மொத்தப் பதிவுகளும் இங்கே

Žì¸õ. .........

Žì¸õ.


«¨ÉÅÕìÌõ Žì¸õ.
¦¾Ã¢Â¡ò¾ÉÁ¡ ±¨¾§Â¡'ìÇ¢ì' ¦ºïÍ þ¨¾ ¬ÃõÀ¢îÍð§¼ý. ¯¾Å¢ ¦ºöÂÈÐìÌ¿¢¨È ¿ñÀ÷¸û þÕì¸¡í¸ ±ýÈ ¨¾Ã¢Âõ¾¡ý!
±ø§Ä¡Õõ ¦¸¡ïºõ ¬§Ä¡º¨É¸¨Çî ¦º¡øÖí¸!
±ýÚõ «ýÒ¼ý,ÐǺ¢.

Posted by துளசி கோபால் at 9/25/2004 02:35:00 PM

என்னங்க ஒன்னும் புரியலையா?

ஆயிரம் பதிவு கண்ட நம்ம துளசி டீச்சருடைய முதல் பதிவு இது. போன மாதத்தில் வல்லியம்மா வாழ்த்துச் சொல்லிய பதிவைப் படித்ததும் டீச்சரோட முதல் பதிவு என்னவாக இருக்கும்னு போய்ப் பார்த்தா சுவத்துல கிறுக்கி வச்ச பால் கணக்கு மாதிரி இருக்கு.
TSCII எனும் வகை எழுதியை (ஃபாண்ட் )பயன்படுத்தியிருக்காங்க.இது நடந்தது 2004ல்.அப்பல்லாம் நாம பதிவெழுதவே இல்லைங்க .
பின்னால 2007ல்'வலைச் சரம் புகழ்' சீனா சார் துப்பறிந்து அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிச்சிருக்கார்.

பதிவுலக ஜாம்பவான் 'மணற்கேணி வென்ற சிங்கம்' தருமி சார் 2009 ல் நம்மள விட வேகமா டீச்சர் பதிவு போடுறாங்களேன்னு எட்டிப் பார்த்திருக்கார்.
சரி இதுக்கு யூனிகோட்ல என்ன பொருள்னு தெரிஞ்சிகிட்டு இதை வச்சி ஒரு பதிவு ஒப்பேத்திடலாம்னு தோணிச்சு.

அதுக்குள்ள விடுமுறை விருந்தினர் வருகைன்னு ரொம்ப பிஸி.
இப்பத்தான் டைம் கிடைத்தது.
லாபம் என் கணக்குல ஒரு பதிவு.
இதுதான் ஆயிரம் பதிவு கண்ட அன்பு துளசி டீச்சரின் கன்னிப் பதிவு....முதல் பதிவு.




«¨ÉÅÕìÌõ Žì¸õ.
¦¾Ã¢Â¡ò¾ÉÁ¡ ±¨¾§Â¡'ìÇ¢ì' ¦ºïÍ þ¨¾ ¬ÃõÀ¢îÍð§¼ý. ¯¾Å¢ ¦ºöÂÈÐìÌ¿¢¨È ¿ñÀ÷¸û þÕì¸¡í¸ ±ýÈ ¨¾Ã¢Âõ¾¡ý!
±ø§Ä¡Õõ ¦¸¡ïºõ ¬§Ä¡º¨É¸¨Çî ¦º¡øÖí¸!
±ýÚõ «ýÒ¼ý,ÐǺ¢.



அனைவருக்கும் வணக்கம்.
தெரியாத்தனமா எதையோ'க்ளிக்' செஞ்சு இதை ஆரம்பிச்சுட்டேன். உதவி செய்யறதுக்குநிறைய நண்பர்கள் இருக்காங்க என்ற தைரியம்தான்!
எல்லோரும் கொஞ்சம் ஆலோசனைகளைச் சொல்லுங்க!
என்றும் அன்புடன்,துளசி.


இன்னும் பல நூறு ஆயிரம் பதிவிட்டு பதிவுலகை ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் துளசி டீச்சர் (அக்கா).

துளசிதளத்தின் முதல் பதிவுக்கான உரல்:



டிஸ்கி:இந்த துப்பறியும் வேலைக்கு உதவியாக இருந்த NHM Converter க்கான உரல் கீழே.இது நெருப்பு நரியின் ஆட் ஆன் ஆகவும் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

விருந்தும்...மருந்தும்


எரிச்சல் தந்த
இரைச்சலும் கூச்சலும்

அலுத்துப் போன
சண்டையும் சமரசமும்

வெறுப்பேற்றிய
உரசல்களும் பூசலும்

வெறித்தத் தனிமையில்
கரைந்து போக

ஆட்டமும் பாட்டும்
கூத்தும் கும்மாளமும்
கிண்டலும் கேலியும்
சிரிப்பும் சிணுங்கலும் மட்டுமே
படிமங்களாய்
நினைவின் அடுக்குகளில்

வெட்கம் விட்டுக்
காத்திருக்கிறது
அடுத்த விடுமுறைக்கும்
புதுப்பித்தலுக்கும்

ச்சீய்......


குடிச்சிட்டு ஓட்டியிருப்பான்
சைடு வாங்கும் போது ஏத்தியிருக்கான்
அரைத் தூக்கத்தில் இருந்தவளை
உலுக்கி எழுப்பியது
ஓட்டுநரின் குரல்
சாலையில் சூழ்ந்திருந்த
கூட்டமும் பரபரப்பும்
விபத்துக்கானது எனப் புரிந்த போது
முதல் கவனம் குழந்தைகளின் பக்கம்
யாரும் பார்க்காதீங்க
அந்தப் பக்கம் திரும்பாதே
பயந்துடுவே
அடிபட்டவர் என்னவாகியிருப்பார்
லேசானதா பலமான அடியா
ஆணா பெண்ணா
பிழைத்துக் கொள்வாரா
கேள்விகள் சூழ்ந்தாலும்
எட்டிப் பார்க்க கலக்கமாயிருந்தது
கடந்து போகும் வண்டிகளை
கை நிறுத்தும் கூட்டம்
என்ன சொல்லிப் போகலாம்
ஃபேமிலியா இருக்காங்க
குழந்தைகள் இருக்காங்க
இதைத்தான் எப்போதும் சொல்லி
தவிர்க்கிறார் ஓட்டுநர்
வேகமெடுக்கும் வண்டியில்
மறந்தும் அந்தப் பக்கம் திரும்பாமல்
எதுவும் ஆகியிருக்கக் கூடாதென
வேண்டுதலோடு மட்டும்
மனசாட்சியை மறந்து
செய்வதறியாத இயலாமையோடு
பத்தோடு பதினொன்றாய்
கடந்து போகும் சந்தர்ப்பங்களில்
ச்சீய்...என்று
என்னை நானே
காறி உமிழ்ந்து கொள்கிறேன்