மொத்தப் பதிவுகளும் இங்கே

காதலுக்கும் நிறமுண்டு



நினைவுகளின் அலைக்கழிப்பில்
உறக்கம் தொலைத்த
இரவுகளின் நீட்சி
விழிகளில்
தீட்டிய வரிகளில்

பிரிவின் வெம்மையில்
இதயத்து வேதனை
 ஆறாய்ப் பெருக
அழுகையில் மிதக்கும்
கண்களில்

தனிமையின் நெருக்கத்தில்
தீண்டும் விரல் விலக்கி
மூக்குநுனி வரும்
பொய்க் கோபத்தில்

சகலமும் நீயெனக்
காதலாகிக் கசிந்துருக
கன்னங்களில்
மய்யம் கொள்ளும்
நாணத்தில்

எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின்  நிறமென்றானது