மொத்தப் பதிவுகளும் இங்கே

காதலுக்கும் நிறமுண்டு



நினைவுகளின் அலைக்கழிப்பில்
உறக்கம் தொலைத்த
இரவுகளின் நீட்சி
விழிகளில்
தீட்டிய வரிகளில்

பிரிவின் வெம்மையில்
இதயத்து வேதனை
 ஆறாய்ப் பெருக
அழுகையில் மிதக்கும்
கண்களில்

தனிமையின் நெருக்கத்தில்
தீண்டும் விரல் விலக்கி
மூக்குநுனி வரும்
பொய்க் கோபத்தில்

சகலமும் நீயெனக்
காதலாகிக் கசிந்துருக
கன்னங்களில்
மய்யம் கொள்ளும்
நாணத்தில்

எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின்  நிறமென்றானது

17 மறுமொழிகள்::

LK said...

arumayaga ullathu
ungalai patthi solli iruken kandu pidinga

http://www.karthikthoughts.co.cc/2010/04/blog-post.html

அகல்விளக்கு said...

ஆஹா....

கலக்கிட்டீங்க...

அருமையான கவிதை...

பிசிறில்லாமல் உள்ளத்தை அள்ளுகிறது...

:-)

அஹமது இர்ஷாத் said...

ஆஹா கவிதை பிரமாதம்..

சந்தனமுல்லை said...

:-)

கண்மணி/kanmani said...

நன்றி
அகல்விளக்கு
அஹமத் இர்ஷாத்
முல்லை

சின்ன அம்மிணி said...

//எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின் நிறமென்றானது//

அழகா இருக்குங்க கண்மணி டீச்சர்

அமைதிச்சாரல் said...

ஆஹா..கலக்கியிருக்கீங்க கண்மணி மேடம்..

Chitra said...

எல்லாத் தருணங்களிலும்
இளஞ்சிவப்பே
காதலின் நிறமென்றானது


......அப்புறம், Fair and Lovely க்கு என்ன வேலை? ஹி,ஹி,ஹி,.... மிகவும் அருமையான கவிதை.

அக்பர் said...

கவிதை அருமை.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

V.Radhakrishnan said...

கவிதை வெகு சிறப்பாக இருக்கிறது.

புதுகைத் தென்றல் said...

:)

விஜய் said...

ரொம்ப ரொம்ப பிடித்தது சகோதரி

வாழ்த்துக்கள்

விஜய்

அப்பாவி தங்கமணி said...

Cute கவிதை... நல்ல இருக்குங்க கண்மணி

அபி அப்பா said...

என்ன டீச்சர் "நீட்சி" மய்யம்"ன்னு ஒரே பின்னவீனத்துவ வார்த்தையா கொட்டிகிடக்கு கவிதையிலே!! சூப்பர் போங்க!

Kousalya said...

இப்பதான் உங்கள் பதிவை பார்க்ககூடிய வாய்ப்பு கிடைத்தது, உடனே தொடர தொடங்கி விட்டேன். மிகவும் பயனுள்ள பதிவுகள். எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி. கவிதை அருமை வாழ்த்துக்கள்!

Kousalya said...

உருப்படியான பதிவுகளுக்கு ஏன் அதிக பின்னூட்டம் வருவது இல்லை. இது என் ஆதங்கம் கண்மணி. உங்கள் பதிவு பலருக்கும் பிரயோஜனம் என்பதை மறுக்க முடியாது.

Post a Comment