறையாகிவிடுகிறது

அப்பாவுக்குக் கோபம் வரவில்லை.தெரியாமல்தானே கை பட்டு காபி சிந்தி விட்டது என பயந்து போன மகளை சமாதானம் செய்ய மகள் பூ வாய் மலர்ந்துசிரிக்கிறாள்.தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பும் கேட்கிறாள்.மனைவி நிம்மதியாகிறாள்.அப்பா வேறு உடை மாற்றிக் கொண்டு வர மகள் பள்ளி வேனில் ஏறும்வரை கையசைத்து விடை கொடுத்து விட்டு மனைவியுடன் சொல்லிக் கொண்டு கிளம்பி நேரத்தோடு அலுவலகம் செல்கிறார்.நிம்மதியிலும் மன நிறைவிலும் அலுவலக வேலை எல்லாமும் அழகாகவும் அமைதியாகவும் நடக்கிறது.மாலை வீடு திரும்பியதும் மகள் சந்தோஷமாக பள்ளியில் நடந்தவைகளைச் சொல்ல மனைவியோடு சேர்ந்து இரசித்தப்படியே அன்றைய பொழுது இனிமையாக கழிகிறது.

இரண்டு நிகழ்விலும் ஒரே மாதிரியான சூழல்கள் தான்.மகளின் கை பட்டு தவறுதலாக சட்டையில் கறை பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று.இதில் எந்த திட்டமிடுதலும் இல்லை.
இதுதான் வாழ்வில் தானாக நிகழக்கூடிய 10 சதவீத நிகழ்வுகள் என்பது.இது போல கோபம் எரிச்சலை வரவழைக்கக் கூடிய சின்னச் சின்ன தவறுகள் எதிர் பாராமல் தாமாக நிகழக் கூடும்.
அடுத்த 90 சதம் என்பதுதான் நம் கையில் உள்ளது.அதற்கு முழுக்க முழுக்க நாமே பொறுப்பாளிகள்.
மேலே சொன்ன இரண்டு நிகழ்விலும் அந்த 90 சதம் எப்படி மாறு பட்டது என்பதையும் அதன் பின் விளைவுகள் எத்தகைய உணர்வுகளைத் தந்தது என்பதையும் பாருங்கள்.
சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து நம் உணர்வுகளைக் கட்டுப் படுத்திச் செயல்பட்டால் அதன் பலனும் அதற்கு ஏற்றாற் போலத்தான் இருக்கும்.
தவறு மகள் மீதோ,சிந்திய காபி மீதோ அல்லது வசை பாடிய மேலாளர் மீதோ இல்லை.
10 சதம் தானாக நடந்தவைகளுக்காக அதைப் பெரிது படுத்தி 90 சதம் ரியாக்ட் செய்த அப்பா தான் காரணம்.
சந்தோஷமோ வருத்தமோ நம் செயல்பாடுகளாலேயே அவை தீர்மானிக்கப் படுகின்றன.
நாம் என்னக் கொடுக்கிறோமோ அதுவே திரும்ப பூமராங் மாதிரி திரும்பக் கிடைக்கிறது.
கோபமும் வெறுப்பும் வேதனையாக மாறுகிறது
பொறுமையும் மன்னிப்பும் சந்தோஷமாக மாறுகிறது
நமக்கு நாமே முதலாளி...நம் மனதைக் கட்டுப் படுத்தும் சக்தி வெளியில் இல்லை.நமக்குள்ளேதான் இருக்கு.
90 சதம் ஆற்றலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆளுமையும் நம்மில் இருக்கும் போது 10 சதம் புற நிகழ்வுகள் நம்மை ஆட்டிப் படைக்க விடலாமா?
இதுதான் வில்லியம் காவி என்ற உளவியலார் சொல்லியிருக்கும் 90/10 வாழ்க்கைத் தத்துவம்
படித்தேன்.பிடித்திருந்தது.பகிர்ந்து கொண்டேன்.இனி கொள்வதும் தள்ளுவதும் உங்கள் கையில்
என்றும் அன்புடன்

பெண்ணாய்ப் பிறந்திடவே........

கழுத்தில் விழுந்த பந்தம்
கண்ணுக்குத் தெரியாத
விலங்குகளாய் மாறும்
அடிமைத்தனம் வேண்டாம்
வாழ்த்துக்களும் பூச்செண்டுகளும்
வேண்டாம்
பொன்னகையும் புகழும்
வேண்டாம்
இதழோரத்துப் புன்னகை
ஒன்றே போதும்
தவறுகளை பொருட்படுத்தாத
பெருந்தன்மை போதும்
புலம்பலே ஆனாலும்
உணர்வுகளை மதிக்கும்
தாராளப் பொறுமை போதும்
ஆஹா அருமையென
நல்லவைகளை அங்கீரிக்கத்
தயங்காத மனது போதும்
துன்பத்தில் தோள்கொடுக்கும்
தோழமை போதும்
எல்லாம் கிடைக்குமெனில்
இன்னொரு முறையும்
பெண்ணாய்ப் பிறந்திடவே
மாதவம் செய்திடுவேன்

பிரேமானந்தா டூ நித்தியானந்தா

து போன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் பெண் பதிவர்கள் தொடுவதில்லை.பெண்ணுரிமைன்னு போராடும்போது பிரச்சினையில் பெண் பங்கு ஆண் பங்குன்னு இருக்கான்னு வாதம் எழுலாம்.
எத்தனைத் துணிச்சலான பெண்ணும் இது போன்ற படுக்கையறை சம்மந்தப் பட்ட செய்திகளில் விமர்சனம் செய்யத் தயங்கக் கூடும்.
கடந்த இரண்டு நாளாக தமிழ்மணம் முழுக்க நித்தியானந்தா விண்ணைத் தாண்டி வந்து இடம் பிடித்து விட்டார். அவரைப் போல அவரென்ன அவர்...... வயதிலும் குணத்திலும் சிறிய அவனைப் போல போலிகள் தோலுரித்துக் காட்டப் பட வேண்டும் தான்.
ஒவ்வொருவர் பதிவிலும் ஒவ்வொரு விதமான விவாதம் எடுத்து வைக்கப் பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த கோபமும் அந்த போலியின் மீதும் ஊடகத்தின் மீதுமே மையம் கொள்கிறது.
நேற்று 10.30 மணி 'நிஜம்' செய்தியில் நடிகை எப்படி மாட்டினார் யார் வீடியோ எடுத்தது இதன் பின்னணி என்ன என ஸ்கோரோலிங் செய்தி போட்டு விட்டு மீண்டும் அந்த வீடியோவையே இன்னும் விலாவரியாக எடிட் செய்ததையும் சேர்த்து ஓட விட்டார்களே தவிர கடைசி வரை மர்ம முடிச்சு அவிழவே இல்லை.
7.30 மணிக்கும் 8 மணிக்கும் போட்டால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் தவற விட்டவர்களுக்கு'மிட் நைட் ஷோ' போட்டதால் பார்க்க முடிந்து கதி மோட்சம் கிடைத்தது.அசிங்கமேயானாலும் மீடியாக்களில் வராதவரை அதிகம் பேர் இதைப் பார்க்கவோ நம்பவோ வாய்ப்பில்லை என்பதால் திரும்பத் திரும்ப காட்டும் அவலத்தைப் பொறுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்த பல கேள்விகளைப் போல என் மனதில் எழுந்தவைகளையும் இங்கு பதிவாக்குகிறேன்
இதற்கு எழக்கக்கூடிய விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை.
முதலில் இப்படிப் பட்ட போலிச் சாமியார் எப்படி உருவாகிறான்.இதென்ன நமக்குப் புதிதா?
எனக்குத் தெரிந்தவரை சாமியார்கள்னா தமிழ் சினிமா போல உடம்பைச் சுற்றி மண் புற்று வைத்திருக்க கண்மூடி தியானம் செய்யும் முனிவர்கள்தான்.அடுத்து அரவிந்தர்,இரமணர் போன்றவர்கள்.
முற்றும் துறந்தவனுக்கு கோடிக் கணக்கில் பணமோ அதி நவீன வசதிகளோ மாளிகைகளோ அடி பிடி ஆட்களோ ஏன்.
மன்னாதி மன்னனாக இருந்த கௌதமரே வசதிகளையும் ஆசைகளையும் விட்டொழித்துத்தான் புத்தனானார்.
பேச்சாற்றலும் பணமுமே ஒருவரை கடல் கடந்த புகழோடு பிரபலமாக்கி விடுகிறது.அறிவுரைகளையும் அருளாசிகளையும் கேட்பதோடு நிறுத்திக் கொண்டால் போதுமே.கணக்கில் வராத பணத்தை கொட்டிக் கொடுத்து அவர்களை வளர்த்து விடுவதும் மக்கள் தான் இன்று செருப்பாலடித்து கொடும்பாவி கொளுத்துவதும் அவர்கள்தான்.
நம் மக்களுக்கு எல்லாமே ஏதாவது ஒரு extreme.
பிரேமானந்தா விஷயத்துக்குப் பிறகு இதை உணர்ந்திருந்தாலே அதற்கப்புறமும் வருடத்திற்கு நாலு போலி சாமியார் உருவாக முடியுமா?
நிதி நிறுவன மோசடின்னு டிவியில பாத்தாலும் நாம எங்காச்சும் சீட்டு போடத்தானே செய்யறோம்.அவரு மாதிரியில்லை.இவரு நல்லவரு ன்னு கற்பித்துக்கிட்டு.
சாமியாரா இருந்துட்டுப் போகட்டும்.புலன் அடக்க முடியாதவன் குடும்ப சகிதமா சாமியாரா இருக்கட்டும்.கடவுள்களே அப்பா அம்மா அண்ணன் தங்கை சித்தப்பா மாமி மச்சினன் என இருக்கும் போது இவர்களை வேண்டாம் எனச் சொல்லப் போவதில்லை.
ஆனால் 'பிரம்மச்சர்யம்' 'தியானம்' னு சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டே ஒரு பக்கம் 'தேவநாத' வேஷம் போடுபவர்கள் தோலுரித்துக் காட்டப் படனும்.
நேத்து சன் டிவியில ' நான் திருவண்ணாமலையில் பிறந்தவன் அந்த தலம் ஒரு 'spiritual incubator' மாதிரி.ஞானிகள் தங்கள் உடம்பை விட்டுட்டு ஆன்மாவில் கலக்கும் இடம்' னு நித்யாவின் அருளுரை கிளிப்பிங்.
துறவியாகப் போகிறவர்களுக்குன்னு எந்த விதிமுறைகளும் ஏன் இல்லை.
ஆளாளுக்கு தங்க வெள்ளி வைரக் கோயில்கள் கட்டுவதும் கல்விக்கூடங்கள் தியான மண்டபங்கள் மருத்துவ மனைகள் கட்டவும் யார் அனுமதிப்பது?
இவ்ர்களின் அளவற்ற சொத்துகளுக்கெல்லாம் முறையான கணக்குகளோ அல்லது வரியோ செலுத்தப் படுகிறதா?
சாமியாராப் போனவங்க அப்படியேப் போய் போதனையோடு நிறுத்திக்கனும்.அரசியலிலும் இப்படி பொதுச் சேவைகளிலும் மூக்கை நுழைக்க ஏன் அனுமதிக்கிறோம்.
இதையெல்லாம் நாமே வளர்த்து விட்டிருக்கிறோம்
இன்னும் வளர்த்தும் விடுவோம்.
குழி மாற்றுத்திருவிழா
தலையில் தேங்காய் உடைத்தல்
உயிருக்கு ஆபத்தான ஜல்லிக் கட்டு
இப்போ புதுச 'கவாளம்' னு வாயாலேயே பக்தைக்கு வாழைப்பழ பிரசாதம் ஊட்டும் கதை வெளிவந்திருக்கிறது கீழ விழாம சாப்பிட்டல் நினைத்தது நடக்குமாம்.
இது எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கும்.
சென்சிடிவான இந்தப் பிரச்சினைகளைக் கையில் எடுத்து வில்லங்கம் தேடிக் கொள்ள எந்த அரசும் துணியாது.
முடிந்தால் தங்களுக்கு சாதகமான விஷயங்களுக்கு மீடியாவில் பப்ளிசிட்டி தந்து வியாபாரம் செய்வார்கள்.
சிவசங்கர் பாபாவுக்கு ஒரு சானல் ஒரு நேரம்
சத்யசாயிக்கு ஒரு சானல் ஒரு நேரம்
நித்தியானந்தாவுக்கு ஒரு மீடியா
சுதபோதானந்தாவுக்கு ஒரு மீடியா
கல்கி பகவானுக்கு ஒரு சேனல் ஒரு நேரம்னு
மீடியாப் போட்டியில் ஆளுக்கொரு ஆஸ்தான வாஸ்து நிபுணர் அதிர்ஷ்டக்கல் சோதிடர் போல ஆகிப் போயிடுச்சி.இது கடைகோடியில் இருக்கும் மக்களுக்கும் போய்ச் சேர்ந்து ஆகா இவருகிட்டப் போன கேன்சர் குணமாகும் வேலை கிடைக்கும் நல்லது நடக்கும் னு விரதம் இருந்து பாத யாத்திரை கிளம்பிடறாங்க.
இந்த நித்தியானந்தாவோ அல்லது வேறு ஏதாவது ஆனந்தாவோ எக்கேடும் கெட்டுப் போகட்டும்.என்னோட வருத்தம் அந்தப் பாழாய்ப் போன பெண்மீதுதான்.
தனிப்பட்ட வாழ்க்கையின் வேதனைகளுக்காகவோ ,வசதிகளுக்காகவோ எதற்காகவேனும் இருந்தாலும் அவள் விருப்பப்பட்டு ஒருவருடன் போனது அவளின் உரிமை எனும்போது அவளை முன்னிறுத்தி அம்பலப் படுத்துவது ஏன்?
நடிகையாக இல்லாமல் அது ஒரு உயர் அதிகாரியின் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிக் காட்டியிருப்பார்களா?
யாராகவாவது இருக்கட்டும் என்று மக்களின் யூகத்திற்கே விட்டு விட்டு அவளை மறைத்த படியே இதைக் காட்டியிருக்கலாம்.
சந்தனமுல்லை     கேட்பது போல் யார் யோக்யவான்கள் அவர்களே கல்லெறியட்டும்.
மூனு நாலு கல்யாணம் செய்து கொள்ளும் நடிகைகளையோ நடிகர்களையோ அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறோம்.
ஒரே கல்யாணம் செய்து கொண்ட நடிகை யாரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்ததாக சான்று இருக்கா?
காதலனுக்காக கணவனையே கொலை செய்யுமளவுக்கு சாதாரண குடும்பத்துப் பெண்களே ஒழுக்கமற்றுப் போன கதைகள் தினமும் அரங்கேறும்போது
நடிகையாகப் போனதால் விருப்பப்பட்டே நடக்கும் அவளின் அந்தரங்கத்தை வெளிப்படுத்த யார் அதிகாரம் தந்தது.நடிகையானாலும் அவளும் பெண்தானே
காமமும் படுக்கையறை நிகழ்வும் தனி மனித உரிமை.சட்டப் படி அதை கேட்க முடியாது .ஆனால் பிரம்மச்சர்யம் என்ற போர்வையில் பிரசங்கம் செய்யும் ஒருவர் இப்படி பொதுமக்களை ஏமாற்று வதை மனசாட்சிப் படி தப்புன்னு சொல்லவே இதை சொல்கிறோம்னு சொல்கிறது சேனல்.செய்யுங்கள்.
ஆனால் நடிகையின் அடையாளத்தைக் காட்டியிருக்க வேண்டாம்.
போலிச்சாமியாரைத் தோலுரிக்கும் நோக்கமென்றால் பலியானவர் புகார் தராதவரையில் அவரது அனுமதியின்றி இதை எப்படி வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.

வேர்களை செல்லறிக்க விட்டு விட்டு கிளைகளைக் கழிப்பதால் பயனில்லை.

இன்னும் இந்த வரிசையில் யாரேனும் வரக் கூடும்.அதுவும் கொஞ்ச நாளைக்கு மீடியாக்களில் பரபரப்பாகி மறந்து போகும் அடுத்து வரும் நிகழ்வில்..

தனிப்பட்ட வாழ்வில் தோல்வியுற்று இம்மாதிரி வழியில் நிம்மதி தேடும் சொர்ணமால்யாக்களோ ரஞ்சிதாக்களோ...நம் டார்கெட் இல்லை.
முடிந்தால் இனியொரு காமச் சாமி கிளம்பாலிருக்க வழி செய்யுங்கள்

வாழ்வின் நம்பிக்கை












சுமை தாங்கிய கணங்களில் தான்
சுவையுணரக் கூடும் வாய்ப்பு
வருத்தப்பட சில நூறு
நிகழ்வுகள் என்றால்
ஆனந்திக்க ஆயிரம்
தருணங்கள் கிடைக்கலாம்
எத்தனை கடினம் என்பதல்ல
வாழ்க்கை
எப்படி வாழ்கிறோம் என்பதே
நம்பிக்கை













புதுமணத் தம்பதிகளின் கையில்
புகைப்பட ஆல்பம்
வலது அடி எடுத்து வைக்க
கால்களில்லை அவளுக்கு
ஆசையாய் அரவணைக்க                                     
கைகளில்லை இவனுக்கு
தொட்டு அறிவதில்லை
உணர்ந்து வாழ்வதுதான் காதல்
அன்பாய் பாசமாய்
தியாகமாய் நேசமாய்
காதலின் பரிமாணம்
விழுதுகள் விட்டு வேறூன்றிப் போனதாலே
மனிதம் வாழ்கிறது
இன்னமும்

டிஸ்கி: திருப்பதிக்குப் போறவங்க அல்மேலு மங்காபுரமும் [கீழ்திருப்பதிக்கு]போகனுமாம்.அப்படித்தான் இந்த பதிவு படிச்சவங்க
இந்த  ஜோடிப்திவையும் டிச்சிடுங்