PAGE LOAD TIME

ஜெயிக்கப் போவது யாரு..[கண்மணியின்] சுப்பிரமணியா?[அபிஅப்பாவின்] டைகரா??

ரங்கமணி அந்த 'டாக் ஷோ'[Dog Show] மேட்டர சொன்னதிலிருந்து வீடே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது.பிச்சுவும்,கிச்சுவும் முடிவே பண்ணிட்டாங்க ஜெயிக்கப் போறது சுப்பிரமணிதான்னு.அடுத்தவாரம் நடக்கப் போவதாக இருந்த 'செல்ல பிராணி'களுக்கான போட்டிதான் அது.போட்டிக்கான அப்ளிகேஷன் பார்ம் வாங்கி சுப்பு போட்டோவோடு பார்ட்டிசிபண்ட் கையெழுத்துப் போட்ற இடத்துல சுப்புவோட முன்னங்கால் கால் விரல்ல மை தடவி 'கால் நாட்டு' வச்சி வெற்றிகரமாக அனுப்பியாகி விட்டது.
இந்த நேரத்துலதான் ஒரு பிரச்சினை.'செல்லப் பிராணின்னு' தானே போட்டி நாங்களும் எங்க செல்லங்களோட வருவோம்னு 'அணில்' கவிதாவும்,'யானை பொன்ஸும்' போர்க் கொடி தூக்கி கோர்ட்டுல இடைக்காலத் தடை வாங்கிட்டாங்க.ஆனா ஜட்ஜ் 'பைரவ நாய்க்கர்' அந்த மனுவ தள்ளுபபடி செஞ்சி,ஒன்லி பார் டாக்ஸ் னு பேர மாத்தச் சொல்லி உத்தரவு போட்டுட்டார்.
அப்பாடா ஒரு வழியா பிரச்சனை ஓஞ்சதுன்னு பார்த்தா, அபி அப்பா டைகர போட்டிக்கு அனுப்பறதா நியூஸ் வருது. மணத்துல தான் அடிச்சி நம்மள ஒன்னுமில்லாம செய்யறாருன்னா இங்கியுமான்னு கவலை.சரி ஆணி புடுங்கறத விட்டுட்டு இவரு எங்க இங்கிட்டு வரப் போறாருன்னு நிம்மதியா நெனச்சப்போ அபிஅப்பாகிட்டயிருந்து ஒரு மெயில்
அன்பு சகோதரி கண்மணிக்கு ன்னு போட்டு அவரு வர முடியாததால அபி அம்மாவையும்,அபி பாப்பாவையும் டைகரோட அனுப்புவதாக சொல்றாரு.அபி பாப்பான்னதும் நமக்கு அடி வயிறு கலங்கிப் போச்சு.ஐயோ இவரு அதுகிட்ட மாட்டி படற பாடுதான் எல்லோருக்கும் தெரியுமே நம்மாள ஆகாது சாமீன்னுட்டு,அபியை எக்சாம் டையத்தில் அனுப்ப வேண்டாம். நானே டைகர பார்த்துக்கிறேன்னு பதில் மெயிலினேன்.
சுப்பிரமணி ஜெயிக்குதோ இல்லையோ டைகர தோக்கடிக்கிறதுன்னு மனசுக்குள்ள முடிவு செஞ்சிட்டேன்..
டெல்லியிலேருந்து சென்ஷி போன்பண்ணி அட்வான்ஸ் வாழ்த்துச் சொன்னார்.[ஆமாம் இதேபோல் அபி அப்பாக்கும் சொல்லியிருப்பார் தெரியாதா]
அப்பத்தான் இன்னொரு நியூஸ் தம்பி 'கோபிநாத்' சொல்லிச்சி.'அக்கா போட்டியக் கேள்விப் பட்டு 'துளசி அக்கா'வும் அவங்க செல்லத்த அனுப்பறாங்கன்னுட்டு'
மறுபடியும் கோபிகிட்ட இருந்து நியூஸ்.போட்டியில பங்கேற்க அவுஸ்திரேலியா,யு.எஸ்,கனடா,நார்வே,சிலோன்,லண்டன்,பாரிஸ் ல இருந்து எல்லாம் செல்லங்கள் வரத் துடிப்பதால் இந்தியன் ஏர்லைன்ஸ்,'DOGS SPECIAL'அப்டீன்னு ஒரு ஸ்பெஷல் பிளைட் அனுப்பி எல்லோரையும் இங்க கொண்டுவராங்களாம்.
யாரு வந்தா என்ன வெற்றி சுப்பிரமணிக்குதான் நெனச்சப்பதான் எல்லா நாட்டுல இருந்தும் வரும்போது நாம அனுப்பாட்டி நமக்கு மரியாதை இல்லைன்னு சொல்லி துபையிலிருந்தும் ஒரு நாய் அனுப்ப 'தம்பி'[உமாகதிர்] சதி திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்.
கோபிகிட்ட கேட்ட போது,'கோச்சுக்கிடாதீங்க யக்கா அது சும்மா தெரு நாய் தான் ஒரு டிரெய்னிங்கும் இல்ல.தம்பி வூட்டாண்டயே படுத்திருக்கும்.ஏதோ அனுப்பனுமேன்னு கணக்குக்கு வருதுன்னு' ஆறுதல் சொல்லிச்சு.
போட்டி நாளும் நெருங்கிகிட்டு இருந்தது.டைகர் வந்து சேர்வதற்குள் சுப்பிரமணிக்கு எல்லா வித்தையையூம் கத்துக் குடுத்துடணும்னு நானும் புள்ளைங்களும் முடிவு பண்ணோம்
போட்டிக்கு ரெண்டுநாள் முன்னாடி டைகர் வர சேதி வந்து மாலை மரியாதையோடு ஸ்டேஷனுக்குப் போய் [அண்ணன் வூட்டு நாயாச்சே] அழைத்து வந்தோம். [யப்பா டைகரப் பார்த்தே அபிபாப்பா எப்படின்னு தெரிஞ்சிக்கிலாம்.என்னா ஒரு கெத்து ஒரு கெட்டப்பு].
டைகர் வந்ததிலிருந்து அபி அப்பாகிட்டயிருந்து ஒரே போன் 'மிஸ்டு கால்தான்'.டைகர் சாப்பிட்டுச்சா?,வாக்கிங் போச்சா?பெடிகிரி குடுத்தமா?ன்னுட்டு ஆயிரம் கேள்வி.இதுல ஒவ்வொருமுறையும் டைகரோட வேறு பேசறது.டைகர் காதுகிட்ட போன் ரிசீவர வச்சா இது 'வள் வ்ள்'ன்ன அந்தபக்கம் அபிஅப்பா 'லொள் லொள் 'ன்ன போன் பில் கிர்ர்ருன்னு ஏறும்.அவருக்கென்ன ஒன்லி மிஸ்டு கால்தானே.
ஒரு வழியா போட்டி நாளும் வந்தது.சுப்பு,டைகர்,பிச்சு,கிச்சு புடை சூழ போட்டி நடக்கற எடத்துக்கு வந்தோம்.
கோபி அனுப்பன 'நோஞ்சான்' [சோனியாம் பேரு நல்லப் பொருத்தம் தான்]என்னைப் பார்த்ததும் 'லொள்'னு ஒரு புன்னகை செய்தது. கோபிதம்பி சொல்லிவிட்டுச்சோ?பாவமாக இருந்தது நோஞ்சானையும் கோபியையும் நினைத்து.
போட்டியின் முதல் சுற்று ஆரம்பித்தது.ஆடை, அலங்காரச் சுற்று.முதல் பரிசு சொல்லணுமா நம்ம சுப்பிரமணிக்குத்தான் [போட்டோ பார்த்திருக்கீங்கல்ல] 2வது டைகருக்கும் மூணு நாலு வேறு யாருக்கோ.சோனிக்கு ஆறுதல் பரிசாம்.[அடக் கஷ்டமே]
இரண்டாவது சுற்று சாகச சுற்று.டைகர் அபிபாப்பாகிட்டயிருந்து கத்துகிட்ட 'குரு வணக்கத்தோட' நாட்டியம், குட்டிக்கரணம்,குச்சிப்புடின்னு சகல வித்தைகளையும் எடுத்து விட்டு முதலில் வந்தது.நம்ம சுப்பிரமணி 'மக்குணி' புசுபுசுன்னு ஒடம்பு இருக்கிற அளவு விஷயமில்ல.ஏதோ குட்டிக் கரணம் போட்டு இரண்டாமிடம்.சோனி வழக்கம்போல மூன்றாமிடம்.]
கடைசி சுற்று ரன்னிங் ரேஸ்.இதுல அதிகம் ஸ்கோர் பண்ணாத்தான் பரிசு கிடைக்கும்.
ரெண்டு சுற்றுல வாங்கின ஸ்கோர்படி டைகரும்,சுப்புவும் 'டை அப்'பில் இருந்ததால் எனக்கு ஏக டென்ஷன்.
ரன்னிங் ரேஸ் ஆரம்பிச்சிட்டுது.ட்ராக்ல வந்து ஒவ்வொன்னா நிக்கச் சொல்லி டிரெய்னர் விசில் அடிக்க சுப்புவும்,டைகரும் தான் ஆஜர்.பிளைட்டுல வந்த டயர்டுல மத்ததெல்லாம் 'கொர்கொர்ரு'ன்னு குறட்டை விட்டு தூங்க,துளசியக்கா வீட்டுது இவ்ளோ தூரம் வந்துட்டம் பரிசு கிடைக்காட்டியும் ஊர் சுற்றிப் பார்ப்பம்னுட்டு ஒரு 'கால் டாக்ஸி' புடிச்சி கெளம்பிடுச்சி.[அக்கா கோச்சுக்கிடாதீங்க]
கோபியோட சோனி,டைகர் பரத நாட்டியம் ஆடும்போது மிதிச்ச மிதியில கால்ல அடிபட்டு நாக்கால தடவி விட்டுக் கொண்டு,'போங்கடா நீங்களும் உங்க்க போட்டியும் னு ' வேதனையில் இருந்தது.
டைம் ஆகவே போட்டியாளர் விசில் ஊத ரன்னிங் ரேஸ் தொடங்கிடுச்சி.சுப்பு கமான் ஹரி யப் ன்னு பிச்சு,கிச்சும் கத்த சுப்பு ஓடவேயில்லை.
அபி அப்பா [காசு குடுத்து செட்டப் பண்ண ஆளுங்க ] கோரஸா 'கமான் டைகர்,கமான் டைகர்'னு கத்தியும் டைகரும் ஓட வில்லை.ஸ்டாப் வாட்சில் நேரம் மட்டும் ஓடிக் கொண்டேயிருக்கிறது.ரெண்டும் ஏன் இப்படி பண்ணுதுன்னு நான் மண்டையைப் பிய்த்துக் கொள்ள,
வாக்கிங் ஸ்டிக்கோட போட்டிய பாக்க வந்த ஒரு தாத்தா குறுக்கப் படுத்திருந்த 'சோனிய' 'ச்சீப்போ' ன்னு ஒரு தட்டு தட்ட கால்ல அடிபட்ட வலியோடு ஸ்டிக் அடியும் விழ சோனி வேகமாக ..மிக வேகமாக ....ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தொட்டே விட்டது!!!!
பிறகென்ன 'DOG OF THE SHOW' சோனிதான்னு என் வாயால சொல்லணுமாக்கும்.
அழுகின்ற பிச்சுவையும்,கிச்சுவையும் சமாதானப் படுத்த முடியாமல் ஏன் இப்படியாச்சின்னு டிரெய்னரிடம் கேட்க அவர் டைகரையும்,சுப்புவையும் அழைத்து,'லொள்ள' அவற்றின் பதில் 'லொள்ளலில்' புரிந்து கொண்டது இதுதான்.
சுப்புக்காக,டைகரும் டைகருக்காக சுப்புவும் விட்டுக் கொடுத்தார்களாம்.ரெண்டே நாளில் அண்ணன் ,தம்பி மாதிரி பழகிட்டாங்களாம்.அடப் பாசக்கார நாய்களா
நாசமாப் போச்சு உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லையா? இங்கனதான் காட்டணுமா?
நானாச்சும் பரவாயில்லை.அபி பாப்பா கிட்ட ஒருத்தர் என்ன பாடு படப் போறாரோ பாவம்.

[அன்புத் தம்பி கோபிக்கு பரிசாக இந்த பதிவு [காசு பணமா குடுக்கப் போறோம் என்னங்க நான் சொல்றது]

45 மறுமொழிகள்::

சென்ஷி சொன்னது…

இந்த பதிவில் என் பெயரை சேர்க்காததால் நான் இந்த முன்னூட்ட பதிவில் இந்த பின்னூட்டத்தை புறக்கணிக்கிறேன் :))

அபி அப்பா சொன்னது…

நான் ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சு சிரிச்சேன்:-))))))

MyFriend சொன்னது…

அதுக்குள்ளே எப்படிக்கா டாண்டான்னு ரெண்டு பதிவு?

அபி அப்பா சொன்னது…

சகோதரி மங்கை வீட்டு ஜூலியை ஆட்டைக்கு சேர்க்காததால் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் ஒரு மாபெரும் படை வருகிறது;-))

MyFriend சொன்னது…

உங்க ச்சுப்ரமணியோட பேரை மாத்திட்டீங்களா? வழக்கமா ச்சுப்ரமணிதானே! நூமரோலிஜி படி சுப்ரமணின்னு மாத்திட்டீங்களோ?

கண்மணி/kanmani சொன்னது…

கோச்சுக்கிடாதேயும் சென்ஷி [தம்பியா?அண்ணனா?]முன்னமே ஒரு பதிவுல ஒம்ம பேரு சேத்துட்டேனே.
சரி இந்த பதிவுலயும் சேர்த்துட்டேன் எங்கேன்னு கண்டு புடிங்க.[நெசத்தத்தான் சொல்றேன்]

MyFriend சொன்னது…

//போர்க் கொடி தூக்கி கோர்ட்டுல இடைக்காலத் தடை வாங்கிட்டாங்க//

ஹூம். இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. எல்லாருமே என்னையே மாட்டி விடுறாங்க.

பொற்கொடி, கண்மனி அக்கா கிட்ட இந்த "போர் கொடி" மேட்டரை நான் சொல்லலை...

கண்மணி/kanmani சொன்னது…

மை பிரண்ட் அக்கா 50 நெருங்கிட்டிருக்கேன் [வயசு இல்ல தாயீ] சீக்கிரம் 50 போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கப் போறேன்.ஹி..ஹி

கண்மணி/kanmani சொன்னது…

அபி அப்பா எனக்கு மற்றவர்கள் செல்லம் பேரு தெரியாததால் மொத்தமா பிளைட் அனுப்பி உள்நாடு வெளிநாட்டிலிருந்து வரவக்கச் சொல்லிட்டேனே.

MyFriend சொன்னது…

//அபி அப்பாகிட்டயிருந்து ஒரே போன் 'மிஸ்டு கால்தான்'.//

மிஸ்டு காலை போல்டு பண்ணி சொல்றதுல்ல ஏதோ உள்குத்து இருக்குறாப்புல தெரியுதே! அபி அப்பா, கொஞ்சம் என்னனு வந்து பார்த்துட்டு போங்க..

நாராயணா.. நாராயணா! :-P

அபி அப்பா சொன்னது…

சென்ஷி "சின்னதம்பி".

MyFriend சொன்னது…

//அக்கா 50 நெருங்கிட்டிருக்கேன்//

கொஞ்ச நேரத்துல ஆடிப் போயிட்டேன்.. என்னனு கூப்பிடலாம்ன்னு லிஸ்டே போட்டுட்டேன்.. (ஆண்டின்னுதான்.. ஹீஹீ)

அப்புறம்தான் அடுத்த லைன் படிச்சாஅ, மேட்டர் உப்பு சப்பில்லாம போயிடுச்சு! :-(

MyFriend சொன்னது…

//அபி பாப்பா கிட்ட ஒருத்தர் என்ன பாடு படப் போறாரோ பாவம்.//

அதுக்கு கவலையே இல்லை அக்கா. அவரு கடை தெருவுல ரெண்டு டைகர் பிஸ்கட் வாங்கி அபிக்கிட்ட டைகர் டாக் ஷோல ஜெயிச்சதா பீலா விட்டுக்குவாரு.. ஹீஹீ :-)))

சென்ஷி சொன்னது…

//டெல்லியிலேருந்து சென்ஷி போன்பண்ணி அட்வான்ஸ் வாழ்த்துச் சொன்னார்.[ஆமாம் இதேபோல் அபி அப்பாக்கும் சொல்லியிருப்பார் தெரியாதா]//

உங்க கடமையுணர்ச்சிக்கு எல்லையேயில்லாம போயிடுச்சு.
நல்லவேளை!! போன்ல வாழ்த்து சொன்னதோட என் பேர விட்டுட்டீங்க. உங்க சுப்ரமணியோட செல்லப்பேருனு என் பேர வைக்காத வரைக்கும் சரிதான். :))

சென்ஷி

MyFriend சொன்னது…

என்னங்க? என்னுடைய சில பின்னூட்டங்களை காணோம்? filter பண்ணி தூக்கிடீங்களா?

கண்மணி/kanmani சொன்னது…

மை பிரண்ட் சீக்ரெட்ட இப்படி ஒடக்கச் சொல்றீங்களே.ஒவ்வொரு பின்னூட்டமா எடுத்துவுட்டாத்தான் முகப்புல ஜொலிக்க முடியும் [அபி அப்பா வழிய நானும் பாலோ பண்றன்.ஹி.ஹி]

கண்மணி/kanmani சொன்னது…

அபிஅப்பா நான் இன்னும் ஒரு பதிவுலக்கூட பாஸாகல[40 வாங்கல]
111 ன்னு கமெண்ட்.பட்ட நாமம்னு புரியுது.

Leo Suresh சொன்னது…

கலக்கிட்டீங்க கண்மணி
லியோ சுரேஷ்

MyFriend சொன்னது…

அப்பாடா! ஒரு வழியா எல்லா பின்னூட்டங்களும் வெளியாயிடுச்சு! ஒன்னொன்னும் வெளியாகி முடியிறதுக்குள்ளே 5 மணி நேரத்துக்கு மேலே ஆயிடுச்சு.. ஒரே டயார்டாகி போயிட்டேன் நானு..

(இந்த கமேண்ட் எத்தனை மணிக்கு வெளிவரபோகுதோ?) :-P

கண்மணி/kanmani சொன்னது…

நன்றி லியோ சுரேஷ்

கண்மணி/kanmani சொன்னது…

மை பிரண்ட் அடுத்த49 வது பதிவு உனக்கான பரிசு ஓகேவா?[ஹூம் எப்டியெல்லாம் ஆள் புடிக்க வேண்டியிருக்கு]

சென்ஷி சொன்னது…

//கண்மணி said...
அபிஅப்பா நான் இன்னும் ஒரு பதிவுலக்கூட பாஸாகல[40 வாங்கல]
111 ன்னு கமெண்ட்.பட்ட நாமம்னு புரியுது.//

ரொம்பவே குழம்பி போயிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

இந்த பின்னூட்டம் இதுல வரக்கூடாது... எதுல வரணும்னு தேடிப்பிடிச்சு மாத்துங்க :))

சென்ஷி

பெயரில்லா சொன்னது…

சரியான bore ! சிரிப்பே வரல

காட்டாறு சொன்னது…

சரி அத்த வுடு..... ச்சுப்ரமணிக்கு சரியா துன்ன குடுக்கல... அவுக அதனால தான் செயிக்கலன்னு இப்பத்தேன் டிரெய்னர் லொள்ளிட்டு பின்னங்கால் தலைல அடிக்க ஓடுறாக....... என்ன நடந்ததுன்னு உண்மைய இப்போ சொல்லுறீகளா இல்லையா...... ஏ ஆத்தா இது உனக்கே நாயமா?

Geetha Sambasivam சொன்னது…

யார் ஜெயிச்சா என்னங்க? உங்க தயவாலே நாங்க ஹெஹெஹ்ஹேனு சிரிச்சுக்கிறோமே? அது போதாதா?

நல்ல அருமையான ஓட்டம். ம்ம்ம், கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் தவிர்த்துவிட்டால் இன்னும் ஜொலிக்கும். வாழ்த்துக்கள்.

கண்மணி/kanmani சொன்னது…

வருகைக்கு நன்றி கீதா,காட்டாறு
சுப்பிரமணி தோத்ததுக்கு மேட்ச் பிக்ஸிங் தான் காரணம்னு சி.பி.ஐ சொல்லுது.

MyFriend சொன்னது…

//அடுத்த49 வது பதிவு உனக்கான பரிசு ஓகேவா?//

அம்பதாவதுல போட்டா உங்க பாதி சென்சுரிய நான் அடிச்ச மாதிரி இருக்குமே?

மை ஃபிரண்டின் மனசாட்சி: உனக்கு அவங்க பாவ பட்டு ஒதுங்குறதுக்கு இடம் கொடுத்தா, நீ அவங்க வீடே கேக்குறீயே! இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்..

கண்மணி/kanmani சொன்னது…

அனானி உங்க எண்ணம் சரியானதே.இது ரெண்டு பதிவர பத்தின பதிவு[கண்மணி,அபிஅப்பா]என்பதால் பொதுவானவங்களுக்கு புரியாமலோ,போர் அடிக்கவோ வாய்ப்பிருக்கு.ஏதேனும் கருத்து சொல்வதாக இருந்தால் வரவேற்கிறேன்.என் பதிவுகள் ஜனரஞ்சகமாகவும்,நகைச்சுவையாகவும் இருக்கவே விரும்புகிறேன்.

கண்மணி/kanmani சொன்னது…

கீதா மேடம் எழுத்துப் பிழைகள் அவசர டைப்பிங் காரணமாகவோ,அல்லது கொச்சையான ஸ்லாங்க் பயன்படுத்த முனைவதாலோ இருக்கலாம்.

ரவி சொன்னது…

///சகோதரி மங்கை வீட்டு ஜூலியை ஆட்டைக்கு சேர்க்காததால் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் ஒரு மாபெரும் படை வருகிறது;-))///

Julie Meet panna Ore Aaalu Nan thaan...Yappaa Soundu overdaaa Sameeee....!!!

Kanmani, Super comedy post, you are a Natural Comedy Writer...Enga poyiruntheenga :))))

கதிர் சொன்னது…

யெக்கா!

என்னதிது காமெடி, கவிதன்னு ஒரே கலக்கல்ஸ் ஆப் இந்தியாவா இருக்கு.

அடுப்படி பக்கமே வரதில்லன்னு ரங்கமணி போன் பண்ணி ஒரே அழுகாச்சி பண்ணிட்டாரு. பின்னூட்டத்தயெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் போய் கிச்சுவையும், பிச்சுவையும் சாப்பிட வைங்க.

கண்மணி/kanmani சொன்னது…

தம்பி பிச்சுவும் ,கிச்சுவும் உங்க மேல கோபமோ கோபமா இருக்காங்க.நீங்க அனுப்பன நோஞ்சான் சோனி ஜெயிச்சிட்டதுயில்ல அதான்.
ஆமா என்ன கேட்டிங்க அடுப்படியா?அது எங்க இருக்கும்?ரங்கமணி டிபார்ட்மெண்ட் தானே அது..ஹி..ஹி

கதிர் சொன்னது…

நோஞ்சான் சோனிய அனூப்பனதுக்கே இப்படின்னா, இன்னும் நல்ல கொழுத்த தோணிய அனுப்பியிருந்தேன்னா அம்புட்டு அள்ளி சாப்ட்டுட்டு வந்திருக்கும். அடுத்த தபா போட்டி வைக்கும்போது சொல்லுங்க. தோணீய ரெடி பண்றேன்.

ரங்கமணிகள் மீட்பு குழு விரைந்து வந்து அவரை காப்பாற்றும் என்பதனை உங்க ரங்கமணியிடம் தெரிவித்து விடுங்கள்.

கோபிநாத் சொன்னது…

யக்கா...எத்தனை நாளுக்கா இப்படி கொலை வெறியோட இருந்திங்க ;-)))

சிரிச்சு....சிரிச்சு பக்கத்துல இருக்குறவன் எல்லாம் ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சிட்டானுங்க ;-)))

கோபிநாத் சொன்னது…

\\கோச்சுக்கிடாதீங்க யக்கா அது சும்மா தெரு நாய் தான் ஒரு டிரெய்னிங்கும் இல்ல.தம்பி வூட்டாண்டயே படுத்திருக்கும்.\\

அய்யோ....என்னாது தெரு நாயா??? தம்பி உன் மனசு கஷ்டம் எனக்கு தான் தெரியும்......அது ஒன்னும் தெரு நாய்யில்ல...அது...."உலகே மாயம்....வாழ்வே மாயம்...பார்வதி ;-)))) புரியுதா!!!

கோபிநாத் சொன்னது…

\\ஏதோ அனுப்பனுமேன்னு கணக்குக்கு வருதுன்னு' ஆறுதல் சொல்லிச்சு.\\

கணக்குக்குன்னு வந்த எங்கள் சோனி செல்லத்தை கணக்கு பண்ண நினைத்த உங்கள் சுப்பிரமணியையும், மிஸ்டு கால் அபி அப்பாவின் டைகரையும் கண்ணாபின்னா வென கண்டிக்கிறேன் ;-))

கோபிநாத் சொன்னது…

\\இது 'வள் வ்ள்'ன்ன அந்தபக்கம் அபிஅப்பா 'லொள் லொள் 'ன்ன போன் பில் கிர்ர்ருன்னு ஏறும்.அவருக்கென்ன ஒன்லி மிஸ்டு கால்தானே.\\

அபி அப்பா உங்களுக்கு நாய் பாஷை எல்லாம் தெரியுமா....சொல்லவேல்ல ;-)))

கோபிநாத் சொன்னது…

\\பிறகென்ன 'DOG OF THE SHOW' சோனிதான்னு என் வாயால சொல்லணுமாக்கும்\\

யாரு முத ஆட்டத்துல முத பரிசு வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல கடைசி ஆட்டத்துல யாரு முத பரிசு வாங்குறங்கன்னு தான் முக்கியம்

இப்படிக்கு
சோனியா தலைமை ரசிகர் மன்றம்
துபாய்

கோபிநாத் சொன்னது…

\\[அன்புத் தம்பி கோபிக்கு பரிசாக இந்த பதிவு [காசு பணமா குடுக்கப் போறோம் என்னங்க நான் சொல்றது]\\

யக்கா...பதிவு முழுக்க கிழிகிழின்னு கிழிச்சுட்டு கடைசியில பரிசு கொடுக்குற பார்த்தியா.....நீ ரொம்ப நல்லக்கா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)))

பரிசுக்கு ரொம்ப நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்கா....நன்றிக்ககா....

கோபிநாத் சொன்னது…

\\அபி அப்பா said...
நான் ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சு சிரிச்சேன்:-))))))\\

சிரிச்சது போதும் உங்க டைகரு மிதிச்சி எங்க சோனிக்கு அடிப்பட்டுடுச்சி. அதுக்கு வைத்திய செலவுக்கு 1000 Dhs கொடுத்துட்டு அப்புறம் நல்லா சிரிங்க ;-))))

கோபிநாத் சொன்னது…

என் பின்னூட்டத்திற்கு பதில் சொல்லுங்கள் ;-))

துளசி கோபால் சொன்னது…

போட்டும், பரிசா நமக்கு முக்கியம்?
ஆம்மா............. போட்டி நடந்த இடம் டெல்லிதானே? :-)))))

கண்மணி/kanmani சொன்னது…

துளசியக்கா டெல்லியேதான் அதான் டெல்லி போட்டோல்லாம் போட்டு ஒரு பதிவே போட்டுட்டீங்களே ஆனா உங்க செல்லம் போட்டோ மிஸ்ஸிங்

கண்மணி/kanmani சொன்னது…

கோபி உனக்கு என்ன வேணும் அபிஅப்பாகிட்டயிருந்து 1000 ரியால் நஷ்டஈடா?.சோனி செயிச்ச பணத்துல என் கமிஷன் உண்டுயில்ல[இல்லையா?]அதுல கழிச்சிக்க.

Syam சொன்னது…

யக்கா..என்ன இருந்தாலும்..எங்க வூட்டு மணி வந்தத பத்தி சொல்லாமயே விட்டுட்டீங்க...மணி வீட்டுக்கு வந்து ரொம்ப பீல் பண்ணுச்சு :-)

கருத்துரையிடுக

லேபிள்கள்

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1) reverse/flip text விளையாட்டு (1)