மொத்தப் பதிவுகளும் இங்கே

காத‌லுக்காக‌....


உருவாக்க‌ப் ப‌ட்டேனா
உடைந்து போனேனா
என‌த் தெரியாத‌
காத‌லுக்காக‌
இருப்பதாய் நினைத்த‌
இல்லாத ஒன்றுக்காக‌

அப்பாவுடனான‌
பிடிவாத யுத்தத்தில்
அவர் கனவுகளை
அம்மாவுடனான‌
சமாதான யுத்தத்தில்
அவள் ஆசைகளை

உறவுகளுடனான‌
சமரச யுத்தத்தில்
அவர்களின்
எதிபார்ப்புகளை

கொன்ற‌த‌ற்கான‌
தண்டனை
ஆயுட்கைதியாய்
உன்னுடன்






13 மறுமொழிகள்::

அமைதிச்சாரல் said...

கவிதை ஜூப்பரு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா புலம்பினதை
நல்லாவே கவிதைக்கு கொண்டுவந்துட்டீங்க கண்மணி..

எல் கே said...

புலம்பல் கவிதையாய் மலர்ந்துள்ளது. டீச்சர் நலம்தானே ?

கண்மணி/kanmani said...

அமைதிச்சாரல் முத்து நன்றி

எல் கே உள்ளேன் ஐய்யா

கோபிநாத் said...

அக்காவுக்கு ஒரு வணக்கம் ;)

எல் கே said...

ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து அதுதான் கேட்டேன்

திகழ் said...

/அப்பாவுடனான‌
பிடிவாத யுத்தத்தில்
அவர் கனவுகளை
அம்மாவுடனான‌
சமாதான யுத்தத்தில்
அவள் ஆசைகளை

உறவுகளுடனான‌
சமரச யுத்தத்தில்
அவர்களின்
எதிபார்ப்புகளை

கொன்ற‌த‌ற்கான‌
தண்டனை
ஆயுட்கைதியாய்
உன்னுடன்/

உண்மை

ஆயிஷா said...

கவிதை அருமை.

வல்லிசிம்ஹன் said...

எல்லோருமே இதைச் செய்திருகிறோமா:(
புலம்பலும் நல்லதே.

கண்மணி/kanmani said...

@?????நன்றி ஆயிஷா

கண்மணி/kanmani said...

@கோபிநாத்


கோபி நலமா எஙிருக்கிறாய் எப்பொ கல்யாண்சாப்பாடு

கண்மணி/kanmani said...

@வாங்க வல்லியம்மா நலமா உறவுகளின் எதிர்பார்ப்புகளைஸ் சிதைக்கும் காதல் தோற்றுப் போனால் புலம்பல் தானே

மணிவேலன் said...

கவிதையின் ஆரம்பமே அசத்தல்,
“உருவாக்க‌ப் ப‌ட்டேனா
உடைந்து போனேனா
என‌த் தெரியாத‌
காத‌லுக்காக‌........”

கவிதை அருமை டீச்சர்.

Post a Comment