PAGE LOAD TIME

கண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...

வலை மக்களே!!!
இன்னைக்கு ஒரு கல்யாண வைபவம் நடந்தேறியிருக்கு.உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்!!!!

மணமகன் பெயர்:கண்ணன்

வயது சுமார் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம்

நிறம் வெள்ளை அங்கங்கே கருப்பாக திட்டுத் திட்டாக இருக்கும் [தேமல் இல்லை]

நீளம் :முக்கால் அடி இருக்கலாம்.

அகலம்: சுமாரான அளவுதான்

முடி சற்று அடர்த்தி குறைவு

குணம்: பார்க்க சாது ஆனால் பொழைக்கத் தெரிந்த சாமர்த்திய சாலி.தன் தேவைகளைக் கேட்டே பெற்றுக் கொள்வான்.நிறைவேறும்வரை தூங்க விடமாட்டான்.

வேலை: சுய தொழில் [SI அப்படின்னா சும்மா இரூப்பவன்]

இவனுக்குத் தாங்க கல்யாணம் ஆகியிருக்கு.ரொம்ப நாளா தனியா சுத்திக்கிட்டிருந்தவன் வாழ்க்கை போரடித்துப் போக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசை வந்திருக்கு.ஆனா ஊர்ல யாருக்கும் இவனைப் பத்திக் கவலைப் பட நேரமில்லீங்கோ.

ஆனா இவன் இருக்கிற இடத்துல ஒரு கோயில் பூசாரி இருந்தாருங்கோ.அவருக்கிட்ட நேராப் போய் சொல்லிப் பார்த்தான்.இவன் சொன்னது அவர் காதுல விழலை.அப்பால அவர் கனவுல போயி மிரட்டியிருக்கான்.
'இப்படியே எத்தனை நாள் காளையாட்டம் சுத்திக்கிட்டிருப்பேன்.எனக்கொரு கால்கட்டு போடக்கூடாதா?நான் எப்படி பொழப்பு நடத்தறதுனு சொல்லவும் அவரு மனமிறங்கி பொண்ணு தேடி அலைஞ்சாருங்க.

வெட்டியா சுத்தற இவனுக்கு பால் வியாபாரம் செய்யும் சீதா என்னும் பசு மாதிரி அடக்கமான பொண்ணைப் பாத்து தன் சொந்த செலவுலேயே தடபுடலா கோயில்ல வச்சி தாரை தப்பட்டை முழங்க கல்யாணம் பண்ணி வைச்சுட்டாருங்க.

மொய் எழுதாட்டியும் பக்கத்து ஊரு ஜனங்கெல்லாம் வந்து பார்த்து ஆசிர்வாதம் பண்ணாங்க.
சாப்பாடு எல்லாம் போடலைங்க.கல்யாணம் முடிஞ்சு அவங்க அவங்க ஊட்ல போயி சாப்பிட்டுக்கிட்டாங்க. இப்படியொரு கல்யாணமான்னு டி.வி காரங்க கூட படம் புடிச்சாங்கன்னா
பாருங்களேன்.



[செய்தி:கேரளாவில் கொச்சியில் அதானி என்ற இடத்தில் காளிதாஸ் சைதன்யா என்ற கோயில் அர்ச்சகர் கனவில் அந்த கோயில் காளை 'கண்ணன்' தனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்க,அவர் 'சீதா' என்ற பசு மாட்டுக்கும் கண்ணன் காளை'க்கும் தன் செலவில் ஊர் மக்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.மாலை மாற்றியது மட்டுமல்லாமல் 'திருமாங்கல்யமும்' அணிவிக்கப் பட்டிருக்கிறது.

வேற ஒன்னும் இல்லீங்க கலி முத்திடுச்சி..................

18 மறுமொழிகள்::

Thamiz Priyan சொன்னது…

என்னத்த சொல்ல டீச்சர்!, கலி முத்தி தான் போச்சு. கழுதைக்கு கல்யாணம் செய்து, மழை வர வைக்க முயற்சி செய்பவர்கள் தானே நாம். :(

துளசி கோபால் சொன்னது…

தங்கத்தாலியா?

TBCD சொன்னது…

கொடுமை...

ஒரு சின்னக் கேள்வி..

இரண்டு மாடூம் ஒரே சாதியா.. :P

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

:)

பாச மலர் / Paasa Malar சொன்னது…

கனவு வந்ததுதான் வந்துச்சே..ஒரு ஏழைப்பொண்ணு சீதா வந்து கல்யணம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்ருக்கக்கூடாதா..அப்டின்னா ஒரு வேளை கனவையே மறந்துருப்பார்..எல்லாம் நேரம்..

கண்மணி/kanmani சொன்னது…

தமிழ்ப் பிரியன் பாம்பு கூடவே கல்யாணம் ஆயிருக்கு தெரியுமா ஹாஹா..

துளசிக்கா நிஜப் பொண்ணுக்கே கவரிங் தாலி வாங்குமளவு தங்கம் விலை டாப்ல இருக்கு...இதுல மாட்டுக்கா?

கண்மணி/kanmani சொன்னது…

முத்து ஹி..ஹி..இதத்தான் செய்ய முடியும்

பாசமலர் இதுதான் 'மாட்டுப் பொண்ணு' தெரியுமோ

கண்மணி/kanmani சொன்னது…

டிபிசிடி ரெண்டும் வெவ்வேற சாதி
ஒன்னு 'ஆண்' ஜாதி
ஒன்னு 'பொண்ஜாதி'

நிஜமா நல்லவன் சொன்னது…

அட ராமா, என்னத்த சொல்லுறது. காலம் ரொம்ப தான் கெட்டுப்போச்சு.

நானானி சொன்னது…

ஹி...ஹி...ஹி...
மொதொராத்திரி எங்க வச்சு? ஹி..ஹி..ஹி..

கோபிநாத் சொன்னது…

ம்ம்..

காட்டாறு சொன்னது…

காமெடியா சொன்னாலும், சிரித்து முடித்ததும், மனசு கனத்து தான் போகுது கண்மணி. என்னப்பா இதெல்லாம்? நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லுதுன்னு சொல்லுறது எந்த வகைல சேர்த்தி? இக்கதையை கேட்கும் போது இன்னும் நகரவேயில்லையேன்னு தோணுதே.

அபி அப்பா சொன்னது…

நல்ல முன்னேற்றம் டீச்சர்! வாழ்க பாரத மணித்திரு நாடு!!

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஏதோ ராதா கல்யாணம்னு நினைச்சு வந்தேன்மா:)

இப்படிக்கூட நடக்கிறதா. கடவுளே.
ரொம்ப அவசியம்:((

தென்றல்sankar சொன்னது…

weldone teacher!

பெயரில்லா சொன்னது…

கனவு வந்ததுதான் வந்துச்சே..ஒரு ஏழைப்பொண்ணு சீதா வந்து கல்யணம் பண்ணி வைக்கச் சொல்லிக் கேட்ருக்கக்கூடாதா..அப்டின்னா ஒரு வேளை கனவையே மறந்துருப்பார்..எல்லாம் நேரம்..

ellorum ellorukkum (including Gods/Goddess) kalyanam pannee vaikiraanga but manitharkalai maranthuvittaanga... ethanai ethanai pengal v.thatchanai enta payaril......

பெயரில்லா சொன்னது…

//வேற ஒன்னும் இல்லீங்க கலி முத்திடுச்சி..//

கலி முத்திடிச்சு இல்லை பைத்தியம் ரொம்ப ரொம்ப முத்திடிச்சு :-)))

பெயரில்லா சொன்னது…

//வேற ஒன்னும் இல்லீங்க கலி முத்திடுச்சி.//

கலி முத்திடிச்சு இல்லை பைத்தியம் ரொம்ப ரொம்ப முத்திடிச்சு :-)))

கருத்துரையிடுக

லேபிள்கள்

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1) reverse/flip text விளையாட்டு (1)