PAGE LOAD TIME

3G ஃபோனில் அயித்தானும் நானும்...










ந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.

பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms அனுப்ப அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகி விட்டது.

மொபைல் போனின் நெட் வொர்க் செட்டிங்ஸில் GSM  என்பதை Dual mode என மாற்றி செட் செய்து கொள்ள வேண்டும்.
செய்தவுடன் போனின் முகப்பில் 3G ஐகான் வந்து விடுகிறது  [Gprs க்கு G போல]

அப்புறமென்ன 3.5G N97 போனில் அவரும் E71 போனில் நானுமாக பேச ஆரம்பிக்க வீட்டிலிருந்த வாண்டுகளுக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் ஒரே கலாட்டாதான்.சோனி எரிக்க்ஷன் W910i போனிலும் வேலை செய்கிறது.எனக்கென்னவோ N97 ஐ விட மற்ற இரண்டில் நன்றாக வேலை செய்வதாகத் தோன்றியது.

அந்தப் பக்கம் பேசுபவரின் முகம் பெரிய திரையிலும் நாம் எப்படித் தெரிகிறோம் என்பது சின்னத்திரையிலுமாக டிஸ்ப்ளே ஆகிறது.
இதில் நம் உருவம் வேண்டாம் என்றாலோ அல்லது பேசுபவர் உருவம் தெரிய வேண்டாம் என்றாலும் மியூட் செய்து கொள்ளலாம்.நம் உருவத்துக்கு பதில் வேறு ஸ்டில் போட்டோவும் போட்டு வைக்கலாம்.
அப்புறமெதுக்கு 3G??:))))

என்னதான் தேர்ட் ஜெனெரேஷன் சேவைன்னாலும் எடுத்த எடுப்புலேயே ஒழுங்கா வேலை செஞ்சுடுமா என்ன?குய்ய்ய்ங் குர்ர்ர் ன்னு ஏதோ சத்தத்துடன் தான் வீடியோ ஓடுது.
அது மட்டுமில்லாமல் வீடியோவும் வாய்ஸும் ஸிங்க் ஆகலை.அலைவரிசைக் குறைந்த இணைய இணைப்பில் சேட் செய்யும் போது நாம் பேசி முடித்த பின் வாய் திறப்பது போல இருக்கிறது.

அத்தோடு பேசுவதற்காக முகத்தருகில் ஃபோனை வைத்திருப்பதால் ஜூம் செய்யப்பட்டு பயம்மாக தெரிகிறது.சாப்பிடாத பசங்களுக்கு வேணா க்ளோசப்பில் பூச்சாண்டி காட்டி ஊட்டலாம்.:))
ஹெட் ஃபோன் அல்லது ப்ளூடூத் ஹெட்செட் வைத்துக் கொண்டு போனை கொஞ்சம் லாங் ஷாட்டில் வைத்துப் பேசினால் நாம் நாமாகத் தெரிய வாய்ப்பிருக்கு.

பிஎஸெனெல் மட்டுமே இந்த சேவையை நடைமுறைப்படுத்தியிருப்பதால் மற்ற நெட்வொர்க் காரங்களுடன் பேச முடியாது.
விளம்பரத்தில் ஒரு நிமிடத்திற்கு 0.30 பைசா கட்டணம் னு சொல்றாங்க.ஆனால் 0.70 காசு கழிக்கிறாங்க.மாதக் கட்டணம் ரூ 25/-
இன்னும் voice conferencing,music download,online games வரப் போகுதாம்.அதி வேக பிரவ்ஸ்ங்,கேபிள் இணைப்பும்
பெறமுடியுமாம்.
விளம்பரப் படுத்துவது போல காதுக்கு இதமான ஒலி தெளிவான வீடியோ என்பது இப்போது இல்லை ஆனால் நிச்சயம் மேம்படுத்தப் படக்கூடும்.
இங்கேயே அயித்தான் சேலம் போய் டிரை பண்ணாங்க கிடைக்கலை.இன்னும் சேலம் கனெக்ஷன் லிஸ்ட்டில் வரலை போல.

தேவை:
முன் பக்கம் பின் பக்கம் என இரண்டு கேமிரா உள்ள செல்ஃபோன்.அது GSM  மட்டுமில்லாது 3G கனெக்ஷன் சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும்.
3G பிஎஸ்என்எல் கனெக்ஷன்.
நடப்பு போஸ்ட் பெய்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒரு குறுந்தகவல் மூலம் 2G சேவையை 3G யாக மாற்றிக் கொள்ள முடியும்.
வேண்டாமென்றால் மீண்டும் 2G க்கு வந்து விடலாம்.

பயன்:
வெளி நாட்டுத் தொடர்புக்கு ரோமிங் வசதி இருக்கான்னு தெரியலை.இருந்தால் வெள்நாட்டில் இருக்கும் நண்பர்கள் இங்கிருக்கும் குடும்பத்தாரோடு குழந்தைகளோடு முகம் பார்த்து பேச முடியும்.
 இனி  அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து  கலர் டிசைன்  செலக்ட்  செய்யலாம்.
காதலர்களுக்கு ............வரப் பிரசாதம் .....

இது ஒரு  அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை.

43 மறுமொழிகள்::

நட்புடன் ஜமால் சொன்னது…

இது ஒரு ஜாலி தான் ...

ராமலக்ஷ்மி சொன்னது…

வந்தாச்சா? உபயோகித்தும் பார்த்தாச்சா? ரைட்:)!

Thamiz Priyan சொன்னது…

News is Good! But the video quality is not good!

கண்மணி/kanmani சொன்னது…

@நட்புடன் ஜமால்
ஜமால் இதை எழுதும் போது உங்களையும் தமிழ்ப் பிரியனையும் நினைத்துக் கொண்டேன்..[குழந்தையைப் போனில் பார்க்க முடிந்தால் சந்தோஷம் தானே]

கண்மணி/kanmani சொன்னது…

@ராமலக்ஷ்மி

நன்றி ராமலஷ்மி..பலருக்கு ஆடம்பரத்திற்கு சிலருக்கு தேவைக்கு

கண்மணி/kanmani சொன்னது…

@தமிழ் பிரியன்

உண்மை..வீடியோ மோசம்.மேம்படுத்தப் படலாம்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சந்தோசமான விசயம். வெளி நாடுகளுக்கும் பேச முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கண்மணி/kanmani சொன்னது…

@அக்பர்
அதுவும் விரைவில் சாத்தியப்படலாம்.

manjoorraja சொன்னது…

அமெரிக்கா மற்றும் சில வெளிநாடுகள் 4Gயை தாண்டி எப்பவோ போய்விட்டது. நாம் இப்பத்தான் 3ஜிக்கே வந்திருக்கோம்.

இருந்தாலும் வரவேற்கலாம்.

புதியவர்களுக்கு உங்கள் பதிவால் பயன் உண்டு.

வாழ்த்துகள்

கண்மணி/kanmani சொன்னது…

@மஞ்சூர் ராசா

3Gக்கே நாம காணாதது கண்டது போல குதிக்கிறோம்... 4G கூட யா?

தகவல் புதிது.நன்றி

அபி அப்பா சொன்னது…

ரைட்டு! நடத்துங்க!!! அது மாயவரத்துக்கு எட்டி பார்க்க பல வருஷம் ஆகும்போல இருக்குதே டீச்சர்!

கண்மணி/kanmani சொன்னது…

@அபி அப்பா

உங்க ஊருக்கு வந்தாலும் எங்க ஊருக்கு வராதே சீக்கிரமா

Chitra சொன்னது…

இது ஒரு அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை.

......... necessity vs luxury.
:-)

PPattian சொன்னது…

மூணாவது ஜெனரேசனில் உள்ள நான் மூணு ஜெனரேஷனுக்கு முன்னால பாட்டிக்கு பேச முசியுமா..அவங்க கூட பேசி ரொம்ப நாள் ஆய்டிச்சி :)

கண்மணி/kanmani சொன்னது…

@PPattian : புபட்டியன்
y not ?இன்னும் கொஞ்சநாள்ல அதுவும் வருதாம்:)))))))))

குலவுசனப்பிரியன் சொன்னது…

//இது ஒரு அதி வேக நாகரிக வளர்ச்சி என்பதன் அடையாளமேயன்றி அத்தியாவசிய தேவையில்லை//
சாமானியர்கள்கூட மாதம் 80 வெள்ளிக்கு அலைபேசி சேவை வைத்துக் கொள்கிறார்கள். எப்படி கட்டுபடியாகிறது என்று தெரியவில்லை. நான் இன்னும் 40 வெள்ளி முன்பணம் கொடுத்து பெறும் இணைப்பு மட்டும்தான் வைத்திருக்கிறேன்.

கண்மணி/kanmani சொன்னது…

@குலவுசனப்பிரியன்
கம்யூனிகேஷனுக்கு அலைபேசி அத்தியாவசம்தான்.ஆனால் வீடியோ அலைபேசி கால் நம் விருப்பம் மட்டுமே.

குலவுசனப்பிரியன் சொன்னது…

//கம்யூனிகேஷனுக்கு அலைபேசி அத்தியாவசம்தான்.// உண்மைதான். அதற்கு மலிவு விலை கைபேசியே போதும். IPhone-ஐ பற்றி நியூயார்க் காரர்கள், இது எல்லா வேலையும் செய்யும், பேசுவதைத் தவிர என்று பகடி செய்வார்கள்.

நண்பர்கள் சிலர், வேலை செய்யும் நிறுவனம் இதற்கென்றே மாதப்படி கொடுப்பதால் மின்னஞ்சல் வசதிக்காக IPhone வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு எப்படி கட்டுபடியாகிறதோ தெரியவில்லை.

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பயனுள்ள இடுகை. எழுத்து பலம் செல் பலம் பெற உதவுகிறது. வாழ்த்துக்கள்

karthik சொன்னது…

பயனுள்ள் பதிவுகள்

கண்ணா.. சொன்னது…

//பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms அனுப்ப அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகி விட்டது//

என்னது தின்னவேலில 3G வந்துட்டா...

அப்போ இனி எங்க அப்பத்தா கூட 3G ல பேசலாமா...அய் .. ஜாலி..

அதுசரி..நீங்களும் நெல்லைதானா டீச்சர்...

நானும் நெல்லைதான்..இப்போ துபாய்ல 3G போனை வாங்கி வச்சு.. voip setup ல் ஊருக்கு பேசி கொண்டிருக்கிறேன்..

அதான் இங்க ஃசீப்

கண்மணி/kanmani சொன்னது…

@கண்ணா..

தில்லைக்குச் சொந்தக்காரி இப்போ நெல்லைக்கு விருந்தாளி வே

நல்லாவே அப்பத்தாக்கூட பேசலாம் என்னா...

நெல்லைக்கார பயபுள்ளைக கூட்டணிதான் பின்னூட்டங்களில் பாக்குறேனே :))))))))))

இந்த மாதம் 25 தேதி நெல்லைக்கு வந்துடுச்சு.ஆனால் துபையிலிருந்து பேச முடியாது மக்கா.இங்கன வந்த பிறகு பேசலாம்.

கண்ணா.. சொன்னது…

வந்தாரை வாழவைக்கும் நெல்லைக்கு வந்ததனால் நீங்களும் இனி நெல்லைமக்கதான்..

அதுசரி உங்க ப்ளாக்கில் ஃபாலோவர் ஆனாலும் உங்க இந்த பதிவு இன்னும் என் டேஷ்போர்டுக்கு வரலையே....இதுக்கு ஓரு பதிவு போடுங்க டீச்சர்

கண்மணி/kanmani சொன்னது…

@கண்ணா..
நெல்லையோ தில்லையோ
இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம்

அதுனாலதான் தமிழன் உழைப்பாளியாகவும் மத்தவர்கள் முதலாளியாகவும் இருக்காங்க:(

ச்சும்மா லுலூயிக்காச்சும் பாலோயரா சேர்ந்தா பதிவு வராது.செட்டிங்ஸில் பாருங்க.சப்ஸ்கிரைப் ஆப்ஷன் இருக்கான்னு

கண்ணா.. சொன்னது…

எல்லாருக்கும் நான் ஃபாலோயரா சேர்ந்தா உடனே டேஷ் போர்டுக்கு வந்திரும். தில்லை காரங்கதான் ஏதோ தில்லுமுல்லு பண்ணுராங்கன்னு நினைக்குறேன்.

என் டேஷ்போர்டில் வந்த மெஸேஜ்

//You have followed this URL, but we couldn't find a feed for it. Please check that the URL is correct:
http://kouthami.blogspot.com/


இதுக்கு என்ன பண்ணன்னு தெரியல.. கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்...

Unknown சொன்னது…

//பேசுவதற்காக முகத்தருகில் ஃபோனை வைத்திருப்பதால் ஜூம் செய்யப்பட்டு பயம்மாக தெரிகிறது.சாப்பிடாத பசங்களுக்கு வேணா க்ளோசப்பில் பூச்சாண்டி//
அப்பறும் என்னாத்துக்கு வீடியா.
எனக்கெல்லாம் ஏற்கனவே பூச்சாண்டி முகம். பிள்ளைங்க அரண்டிடும்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

Very useful post thanks kanmani.....

கண்மணி/kanmani சொன்னது…

@கண்ணா..

மற்றவர்களுக்கு என் பதிவு சப்ஸ்கிரைப் ஆகுது.மற்றவர்கள் பதிவு உங்களுக்கு வருது.என்னோடது மட்டுமில்லை??:(

பொதுவா செட்டிங்க்ஸில் site feed box -ல் உங்க பதிவின் கரெக்ட் ஃபீட் உரல் குடுக்கனும்.இல்லை ஒன்னும் இல்லாமல் காலியாக இருத்தல் நலம்.
ஒருவேளை என்னோடதும் உங்களோடதும் atom/rss னு மாறினால் தப்பு வருமா தெரியல.
காலியா இருந்தா நோ ப்ராப்ளம் டிரை இட்

கண்மணி/kanmani சொன்னது…

@சுல்தான்

ஹி..ஹி..ஹி..
க்ளோசப்ல ஆமிர் கானோ ஐஸோ யாரானாலும் பூச்சாண்டிதான் பாய் சாப்

துபாய் ராஜா சொன்னது…

பத்தோடு பதினொன்னா நம்ம ஊருக்கும் வந்தாச்சா....ரைட்டு...

கண்ணா சொன்ன மாதிரி எங்களுக்கெல்லாம் voip தான் ரொம்ப சீப்.

Unknown சொன்னது…

எக்கா கோபப்படாத (தமாஷுக்கு)"சட்டில இருக்குறதுதான அகப்பையில வரும்னு" அந்த போனுல்ல உள்ள கேமரா சொல்லுத மாதிரி இருக்கு."அங்க மட்டும் என்னவாம்" அப்பிடின்னு நீ மொனங்குவ.பரவாயில்ல அப்புறம் "இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்." னு ஒரு பஞ்ச் வச்ச பாரு,அந்த நேர்மை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புடிச்சிருக்கு.

Unknown சொன்னது…

எக்கா கோபப்படாத (தமாஷுக்கு)"சட்டில இருக்குறதுதான அகப்பையில வரும்னு" அந்த போனுல்ல உள்ள கேமரா சொல்லுத மாதிரி இருக்கு."அங்க மட்டும் என்னவாம்" அப்பிடின்னு நீ மொனங்குவ.பரவாயில்ல அப்புறம் "இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்." னு ஒரு பஞ்ச் வச்ச பாரு,அந்த நேர்மை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப புடிச்சிருக்கு.

கண்மணி/kanmani சொன்னது…

@Siva
எலே தம்பி சிவா இப்ப லேட்டஸ்டா வந்த N97 ல இருக்க 5 MP CARL zeiss camera மட்டமா?
இல்லை E71 ல இருக்க 3.2 MP CARL zeiss camera மட்டமா?
மொபைல்ல இது விட அதிகமா 8 அல்லது 10 மெகா இருக்கா இருந்தாலும் அது 3G சப்போர்ட் பண்ணுதா?
செல்போன் டவருக்கு கீழே நின்னாலே சிக்னல் கிடைக்காத Bsnl ,3G டவரை இன்னும் மேம்படுத்த வேணும் தம்பி.
ஆடாத் தெரியாம மேடை சரியில்லன்னு சொல்லக் கூடாது [தமாஷுக்கு]

அது சரி G டாக் இல்லாட்டி யாஹூ சாட்ல வீடியோ எப்படித் தெரியுது?இத்தனைக்கும் ஹை ஸ்பீட் பிராட்பேண்ட் wi-fi மோடம்தான்.
மேலை நாடுகளை விட டெக்னாலஜியில் நாம் இன்னும் பின் தங்கித்தான் இருக்கோம்.

Jerry Eshananda சொன்னது…

//இனி அயித்தான் வெளியூரிலிருந்து புடவை வாங்கும் போது இங்கிருந்தபடியே பார்த்து கலர் டிசைன் செலக்ட் செய்யலாம்.//
விட மாட்டீங்களே...எங்க பாடு இனி அதிகம் திண்டாட்டம் தான்...

சுடுதண்ணி சொன்னது…

3Gயுடன் கொண்டாடுங்கள் :). தலைப்பை மிகவும் ரசித்தேன்!

கண்மணி/kanmani சொன்னது…

@ஜெரி ஈசானந்தன்.

ஆரஞ்சை சிகப்புன்னும் நீலத்தைப் பச்சையின்னும் வாங்கி வரும் கொடுமை எங்களுக்கில்ல தெரியும்..இனி விட மாட்டோம்ல:)))))))))

கண்மணி/kanmani சொன்னது…

@சுடுதண்ணி

ஹி..ஹி..ரொம்ப யோசனையோட தயங்கித்தான் பேர் வச்சேன்..


தேங்க்ஸ் மிஸ்டர்.ஹாட் வாட்டர்

பனித்துளி சங்கர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி !!

Radhakrishnan சொன்னது…

:) மிகவும் அருமை. சுடிதார் நிறம் சொல்லச் சொல்லிருந்தாங்க, தெரியாம போச்சே

கண்மணி/kanmani சொன்னது…

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றிங்க

vidivelli சொன்னது…

good.......
very nice.........

கண்மணி/kanmani சொன்னது…

@V.Radhakrishnan
என்னாப் போங்க டவர் இருக்கிற எடத்துலதான் வொர்க் ஆகுது.

Unknown சொன்னது…

iPhone வேலைசெய்யுமா? மாத கட்டணம்?

நன்றி!

கருத்துரையிடுக

லேபிள்கள்

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1) reverse/flip text விளையாட்டு (1)