PAGE LOAD TIME

தமிழ் மணம் கவனிக்க

நீண்ண்ண்ண்ண்ட நாள் லீவு எடுத்துக்கிட்டு த‌மிழ் ம‌ண‌ம் வ‌ந்தேனுங்க‌
காக்கா வ‌டையைத் தூக்கி போன‌ க‌தை போல‌ என் பிலாக்ஸ்பாட் பேரில் .காம்[.com) காணோம்
ச‌ரி எதுனா ந‌ம‌க்கென்ன‌னு பிலாக்க‌ர் டிப்ஸ் ப‌திவு போட்டு பார்த்தா தமிழ்ம‌ண‌ம் ம‌க்க‌ர் செய்யுது.
ஏற்க‌ன‌வே சேர்த்தாச்சுனு வ‌ருது .ஆனால் முக‌ப்பில் வ‌ர‌லை
சரி ம‌றுப‌டியும் டூ வுட்டுடுவோம்னு பார்த்து ச‌ரி க‌டைசியா ஒரு முறை உத‌வி ப‌க்க‌ம் போவோம்னு பார்த்தால் ...எங்கே...எங்கே...??

முக‌ப்புல‌ விபியாவும் காணோம் அறிவுப்புக‌ள் தேட‌

அய்யா சாமீ..என் யோச‌னை இதுதான்
முகப்புல நிறைய குறிச்சொற்கள் தலைப்புல இருக்கிறது போல உதவிப் பக்கம் அல்லது அறிவிப்பும் சேர்த்துடுங்ககளேன்

"புகைப் ப‌ட‌ங்க‌ளை மாற்றும் செய்முறை "திற‌ந்தா தான் த‌மிழ்ம‌ண‌த்தின் மாற்ற‌ங்க‌ள் அறிவிப்புக‌ள் தெரிய‌ வ‌ருகிற‌து.

ஏதோ எதிர்நீச்ச‌ல்கார‌ர் ப‌திவைப் ப‌டித்து நானும் க‌ரையேறி ப‌திவைச் சேர்த்துட்டேன்.
அவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள்

ந‌ம்ம‌ யோச‌னை ச‌ரிதானுங்க‌ளே
புதுசா வார‌வ‌ங்க‌ளுக்கும் என்னைப் போல‌ லீவு எடுத்துக்கிட்டு வார‌வ‌ங்க‌ளுக்கும் உத‌வியா இருக்கும் இல்லைங்க‌ளா?

21 மறுமொழிகள்::

கோபிநாத் said...

\\நீண்ண்ண்ண்ண்ட நாள் லீவு எடுத்துக்கிட்டு த‌மிழ் ம‌ண‌ம் வ‌ந்தேனுங்க‌\\

யக்கா பாதி லீவுலியே வந்துட்டிங்க போலியே...அப்பகூட வந்தேனுங்க தான் சொல்றிங்க...வந்துட்டேன்னு எப்போ வருமோ!?

எதுக்கும் ஒரு வருக வருக சொல்லிடுவோம் ;))

முனைவர் பரமசிவம் said...

மிக நல்ல யோசனை கண்மணி.

கோமதி அரசு said...

கண்மணி வந்து விட்டீர்களா!

நிறைய எழுதுங்க.
கயல்விழி முத்துலெட்சுமி அம்மா நினைவிருக்கா?
அது நான் தான்.

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

அறிவன்#11802717200764379909 said...

எனக்கும் இந்தப் பிரச்னைகள் இருந்தது..எதிர்நீச்சல் காரர் யார், பதிவின் சுட்டியை அளிக்க முடியுமா?

கண்மணி/kanmani said...

http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html

கண்மணி/kanmani said...

நன்றி கோபி gomadhi அம்மா நன்றி
நன்றி kaviyalagan

கண்மணி/kanmani said...

நன்றி பரமசிவம் சார்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு யோசனை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 1)

தமிழ் பிரியன் said...

டீச்சர், எப்படி இருக்கீங்க..
இந்தியா வந்து ஒரு வருஷமா பதிவு எழுதாம போன வாரம் ஒன்னை எழுதிட்டு தமிழ்மணம் பக்கம் போனா ஒன்னுமே வெளங்கலை... போங்கடான்னு விட்டுட்டேன்.

எதிர்நீச்சல் இடுகைப் பார்க்கிறேன்.. :)

புதுகைத் தென்றல் said...

ஆஹா நலமா,

என் ப்லாக்குக்கும் இதே கதைதான். போனாபோகட்டும்னு விட்டுட்டேன்.

அறிவன்#11802717200764379909 said...

@கண்மணி/kanmani

நன்றி கண்மணி.

Anonymous said...

கொஞ்ச நாள் தலைவைக்காமல் இருந்தால் ! தலைகீழாக மாறி இருக்கும் என்பதன் சாட்சி இது !!!

பல மாறுதல்கள் வந்துவிட்டன ப்ளாக்கர் முதல் தமிழ் மணம் வரை !!!

அப்டேட் செய்துக் கொண்டு இருப்பது நல்லது !

கண்மணி/kanmani said...

@இக்பால் செல்வன்
காலை ஆட்டிக்கிட்டே தூங்கலைனா பிணம்னு சொல்லுவாங்கனு ஒரு படத்துல வரும் அப்படித்தான் கொஞ்சநாள் தலை காட்டலைனா ....ஆனாலும் தமிழ்மணம் உதவிப் பக்கத்தை முகப்பில் வைக்கலாமே

பழூர் கார்த்தி said...

உதவி பக்கம் எளிமையாய் தேடி உள்வரும் படி இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆலோசனை பயனுள்ளது!

***

உங்கள் பிரச்சினை என்னவென்று புரியவில்லையே, .காம், .இன் னாக மாறி விட்டதா?

***

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!

கண்மணி/kanmani said...

@பழூர் கார்த்தி
ஆமாம்
.காம் .இன் ஆக மாறி இடுகை சேர்க்க முடியலை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழ்மண அறிவிப்புகளில் பதிவர் நீச்சல்காரர் மூலம் வழி கிடைத்தது.
பின்னர் அது குறித்த பலருடைய பதிவுகளில் வழிமுறை காணமுடிந்தது
யாருடைய பதிவில் தேடுவது என்பது விட தமிழ் மண உதவிப் பக்கம் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.ஆனால் அது அறிவிப்புகள் என்ற பெயரில் உள்ளடங்கி இருப்பதால் சட்டென்று அறிய முடியாது.
எனவேதான் இப்படி ஒரு வேண்டுகோள்.
ஆனால் இதைத் தமிழ்மணம் கருத்தில் கொள்ளுமா தெரியவில்லை

ILA(@)இளா said...

எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே? சங்கத்து ஆளா?

கண்மணி/kanmani said...

ம்ம்ம்ம் அதே அதே ... இந்த நாயனத்திலும் அதே சத்தம் வருதா

சக்தி said...

வணக்கம் உங்கள் வருகைக்கும் அருமையான மறுமொழிக்கும் நன்றி .
உங்கள் பெயரின் சுட்டியால் வலைப்பூவை எட்டிப் பார்த்து மிரண்டுவிட்டேன்.
கல் தோன்றி மண் தோன்றா என்பது போல பதிவுலக அனுபவசாலிகள் முன்
நான் கத்துக்குட்டி...தொடர்ந்து எழுதுவோம் ..கருத்துக்களைப் பகிர்வோம்
கடலூர் என்பதால் தொடர்பு கொள்ள முடிந்தாலும் மகிழ்ச்சி

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்மணி. நெடு நாட்களுக்குப் பின் உங்களைப் பார்ப்பது அருமையாக இருக்கிறது.
சீக்கிரம் உங்கள் வழக்கமான சிறந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நல்வரவு.

Bagawanjee KA said...

கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே என்று நீங்கள் எழுதி இருப்பதை ,தமிழ் மணம் கவனித்து சரி செய்தால் நல்லது !சில நாட்களாகவே தமிழ் மணம் அப் டேட் ஆவதில் சிக்கல் ஆகிக் கொண்டே இருக்கிறது :)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)